(2911)

மின்னின் நிலையில--மன்னுயி ராக்கைகள்

என்னு மிடத்து இறை--உன்னுமின் நீரே.

 

பதவுரை

உயிர் மன்னு

-

ஆத்மா பொருந்தி வர்த்திக்கிற

ஆக்கைகள்

-

சரீரங்கள்

மின்னின்

-

மின்னலைக்காட்டிலும்

நிலையில்

-

நிலையுடையனவல்ல;

என்னும் இடத்து

-

என்று சொல்லுமளவில்

நீரே

-

நீங்களே

இறை

-

சிறிது

உன்னுமின்

-

ஆராய்ச்சி பண்ணிக் பாருங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைத் தவிர்த்த மற்ற விஷயங்களை விட்டு அவன் பக்கலிலே ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணப் பாருங்கொள் என்றார் கீழ்ப்பாட்டில்; அதுகேட்டவர்கள் ‘இது எங்ஙனே ஸாத்யமாகும்? நெடுநாளான வாஸநை பண்ணித் தொடர்ந்துவருகிற விஷயங்களை விட முடியுமோ? என்ன அவற்றின் குற்றங்குறைகளைக் காணவே நன்கு விடலாமென்கிறார் இப்பாட்டில்.

‘உயிர்மன்னு ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம் ‘மன் உயிர் ஆக்கைகள் மின்னின்னிலையில’ என்றும் அந்வயிக்கலாம். ஆத்மாக்கள் விஷயபோகங்களுக்கு ஆயதனமாகப் பற்றியிருக்கிற சரீரங்களானவை மின்னல் போலவுங்கூட நிலத்திராதவை என்றும், நித்யர்களான ஆத்மாக்கள் கொண்ட சரீரங்களானவை- என்றும் முறையே உரைத்துக்கொள்க. மின்னின் = மின்னல்போல; மின்னலைக்காட்டிலும்.

என்னுமிடத்து இறையுன்னுமின்நீரே = இந்த வியத்தை நீங்களே ஆராய்ந்து பார்க்கலாமே; இதற்காக ஒரு ஆசார்யோபதேசம் வேணுமோ? என்றவாறு.

பன்னீராயிர வுரையின்படிக்குப் பின்னடிகளின் கருத்தாவது- மின்னின்னிலையில் மன்னுயிராக்கைகள் என்று சொல்லும்படியாதலால் நீங்கள் இறை - ஸ்வாமியை, உன்னுமின் - மநநம் பண்ணுங்கோள் என்பதாம்.

 

English Translation

Fleetier than lightning, is the life of the body. Ponder a while on this matter yourself.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain