nalaeram_logo.jpg
(2663)

உள் நாட்டுத் தேசன்றே! ஊழ்வினையை யஞ்சுமே,

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே,-மண்ணாட்டில்

ஆராகி எவ்விழிவிற் றானாலும், ஆழியங்கைப்

பேராயற் காளாம் பிறப்பு.

பதவுரை

மண் நாட்டில்

-

இந்த மண்ணுலகத்திலே

ஆர் ஆகி

-

எப்பிறவியிலே பிறந்தவராயினும்

என் இழிலிற்று ஆனாலும்

-

எப்படிப்பட்ட இழி தொழில்களையுடையவர்களாயினும்

ஆழி அம் கைபேர் ஆயற்கு ஆன் ஆம் பிறப்பு

-

திருவாழியை அழகிய கையிலேயுடைய ஸ்ரீகிருஷ்ண பகவானுக்கு அடிமைப்பட்டவர்களாகப் பிறக்கும் பிறவியானது.

உன் நாடு தேச அன்றே

-

பரமபதத்திள்ள தேஜஸ்ஸையுடையதன்றோ?

ஊழ் வினையை அஞ்சுமே

-

அநாதியான பாவங்களைக் குறித்து அஞ்ச வேணுமோ?

விண் நாட்டை

-

ஸ்வர்க்க லோகத்தை

ஒன்று ஆக

-

ஒரு பொருளாக

மெச்சுமே

-

விரும்பக்கூடுமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (உண்ணாட்டுத்தேசன்றே.) எவ்வகையான இழிகுலத்திற் பிறந்தவர்களானாலும் எவ்வகையான கெட்ட நடத்தைகளை யுடையவர்களானாலும் எம்பெருமானுக்கு அடிமைப்பட்டிருந்தலாகிற ஒரு குணம் உள்ளதாகில் அப்படிப்பட்டவர்களுடைய பிறப்பு  நித்ய ஸூரிகளின் திருமேயிபோலே மிக்க தேஜஸ்ஸையுடையதேயாம்; எப்படிப்பட்ட பாவங்களை அவர்கள் செய்திருந்தாலும் அவற்றுக்கு அஞ்சவேண்டியதில்லை; சுவர்க்க லோகத்திலுள்ள தேவர்களின் பிறவியிற்காட்டிலும் அவர்களுடைய பிறவி எவ்வளவோ சீர்மை பொருந்தியதாதலால் தேவபோனிப்பிறவியையும் இழிவாக நினைக்கவுரியது- என்று, பகவானுக்குத் தொண்டரயிருப்பாருடைய ஜன்மமே சிறந்த ஜன்மமென்கிறார் இப்பாட்டில்.

ப்ராஹ்மணஜாதியே சிறந்ததென்று பலர் ப்ரமித்திருப்பதுண்டாகையாலே அந்த ப்ரமத்தைப்போக்கித் தொண்டர்குலமே சிறந்த குலமென்கிறது இப்பாட்டு. பிராமண ஜாதியிற் பிறந்து வைத்தும் எம்பெருமானுக்கு அடிமைப்படாவில் அக்குலம் சண்டாள குலததிலும் நடை கெட்டதாம்; சண்டாளகுலத்திற் பிறந்து வைத்தும்  வலந்தாங்கு சக்கரத்தண்ணல் மணிவண்ணற்கு ஆளென்று உள்கலந்தார்களாகில் அவர்களே விண்ணுளாரிலுஞ் சீரியராவர்; ஆகவே ஜாதி அப்ரேயோஜகம்; பகவத் சேஷத்வமே ப்ரயோஜநம் என்றதாயிற்று. இவ்வர்த்தம் ஸ்ரீவைசகபூஷத்திலும் ஆசார்யஹ்ருதயத்திலும் நன்கு விசதமாகும். “தேவத்வமும் நிந்தையானவனுக்கு ஒளிவரும் ஜநிகள் போலே ப்ரஹ்மஜந்மமும் இழுக்கென்பார்க்குப் பண்டை நாளில் பிறவி உண்ணாட்டுத்தேசிறே” என்ற ஆசார்யஹ்ருதய ஸ்ரீஸூக்தி இவ்விடத்தில் அது ஸந்திக்கவுரியது.

உண்ணாட்டுத்தேச = எம்பெருமானைக் கண்ணெடுத்தும் பாராத பாவிகள் நிறைந்த இந்த லீலாவிபூதி புறநாடென்னும், பகவத் கைங்கர்ய ரஸிகர்கள் நெருங்கி அவனுக்கு அந்தரங்கமாயிருக்கிற நித்யவிபூதி உள்நாடென்றும் கொள்ளத்தகும். ‘ உள்நாட்டுத்தேக” என்றது - பாமபவத்தில் எம்பெருமானுடைய கைங்கரியத்திற்குத் தகுதியாகக் கொள்ளுகிற தேஹம்போலே சேஷவஸ்துவான ஆத்மாவுக்கு இழிபிறப்பும் தேஜஸ்கரம் என்றவாறு. ‘அணையவூரப்புனைய, அடியும் பொடியும்படப் பர்வத பவநங்களிலே ஏதேனுமாக ஜனிக்கப்பெறுகிற திர்யக் ஸ்தாவர ஜந்மங்களைப் பெருமக்களும் பெரியோரும் பரிக்ரஹித்து ப்ரார்த்திப்பவர்கள்” என்ற ஆசாரிய ஹ்ருதய ஸூந்தியும் இங்கு அநுஸந்தோம்.

ஊழ்வினையை அஞ்சுகமே?= எம் பெருமானுக்கு அடிமைப்பட்டிருக்கையாகிற ராஜகுல மாஹாத்மியத்தாலே எவ்வகைப்பட்ட பாவத்திற்கும் அஞ்ச வேண்டியதில்லை என்றபடி.

விண்ணாட்டை யொன்றாக மெச்சுமே? = இங்கு ‘விண்ணாடு’ என்ற பிரமன் முதலிய தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது ப்ரஹ்மாதி தேவர்கள் வாழும் உலகத்தைச் சொல்லுகிறது. ப்ரஹ்நாதி தேவர்களின் பிறவியிற் காட்டிலும் பகவத் பக்தர்களின் பிறவி சீரியது என்றபடி. அன்றியே, எம்பெருமானுக்கு அடிமைச்செய்து கொண்டு வாழப்பெறில், ப்ரஹ்ம பட்டம் இந்திர பட்டம் முதலிய எப்படிப்பட்ட பதவிகளும் ஒரு பொருளாகவே நெஞ்சிற்படாது என்றபடியுமாம். பகவானுக்கு அடிமை செய்துகொண்டு இந்நிலத்தில் கிடந்தாலும் இதுவே பரமபதத்தினும் சிறந்ததாகையால் தேவலோகமும் நரகமாய்த் தோற்றுமென்கை.

English Translation

A life given to servitide to the discus wielder who came on Earth as the Cowherd Lord,-byanyone, whosoever he may be wahtsoever lowly profession he may pursue, -is a life of glory on Earth, will such a one fear Karmas? Will such a one aim to heaven?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain