(2829)

பொருளும் புதல்வரும் பூமியும் பூங்குழ லாருமென்றே

மருள்கொண் டிளைக்கும் நமக்கு நெஞ்சே! மற்று ளார்த்தரமோ?

இருள்கோண்ட வெந்துயர் மாற்றித்தன் ஈறில் பெரும்புகழே

தெருளும் தெருள்தந்து இராமா னுசன் செய்யும் சேமங்களே.

 

பதவுரை

பொருள் என்றும்

-

த்ரவ்யம் என்று சொல்லிக் கொண்டும்

புதல்வர் என்றும்

-

புத்திரர்கள் என்று சொல்லிக் கொண்டும்

பூமி என்றும்

-

க்ஷேத்ரமென்று சொல்லிக் கொண்டும் (அர்த்த புத்திராதிகளையே விரும்பி)

மருள் கொண்டு

-

அறிவு கெட்டு

இளைக்கும் நமக்கு

-

வருந்திக் கொண்டு கிடக்கிற நமக்கு

இருள் கொண்ட

-

அஜ்ஞாநத்தோடு கூடிய க்ரூரமான துக்கங்களை

மாற்றி

-

போக்கடித்து

தன் ஈறு இல்பெருபுகழே தெருளும் தெருள்

-

தம்முடைய முடிவில் வாதசிறந்தகல்யாண குணங்களையே சிந்திக்கக் கடவதான ஞானத்தை

தந்து

-

அருளித்தருளி

இராமாநுசன்

-

எம்பெருமானார்

செய்யும் சேமங்கள்

-

செய்கிற க்ஷேமங்களானவை

நெஞ்சே

-

ஒ மனமே!

மற்று உளார் தரமோ

-

மற்ற பேர்களுக்குச் செய்கிற மாதிரியோ (அல்ல; விலக்ஷணம் என்ற படி.)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானாருடைய திருவருளாலே தாம் பெற்ற நன்மைகளை நினைத்து நினைத்து ஆநந்தமுள்ளடங்காமல் அவ்வாநந்தத்தை நெஞ்சோடே கூடி உலாவுகிறார். நெஞ்சே! - அன்னை அத்தன் என் புத்திரர் பூமி வாசவார் குழலாள் என்று மயங்கிப் புத்ரதாரக்ருஹ க்ஷேத்ரங்களுக்கு மேற்படி வேறொன்று மறியாமல் உடலுக்கே கரைந்து நைந்துகிடந்த நமக்கு அஜ்ஞாநங்களையும் அது காரணமாகவரும் பாவங்களையும் தொலைத்தருளித் தமது திவ்ய கீர்த்திகளையே அநவரதம் பேசும்படியான நிலைமையிலே நம்மைக் கொண்டு நிறுத்தினார் எம்பெருமானார்; இப்படியாக அவர் நமக்குச் செய்தருளும்  க்ஷேமங்கள் இவ்வுலகில் வேறு யார்க்காவது கிடைக்கக்கூடியதோ? நம்முடைய பாக்கியமே பாக்கியமன்றே என்றாராயிற்று.

மற்றுளார் தாமோ?  என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; இப்படிப்பட்டக்ஷேமங்களை நமக்கு எம்பெருhனார் தவிர வேறு யாரேனும் அளிக்கக் கூடுமோ? என்றும் இப்படிப்பட்ட க்ஷேமங்கள்  நமக்குத் தவிர வேறு ஆர்க்கேனும் கிடைக்கத் தகுமோ? என்றும்.

 

English Translation

O Heart! You have exhausted yourself running after illusory wealth, children, property, and wife as sources real happiness.  Ramanuja changed our life of darkness and despair and gave us the mind to understand his greatness.   Is there anyone else to match his abiding grace?

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain