(2828)

ஆக்கி யடிமை நிலைப்பித் தனையென்னை இன்று,அவமே

போக்கிப் புறத்திட்ட தென்பொரு ளா?முன்பு புண்ணியர்தம்

வாக்கிற் பிரியா இராமானுச! நின் அருளின்வண்ணம்

நோக்கில் தெரிவிரித் தால், உரை யாயிருந்த நுண்பொருளே.

 

பதவுரை

(ஸ்வாமிந்!)

என்னை

-

(நெடுநாளாக அஹங்காரியாய்க்கிடந்த) என்னை

இன்று

-

இன்றைக் தினத்தில்

ஆக்கி

-

ஒரு பொருளாக்கி

அடிமை

-

சேஷத்வத்தில்

நிலைப்பித்தனை

-

நிலைநிறுவத்தினீர்; (இன்று இப்படி செய்தருளின தேவரீர்)

முன்பு

-

முற்காலமெல்லாம்

அவமே போக்கி

-

வீணுகப் போக்கி

புறந்து இட்டது

-

வெளி விஷயங்சளிலே தள்ளிவிட்டு வைத்தது

என்பொருளா

-

என்ன நிமித்தாக?

புண்ணியர் தம்

-

(தேவரீரை இடைவிடாது அநுபவிக்கும்) பாக்கியசாலிகளுடைய

வாக்கில் பிரியா

-

வாக்கை விட்டுப்பிரியாத

இராமாநுச

-

எம்பெருமானாரே!

தெரிவு அரிது

-

அறிய முடியாததாயிரக நின்றது;

இந்த நுண் பொருள்

-

இந்த ஸுக்ஷ்மமான விஷயத்தை

உரையாய்

-

தேவரீரே அருளிச் செய்யவேணும்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  கூரத்தாழ்வானைக் கொண்டு அடியேனை இன்று திருத்திப் பணிகொண்ட தேவரீர் இதற்கு முற்காலமெல்லாம் இந்த சேஷத்வரஸத்தை அடியேனுக்கு ஊட்டாமல் வீணாக விஷயாந்தரங்களிலே அகல வைத்திருந்ததற்கு என்ன காரணம்? இன்று இங்ஙனே திருவுள்ளம் பற்றும்படியாக என்னிடத்தில் என்ன ஸுக்ருக முண்டாயிற்று? ஒன்றுமில்லை; அப்படியிருக்கச் செய்தேயும் தேவரீர் தம்முடைய நிர்ஹேதுக க்ருபையைக் கொண்டே யன்றோ இன்று ஆட்படுத்திக் கொண்டது. ஹா ஹா! இப்படியும் ஒரு க்ருபையுண்டோ? இவ்வருளின் திறத்தை அறிவாரார்! ஆறிந்த தேவரீரே அருளிச் செய்யவேணும் என்றாராயிற்று.

நிலைப்பித்தனை = முன்னிலை யொருமை வினைமுற்று அவம் - வீண். “இன்று என்னை ஆக்தி அடிமை நிலைப்பித்தனை; முன்பு அவமே போக்கிப் புறத்திட்டது என் பொருளா!” = இன்று ஸ்வீகரித்ததற்கும் இத்தனை நாள் ஒதுக்கிவைத்ததற்கும் என்ன காரணம்?

 

English Translation

O Ramanuja, praised by blessed ones! Today you have made me your servant, such is your grace, But why did you let me go my way and waste my life all these years? Alas I cannot understand the subtie sense in this, Pray tell me.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain