(2832)

ஆயிழை யார்கொங்கை தங்கும்அக் காதல் அளற்றழுந்தி

மாயுமென் ஆவியை வந்தெடுத் தானின்று மாமலராள்

நாயகன் எல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்

தூயவன் தீதில் இராமா னுசன்தொல் லருள்சுரந்தே.

 

பதவுரை

மா மலராள் நாயகன்

-

லக்ஷ்மீபதியான

அரங்கன்

-

பெரிய பெருமாள்

எல்லா உயிர்கட்கும் நாதன் என்னும்

-

ஸகல ஆத்துமாக்களுக்கும் சேஷி என்று உபதேசிப்பவரும்

தூயவன்

-

பரமபரிசுத்தரும்

தீது இல்

-

எவ்வகைக் குற்றமுமில்லாத தவருமான

இராமாநுசன்

-

எம்பெருமானார்;

(என்னசெய்தாரென்றால்)

ஆய் இழையார் கொங்கை தங்கும் அக்காதல் அளறு அழுந்திமாயும் என் ஆவியை

-

அழகிய ஆபரணங்களணிந்த ஸ்த்ரிகளுடைய கொங்கைத் தடத்தில் தங்கும் ஆசையாகிற சேற்றிலே அழுந்தி) நசித்துப் போகிற என் ஆத்மாவை

தொல் அருள் சுரந்து வந்து இன்று எடுத்தான்

-

இன்று நிர்ஹேதுக க்ருபை பண்ணிவந்து உத்தரித் தருளினார்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  பகவானுடைய அவதார காலங்களில் திருந்தாத ஸம்ஸாரிகளும் எம்பெருமானார் காலத்தில் திருந்திவிட்டார்களென்று கீழ்ப்பாட்டில் கூறியதற்கு வேறு  த்ருஷ்டாந்தம் காட்ட வேணுமோ? என்னைத்திருத்திப் பணிகொண்ட விஷயமொன்றே போராதோ வென்பார் போலத் தம்மைத் திருத்தினதைச் சொல்லி ஆநந்தப்படுகிறார்.

 

English Translation

The pure faultless Ramanuja fought that Arangan, the lord of lotus dame Lakshmi is the husband of all souls.  Through boundless grace, he pulled me out of quagmire of love for women's breasts, and saved me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain