(2667)

அயர்ப்பாய் அயராப்பாய நெஞ்சமே. சொன்னேன்

உயப்போம் நெறியிதுவே கண்டாய், - செயற்பால

அல்லவே செய்கிறுதி நெஞ்சமே! அஞ்சினேன்

மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.

 

பதவுரை

நெஞ்சமே

-

ஓ மனமே!

செயற்பால அல்லவே

-

செய்யத்தகாதவற்றையே

செய்கிறுதி

-

செய்ய முல்வாயென்று

அஞ்சினேன்

-

(உன்னைப் பற்றிப்) பயப்படுகின்றேன்;

மல்லர் நான் வல்வினளை வாழ்த்து

-

மல்லர்களின் ஆயுளை முடித்த கண்ணபிரானை மங்கவா சாஸநம் பண்ணிக்கொண்டிரு

உயபோம் நெறி இதுவே கண்டாய்

-

உஜ்ஜீவிக்கலாம் வழி இதுவே காண்;

அயர்ப்பாய்

-

(அப்பெருமானை) மறந்து கெட்டாலும் கெடு;

அயர்ப்பாய்

-

மறவாமல் நினைந்து வாழ்ந்தாலும் வாழ்;

சொன்னேன்

-

(உனக்கு நான் சொல்லவேண்டிய ஹிதத்தைச்) சொல்லி வைத்தேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (அயர்ப்பாய்.) கீழ்க்கழிந்த காலம்போலே இனிமேல் வரும் காலமும் பாழே போகாதபடி இப்போதுள்ள பகவத்குணநுபவம் தம்முடைய நெஞ்சுக்கு நிலைத்திருக்கும்படி ஹிதோபதேசம் பண்ணுகிறார்.

யோக்யதை யில்லாத நாம் எம்பெருமானை நெஞ்சால் நினைப்பதும் வாயால் துதிப்பதும் தலையால் வணங்குவதும் அவனுக்கு அவத்யம் என்று அயோக்யதாநுஸந்தாகம் பண்ணிப் பின்வாங்குதலில் ஆழ்வாருடைய திருவுள்ளம் அடிக்கடி ஊன்றுகிற வழக்கமுண்டே; அப்படி இன்னமும் உண்டாகப்பெறில் பகவத்குணாது பலம் முட்டுப்படுமேயென்று அஞ்சி நெஞ்சை நோக்கி,ஓ நெஞ்சே! அயோக்யனென்று பின்வாங்குகையிலே மறுபடியும் நீ இறங்கி விடுவாயோவென்று நான் மிகவும் அஞ்சுகின்றேன். இனி நீ அப்படி ஒருகாலும் செய்யலாகாது; இப்போது நாம் பகவத் குணானுபவம் செய்துகொண்டிருப்பதுபோலவே எப்போதும் செய்தும் கொண்டிருப்பதான் நாம் உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான வழியாம். மல்லர்களை மடித்த கண்ணபிரானை வாழ்த்துவதே நமக்குப் பணி; என்பேச்சை நீ ஆதரித்துக் கேட்பாயென்று நம்பி நான் இதை உனக்குச் சொன்னேன்; இந்த உபதேசத்தை நீ ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்தது வாழ்தியேல் வாழ்ந்திடு; மறந்தொழிந்து கெட்டுப்போதியேல் போயிடு- என்றாராயிற்று.

செயற்பால- செய்யக்கூடியவை; செயற்பால அல்ல- செய்யக்கூடாதவை; அயோக்யதாநுஸந்தாகட்பண்ணிப் பின்வாங்குதல் முதலியன. செய்கிறுதி அஞ்சினேன் = செய்வாயென்று பயப்படுகின்றேனென்கை. மல்லர்களை மடித்த வாலாறு கீழ் நாற்பத்தோராம் பாட்டிலுரையில் விரித்துரைக்கப்பட்டது. காண்க (பக்கம் -112)

 

English Translation

O Heart! you may remember the Lord or you may not; but what I fear is that you engage yourself in deeds which are not proper.  Praise the Lord who killed the mighty wrestlers. That is the only way to salvation.  I warn you.

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain