(2831)

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவனே

கண்ணுற நிற்கிலும் காணகில்லா, உலகோர் களெல்லாம்

அண்ணல் இராமா னுசன்வந்து தோன்றிய அப்பொழுதே

நண்ணரு ஞானம் தலைக்கொண்டு, நாரணற் காயினரே.

 

பதவுரை

எங்கள் மாதவனே

-

நமக்குநாதனான திருமால் தானே

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து

-

(இப்பூமியிலுள்ள மநுஷ்யாதி) யோனிகள் தோறும் அவதரித்து

கண்உற நிற்கிலும் காணகில்லா உலகோர்கள் எல்லாம்

-

எல்லாருடைய கண்ணுக்கும் தன்னை இலக்காக்கிக் கொண்டு நின்ற விடத்திலும் (அவனை நம்முடைய நாதனென்று) காண மாட்டாதிருக்க இவ்வுலகத்தாரெல்லாரும்

அண்ணல் இராமாநுசன வந்து தோன்றிய அப்பொழுதே

-

ஸர்வஸ்வாமியான எம்பெருமானார் இங்கே வந்தவதரித்தவுடனே

நண்ண அரு ஞானம் தலைக் கொண்டு

-

பெறுதற்கரிதான ஞானம் அதிகரிக்கப் பெற்று

நாரணற்கு ஆயினர்

-

ஸ்ரீமந் நாராயணனுக்கு சேஷப்பட்டனர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானுடைய அவதாரத்திற்காட்டிலும் எம்பெருமானாருடைய அவதாராமே சிறப்புற்ற தென்கிறார். எம்பெருமான் பலபலயோனிகளிற் பலவகைப்பிறவி பிறந்து கண்காண வந்துநின்று உபதேசங்களாலே ஸ்வஸ்வரூபத்தைக் காட்டிக்கொடுத்த விடத்திலும் யாரும் அவனை லக்ஷியம் பண்ணவில்லை; “அவஜாநந்தி மாம் மூடா:” (என்னை மூடர்கள் அவமானப்படுத்துகிறார்கள்) என்று அவன்றானே சொல்லிக்கொண்டு வருத்தப்பட வேண்டிற்றாயிற்று ஆகையாலே பகவானுடைய அவதாரம் ஸம்ஸாரிகளுடைய தெள்ளறிவுக்கு உறுப்பாகவில்லை. எம்பெருமானாருடை அவதாரமோ வென்னில்; பயன்பெற்றது. இவர் தாம் திருவவதரித்தவடனே எல்லாவுலகத்தாரும் ஆச்சரியமான ஞானத்தைப்பெற்று உஜ்ஜீவித்தார்கள் - என்றாராயிற்று.

 

English Translation

Even when the lord Madhava himself enters into every womb, takes birth and stands before our eyes, we are unable to see him, Whereas, by the singel Avatara of Ramanuja on Earth, all beings have access to the subtle knowledge to take them to the feet of Narayana.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain