(2668)

வாழ்த்தி அவனடியைய்ப் பூப்பு னைந்து, நிந்தலையைத்

தாழ்த்திருகை கூப்பென்றால் கூப்பாது-பாழ்த்தவிதி,

எங்குற்றாய் என்றவனை ஏத்தாதென் னெஞ்சமே,

தங்கத்தா னாமேலும் தங்கு.

 

பதவுரை

அவன் அடியை வாழ்த்தி

-

“அப்பெருமானுடைய திருவடிகளை மங்களா சாஸநம்பண்ணி

பூ புனைந்து

-

(அத்திருவடிகளிலே) புஷபங்களைச் சாத்தி

நின் தலையை தாழ்த்து

-

உன் தலையை வணங்கு;

இரு கை கூப்பு

-

இரண்டு கையையுங்கொண்டு அஞ்ஜலிபண்ணு”

என்றால்

-

என்று சொன்னால்

உப்பாத

-

அப்படி செய்யாத

பாழ்த்த விதி

-

பாழும் விதியையுடைய

என் நெஞ்சமே

-

என்னுடைய மனமே!

அவனை

-

அந்த ஸர்வேச்வானை

எங்கு உற்றாய் என்று ஏத்தாது

-

‘எங்கேயிருக்கிறாய்’ என்று சொல்லியழைத்துத் துதியாமல்

தங்க ஆம் எனில்

-

தரித்திருக்கக் கூடுமாகில்

தங்கு

-

தரித்திரு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (வாழ்த்தியவண்டியை.) இனி எப்போதும் அயோக்யபாதையை நினைந்து பின் வாங்கலாகாதென்று நெஞ்சுக்கு உபதேசித்தார் கீழ்ப்பாட்டில் அப்படி பின்வாங்கி உயிர்தரித்திருக்க முடியுமாகில்  அப்படியே பின்வாங்கிக்கிட என்கிறாரிப்பாட்டில். இத்தால்- மனமொழிமெய்களென்னும் மூன்று காணங்களும் பகவத் விஷயத்தில் ஊன்றிக்காரியம் செய்யப்பெறாவிடில் தாம் தரித்திருக்க முடியாமையைப் பேசினாராகிறார்.

வாய்ப்படைத்தது பயன்படும்படி அவ்வெம்பெருமானுடைய திருவடிகளை வாழ்த்தியும், கைபடைத்தது பயன்படும்படி அந்தத் திருவடிகளிலே பூக்களைப் பணிமாறியும், தலை ஸபலமாம்படி அதனை அத்திருவடிகளிலே வணக்கியும் அஞ்ஜலிபண்ணு என்று நன்மையாகச் சொன்னால் அப்படி செய்யாதேயிருந்தும், “எங்கே காண்கேன் ஈன்துழாயம்மான் தன்னையான்” என்று அலற்றாமலிருந்தும் உயிர்தரித்திருக்கவல்லையெல், நெஞ்சே! உன் இஷ்டப்படியே இருந்திடு. ஸத்தை பெற்றிருக்கைக்காக இத்தனையும் செய்து தீர வேண்டியதேயாம் என்று குறிப்பித்தவாறு.

“இருகை கூப்பென்றால் கூப்பாத” என்றது நிகழ்காலத்திய நிலைமையைச் சொல்லுகிறதன்று; எதிர்காலத்தில் நேரக்கூடிய நிலைமையைச் சங்கித்துச் சொல்லுகிறபடி. அவனடியை வாழ்த்தாமலும் பூப்புனையாமலும் தலையைத் தாழ்த்தாமலும் இருகை கூப்பாமலும் ஸத்தைபெற்றிருக்க முடியாமையைச் சொன்னபடி.

“தங்கத்தானாமேலும்” என்றவிடத்து, தான்- அசை. தங்கு நல்- ஸத்தைப்பெறுதல்

 

English Translation

O Heart of mine, bend on self-destruction I say, "Praise the Lord, offer flowers, bow to his feet, and fold your hands in worship", but you will never do that, Go on, if you can be your own without calling, "O Lord, where are you?" do so.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain