(2824)

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக் கலியை, நினைப்பரிய

பலத்தைச் செறுத்தும் பிறங்கிய தில்லை,என்

புலத்தில் பொறித்தவப் புத்தகச் சும்மை பொறுக்கியபின்

நலத்தைப் பொறுத்தது இராமா னுசன்றன் நயப்புகழே.

 

பதவுரை

இராமாநுசன் தன்

-

எம்பெருமானாருடைய

நயம் புகழ்

-

கல்யாணகுணங்களானவை

நிலத்தை செறுத்து உண்ணும் நீசம்

-

பூலோகத்தை ஹிம்ஹித்ததுத் தின்கிற நீசனான

கலியை

-

கலிபுருஷனாடைய

நினைப்பு அரிய பெலத்தை செறுத்தும்

-

இவ்வளவென்று நினை முடியாதபடி அளவற்றதான பராக்ரமப்தைத் தொலைத்தவளவிலம்

பிறங்கியது இல்லை

-

பிரகாசிக்கவில்லை;

(பின்னை எப்போது பிரகாசித்தன? என்னில்;)

என் பெய் வினை

-

என்னாலே செய்யப்பட்ட பாவங்களை

தென் புலத்தில்

-

யமலோகத்தில்

பொறித்த

-

எழுதிவைத்த

அப் புத்தகம் சும்மை

-

அந்த புஸ்தகக் கட்டுகளை

பொறுக்கிய பின்

-

கொளுத்திவிட்டபின்பு

நலத்தை பொறுத்தது

-

விளக்கம் பெற்றன.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  எம்பெருமானாருடைய ஞானம், சக்தி முதலிய திருக்கல்யாண குணங்கள் எப்போது பிரகாசித்தனவென்றால், இந்நிலவுலகத்தில் கலிபுருஷன் செங்கோல் செலுத்த முடியாதபடி அவனுடைய வலிமையைத் தொலைத்துக் கிருதயுக தர்மமே எங்கும் நடைபெறும் படி செய்தருளினவாதே “இவர் மஹா புருஷர்; அரிய பெரிய ஞான சக்திகனை யுடையவர்” என்று உலகத்தா ரனைவரும் போற்ற நேர்ந்ததனால் கலியின் கொடுமையைக் கெடுத்தது காரணமாகவே இவருடைய திருக்கல்யாண குணங்கள்; நன்றாக விளங்கின - என்பர் சிலர்; அது தகுதியல்ல; கலிதோஷத்தைப் போக்கினவளவிலும் எம்பெருமானாடைய திருக்குணங்கள் பொலிவு பெறவில்லை. பின்னை எப்போது பொலிவு பெற்றனவென்றால், எனது அளவற்ற பாவங்களையெல்லாம் சிந்திரகுப்தன் எழுதிவைத்திருந்த பெரிய புத்தகச் சுமையைக் கொளுத்தி விட்டு என்னை நிஷ்கல்மஷனாக்கி அடிமைகொண்டாரென்ற விஷயம் வெளிவந்த பிறகுதான் அவருடைய திருக்குணங்கள் ஆச்சரியமாக விளங்கின என்கிறார். இதனால் தம்முடைய பாவங்கள் ஸர்வசக் தனாலும் போக்க முடியாதவை என்பதும், கலியின் கொடுமையிற் காட்டிலும் கொடுமையிற் காட்டிலும் தமது கொடுமை வலிதாயிருந்ததென்பதும், இப்படி மஹா பாபிஷ்டாராயிருக்க தம்மை க்ஷமித்தருளி உஜ்ஜீவிக்கச் செய்தமையைக்கண்டு உலகத்தாரனைவரும் ஆச்சரியப்பட்டார்க ளென்பதும் தெரிவிக்கப் பட்டன.

 

English Translation

Even after the terrible Kali's pervasive influence of unimaginable strength was destroyed. Ramanajua's greatness did not become apparent; but when the account books of my post sins, maintained in Hell's office were destroyed, his greatness shone like the sun.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter



 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain