(2671)

இப்போதும் இன்னும் இனிச்சிறிது நின்றாலும்

எப்போது மீதேசொல் என்னெஞ்சே--எப்போதும்

கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்

மெய்கழலே ஏத்த முயல்.

 

பதவுரை

என் நெஞ்சே

-

எனது மனமே!

நம்மேல் வினை கடிவான்

-

நம்மிடத்திலுள்ள பாவங்களைப் போக்குவதற்காக

எப்போதும் கை கழலா நேமியான்

-

ஒருபோதும் கையை விட்டுப் பேராத திருவாழியை யுடையனான எமபெருமானுடைய

மொய்கழலே

-

அழகிய திருவடிகளையே

ஏந்த

-

அதிக்க

முயல் உத்ஸாஹப்படு;

-

 

இப்போதும்

-

இக்காலத்திலும்

இன்னம் இனி சிறிது நின்றாலும்

-

மேலுள்ள காலத்திலும்

எப்போதும்

-

ஆக எந்தக் காலத்திலும்

ஈதே சொல்

-

இதுவே (உனக்கு நான் சொல்லும்) ஹிதோபதேசமாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இப்போதும்.) முதற்பாட்டிலே தம்முடைய நெஞ்சை விளித்து அருளிச் செய்ததுபோலவே முடிவு பாட்டையும் நெஞ்சை நோக்கியுரைத்து முடிக்கிறார். பகவத் குணாநுபவத்தால்தான் உலகத்தார் யாவரும் போதுபோக்க வேணுமென்று கீழ்ப்பாட்டில் சொன்னேன்; அவர்கள் தங்கள் போதை எப்படி போக்கினாலும் போக்கிக் கொள்ளட்டும்; சூதாடியோ, சதுரங்கம் பொருதோ, களவாடியோ, கண்ணுறங்கியோ எவ்விதமாகவேனும் போரதைப் போக்கிக் கொள்ளட்டும்; அவர்களைப் பற்றி நமக்கென்ன கவலை? நெஞ்சமே! உனக்கு நான் சொல்லுவதைச் சிக்கனம் கேளாய்; இன்றைக்கோ நாளைக்கோ; இன்னும் பத்தெட்டு வருஷங்கள் கழித்தோ மற்றுமெப்போது நான் உனக்கு உரைப்பதானாலும் இந்த ஒருசொல்லையே சொல்லுவேன்; அந்தச் சொல் யாதெனில்- “நம்மேல்வினைகடிவான் எப்போதும் கைகழலாநேமியான் மொய்கழலே ஏத்த முயல்” என்பதே. அடியாருடைய விரோதிகளைத் தொலைப்பதற்காகவே “உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுடரொழியும் சங்கும், மழுவோடு வாளும் படைக்கலமுடைய மால்” என்றபடி திவ்யாயுதங்களை எப்போதும் தரித்திரா நிற்கும் பெருமானுடைய பரமபோக்கியமான திருவடிகளை ஏந்துவதற்கு உத்ஸாஹப்பட்டுக் கொண்டிருப்பதே உனக்கு எப்போதும் காரியமாகக் கடவதென்று நெஞ்சுக்குரைத்துத் தலைகட்டினாராயிற்று.

ஸ்ரீபட்டர் “எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினைகடிவான்” என்கிறவிதைத் திருவுள்ளம்பற்றி ஸ்ரீரங்கராஜஸ்தலத்தில் ******” = பாது ப்ரணதரக்ஷாயாம் விளம்ப மஸஹந்நிவ- ஸதா பஞ்சாயுதீம் பிப்ரத் ஸந: ஸ்ரீரங்கநாயக: என்றருளிச் செய்த ச்லோகம் இங்கு அநுஸந்தேயம்.

‘எப்போதும்’ என்பதை நான் காமடியிலே கூட்டி உரைக்கவுமாம் ‘எப்போதும் ஏத்த முயல்’ என்று.

“மொய்கழலே ஏத்து” என்னாதே “ஏத்த முயல்” என்கையாலே, பகவத் விஷயத்தை ஏத்திக் கரைகாண்பதென்பது இல்லை, ஏத்தவேணும் ஏத்தவேணும் என்கிற உத்யோக நிலைமையை எப்போதுமிருக்கும் என்பது காட்டப்பட்டதாம். ஆளவந்தாரும் “ஸ்தா ஸ்திதா. நோத்யமதோதிசோதே” என்றருளிச் செய்ததை ஸ்மரிப்பது.

கீழ்ப் பிரபந்தமாகிய திருவாசிரியத்திற் போலவே இப்பிரபந்தத்திலும் தம் திருநாமிட்டுக் கவிபாடுதல், பிரபந்தாத்யயநத்திற்குப் பலன் சொல்லுதல்  முதலியவற்றை விட்டருளினர்; நிர்ப்பந்தமில்லாமையாலே.

சொற்சுவையாலும் பொருட்சுவையாலும் மிகச் சிறந்த இந் திவ்வியப் பிரபந்தம் ஒருவாறு வியாக்கியானித்துத் தலைக்கட்டப்பட்டதாய்த்து.

 

English Translation

O heart of mine!  The Lord who permanently wields a discus rids us of our Karmas.  Always strive to praise his matching feet, I say this for now, later and forever.

 

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain