(2830)

சேமநல் வீடும் பொருளும் தருமமும் சீரியநற்

காமமும் என்றிவை நான்கென்பர், நான்கினும் கண்ணனுக்கே

ஆமது காமம் அறம்பொருள் வீடுதற் கென்றுரைத்தான்

வாமனன் சீலன், இராமா னுசனிந்த மண்மிசையே.

 

பதவுரை

சேமம் நல்வீடும்

-

(அனைவர்க்கும்) க்ஷேமரூபமான சிறந்த மோக்ஷம்

பொருளும்

-

அர்த்தமும்

தருமமும்

-

தர்மமும்

சீர்ய நல்காமமும்

-

மிகவுஞ் சிறந்த காமமும்

என்ற இவை

-

ஆக இப்படி சொல்லப்பட்டுள்ள இவை

நான்கு என்பர்

-

நான்கு புருஷார்த்தங்கள் என்று (வைதிகர்கள்) கூறுவார்கள்;

நான்கினாம்

-

இந்த நான்கு புருஷார்த்தங்களுள்

காமம்

-

காமமாவது

கண்ணனாக்கே ஆமது

-

எம்பெருமான் விஷயத்திலேயே உண்டாமது;

அறம் பொருள் வீடு

-

தர்ம அர்த்த மோக்ஷங்கள் மூன்றும்

இதற்கு என்று

-

இந்தக் காம புருஷார்த்தததிற்கு சோஷபூதங்கள் என்று

வாமநன் சீலன் இராமாநுசன்

-

வாமநாவதாரம் செய்த பெருமானொடு ஒத்த சீலத்தை யடையரான எம்பெருமானார்

இந்த மண்மிசை உரைத்தான்

-

இவ்வுலகத்தில் அருளிச் செய்தார்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானார் இவ்வுலகத்தார்க்கு உபதேசித்தருளின அர்த்தங்களில் ஒரு அர்த்த விசேஷத்தை இப்பாட்டில் எடுத்துரைக்கின்றார்:- ஸகல சாஸ்த்ரங்களாலும் பிரதி பாதிக்கப்படுமவை தர்மம் அர்த்தம் காமம் மோக்ஷம் என நான்கு புருஷார்த்தங்களாம்; அந்த நான்கினுள் காமமென்பது பகவத்விஷய காமம்; விஷயாந்தரங்களைப்பற்றின காமம் சிற்றின்ப மாதலால் அது புருஷார்த்தமன்று; பேரின்பமாகிய பகவத் காமமே காமம். அதுவே புருஷார்த்தம். மற்ற மூன்று புருஷார்த்தமன்று; சொன்ன காமபுருஷார்த்தத்திற்கு சேஷப்பட்டவைகள்; காமமே ப்ரதாநசேஷியான புருஷார்த்தம் என்று உலகத்தாரெல்லார்க்கும் உபதேசித்தருளினர் எம்பெருமானார் என்றாராயிற்று.

சே மநல்வீடு மென்று தொடங்கி அறம் பொருள் வீடிதற்கு என்னுமளவும் எம்பெருமானாருடைய உபதேச வடிவம்

கண்ணுக்கேயாமது காமம் = காமக்ரோதங்களைக் கெட்டகுணமாகத் கூறியிருப்பது தகாத விஷயங்களில் காமம் கூடாதென்பதுபற்றி பகவத் விஷயத்தில் காமம்  சாஸ்த்ர விஹிதம். ஆழ்வார் =ஸுக்திகளில் இக்காமமே பொலியும்.

வாமநன் சீலன் = வாமணாவதாரம் செய்த எம்பெருமானாருடைய சீலம் போன்ற சீலத்தையடையவர் என்கை. ஒருவரும் அபேக்ஷியாதிருக்கத் தன்பேறாக எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்து திரிவிக்யாலே வெளியிடுபவர் எம்பெருமானார் என்கிறது.

 

English Translation

Ramanuja who took a vow of confidence gave this counsel to the world; The fourfold pursuits of life are principled living, acquisition of wealth, fulfilment of desire, and freedom from rebirth. Of these, desire must be cultivated solely for attaining Krishna, while the other three must subserve this purpose.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain