nalaeram_logo.jpg
(2665)

பகலிரா என்பதுவும் பாவியாது, எம்மை

இகல்செய் திருபொழுதும் ஆள்வர்,--தகவாத்

தொழும்பர் இவர், சீர்க்கும் துணையிலர் என்றோரார்,

செழும்பரவை மேயார் தெரிந்து.

பதவுரை

செழு பரவை மேயார்

-

அழகிய திருப்பாற் கடலிலே பொருந்திக் கண் வளர்ந்தருளும் பெருமான்,

இவர் தகவாதொழும்பர்

-

“இவ்வாழ்வார் நம்முடைய அருளுக்குப் பாத்திரமாகக் கூடாத நீசர்;

சீர்க்கும் துணை இலர்

-

சீர்மை பொருந்திய துணையை உடையவருமல்லர்”

என்று தெரிந்து ஓரார்

-

என்பதை ஊன்றி ஆராயாதவனாய்

பகல் இரா என்பதுவும் பாவியாது இருபொழுதும்

-

பகற்போது இராப்போது வாசியின்றியே எப்போதும்

இகல் செய்து

-

வலிகட்டாயப்படுத்தி

எம்மை ஆள்வர்

-

அடியேனை அநுபவியா நின்றான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (பகலிரா.) எம்பெருமானுடைய அநுக்ரஹம் தம் மேல் அல்லும்பகலும் அமர்ந்திருக்கிறபடியை அருளிச்செய்கிறார். எம்பெருமான் என்னுடைய ஸ்வரூப ஸ்வபாவங்களை நன்கு ஆராய்ந்திருப்பனாகில் என்னை ஒருபொருளாக நோக்குவதற்கே ப்ரஸந்தியில்லை; அவனுடைய திருவருளுக்கு இலக்காகமாட்டாத நீசன் அடியேன்; அவ்வளவேயோ? குணாநுபவம் பண்ணுவதற்குத்தக்க ஸஹயமுமில்லாதவனாயிருக்கின்றேன்; இப்படிப்பட்ட என்படிகளை எம்பெருமான் ஆராய்ந்திருப்பானாகில் என்னைக் கடாக்ஷிக்கவே மாட்டான்; இப்படிகளை ஆராயாமல், பகலென்று மிரவென்றும் பாராமல் எக்காலும் என்னை வலிகட்டாயப்படுத்தியிழுத்துத் தன் அநுபவத்தை எனக்குத் தந்தருளி என்னை அநுக்ரஹஞ் செய்கின்றான்- என்கிறார்.

இகல் செய்தல்- யுத்தம் பண்ணுதல்; எம்பெருமான் ஆழ்வாரோடு யுத்தம் பண்ணுகையாவது என்னென்னில்; தன்னுடைய குணங்களை அநுபவிக்குமாறு நிர்பந்தப்படுத்துதலாம். இவ்விடத்தில் வியாக்கியான ஸ்ரீஸூக்தி:- “தம்முடைய குணங்களாலே எடுப்பும் சாய்ப்புமாக யுத்தம்பண்ணி இரண்டுபோதும் ஆள்வர்; அம்புபட்ட புண்ணுக்கு மருந்தில்லையிறே.”

இவர் தகவாத் தொழும்பர் தொழும்பர், சீர்க்கும் துணையிலர் என்று ஓரார்- ‘தொழும்பர்’ என்று அடிமை செய்பவர்க்குப் பெயர்; நீசர்களே அடிமைசெய்ய உரியவராதலால் இங்குத் ‘தொழும்ப’ என்றது நீச ரென்றபடி. தகவு என்று தயவுக்குப் பெயர்; ‘தகவன்’ என்றால் ‘தயவுக்கு விஷயமாகக் கூடியவன்’ என்று பொருளாம்; ‘தகவாத் தொழும்பர்’ என்றது- தயவுக்கு விஷயமாகக் கூடாத நீசர் என்றதாயிற்று.

(சீர்க்கும் துணையிலர்.) ‘சீர்க்கும்’ என்றது துணைக்கு அடைமொழி; ‘சீர்மை பொருந்திய’ என்றபடி பகவத்கீதையிலே (10-9) ********  - மச்சித்தா மத்கதப்ராணா போதயந்த: பரஸ்பரம்- கதயந்தச்ச மாம் நித்யம் துஷ்யந்திசரமந்திச.” (இதன் பொருள்- நெஞ்சை நமக்கென்றே பறிகொடுத்து, அப்படியே நம்மைப் பிரிந்தால் தரித்திருக்கமாட்டாமல் பிராணனையும் நம் அதீனஞ்செய்து தாம் தாம் அநுபவித்த நம் குணங்களையெடுத்து ஒருவர்க்கொருவர் சொல்லிக்கொண்டு அப்படியே நாம் செய்த திவ்ய சேஷ்டிதங்களையுமெடுத்துப் பசிக்கொண்டு ஆநந்திக்கிறார்கள்.) என்றருளிச் செய்திருப்பதில், பகவத் குணங்களை ஒருவர்க்கொருவர் பேசிக்கொள்ளுதலும் ஒரு சிறந்த காரியமாகச் சொல்லப்பட்டுள்ளது; அப்படி பேசிக்கொள்வதற்குத் தாம் (ஆழ்வார்) துணைற்றவர் என்கிறார். இப்படியிருக்கச் செய்தேயும் எம்பெருமான் என்னை உபேக்ஷித்திடாமல் தனது நிர்ஹேதுக கருணையினால் குணாநுபவம் செய்விக்கிறானென்றாராயிற்று.

பரவை- ஸமுத்ரம்.

English Translation

The omniscient Lord reclining in the ocean will never consider anyone as lowly, underserving of grace, beyond redemption, Night and a day without end, he will give us the joy of service and accept us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain