(2910)

வீடுமின் முற்றவும்--வீடுசெய்து உம்முயிர்

வீடுடை யானிடை--வீடுசெய்ம்மினே.

 

பதவுரை

முற்றவும்

-

(பஜந விரோதியான ஸாத்ய ஸாதனங்கள்) எல்லாவற்றையும்

விடுமின்

-

விட்டுவிடுங்கள்;

வீடு செய்து

-

அப்படிவிட்டு,

உம் உயி

-

உங்களுடை ஆத்ம ஸ்துவை

வீடு உடையான் இடை

-

மோக்ஷ நிர்வாஹகனான ஸ்வாமியிடத்திலே

வீடு செய்ய மின்

-

ஸமர்ப்பியுங்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைத் தவிர்ந்த மற்றெல்லா விஷயங்களையும் விட்டு எம்பெருமானது திருவடிகளிலே ஆத்மாவை ஸமர்ப்பியுங்கோளென்கிறார். “முற்றவும் வீடுமின்” என்று அடைவேசொல்லாயிருக்க, அப்படிச்சொல்லாமல், தொடங்கும்போதே வீடுமின் என்பானென் னென்னில்; ஒரு சிறு குழந்தை கையிலே ஒரு பாம்பைப் பிடித்துக்கொண்டு கிடந்தால் ‘போடு, போடு’ என்று சொல்லி, பிறகு பாம்பு’ என்னுமாபோலேயும், ஒருவன் வீட்டினுள்ளே கிடந்து உறங்காநிற்க வெளியிலே நெருப்புப்பற்றி எரியாநின்றால் ‘புறப்படு, புறப்படு’ என்று கோஷித்துவிட்டுப் பிறகு ‘நெருப்பு’ என்னுமாபோலேயும் முந்துற, விடுங்கோளென்கிறார்.

எதை விடுவதென்ன, முற்றவும் என்கிறார். அஹங்கார மமகாரங்களாலே தூஷிக்கப்பட்டவற்றிலே சிலவற்றை வைத்துக்கொண்டு சிலவற்றை விடுவதென்பது கூடாதே; முழுவதையும் விடவேண்டுமாதலால் முற்றவும் என்கிறார்.

உம் உயிர் வீடுடையானிடை = இதற்குப் பலபடியாகவும் பொருளுரைக்கலாம் உங்களுடைய உயிரையும் அதற்கு வீடாகிய சரீரத்தையும் தனக்குச் சரீரமாகவுடையனான பகவானிடத்தில் என்னலாம்; உங்களுடைய உயிரை வீடாகவுடையவான எம்பெருமானிடத்தில் என்னலாம். உம் உயிர்- உங்களாத்மாவை, வீடு- விடுதமிடத்தில், உடையானிடை- ஸ்வாமியிடத்தே. வீடு செய்மின்- என்னலாம் வீடுடையானிடை- வீடாகிய பரமபதத்தையுடையவனான எம்பெருமானிடத்தில், உம்முயிர் வீடு செய்மின் என்னலாம்.

“அநித்யமான சரீரத்திற்கு ஒரு நன்மை தேடிக்கொள்ளச் சொல்லுகிறேனல்லேன், நித்யமான ஆத்மவஸ்துவுக்கன்றோ நானொரு நன்மை தேடிக்கொள்ளச்சொல்லுகிறது” என்ற கருத்தும், “என் உயிர்க்கா நான் நன்மை தேடச் சொல்லுகிறேன், உங்கள் உயிர்க்கன்றோ” என்ற கருத்தும் ‘உம்முயிர்’ என்பதில் தோன்றும்.

‘வீடு செய்மினே’ என்றும் ‘வீடு இசைமினே’ என்றும் இரண்டு பாடல்களும் வியாக்யானங்களில் பரிக்ரஹிக்கப்பட்டுள்ளன; ‘வீடு இசைமினே’ என்றது- வீட இசையுங்கோள் என்றபடி. விட வேண்டியவற்றை விடாமற்போனாலும் விடவேணுமேன்கிற அபேக்ஷையையாவது நெஞ்சிற் கொள்ளுங்கோள் என்றவாறு. அபிமுக்யம் காட்டுகிறவளவிலேயே பரம ஸந்தோஷமடையுமியல்வினனான எம்பெருமானுக்கு இந்த சேதநன் விஷ்யாந்தரங்களை அறிவிடுவதிற்காட்டிலும், விட இசைவதுதானும் மகிழ்ச்சிக்குறுப்பாகும் என்க.

 

English Translation

Give up everything, surrender your soul to the Maker, and accept his protection.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain