nalaeram_logo.jpg
(2616)

தமக்கடிமை வேண்டுவோர் தாமோ தரனார்,

தமக்கடிமை செய்யென்றால் செய்யாது,-எமக்கென்று

தாம்செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் நெஞ்சினார்,

யாஞ்செய்வ திவ்விடத்திங் கியாது?

பதவுரை

தமக்கு அடிமை வேண்டுவார்

-

தாம் அடிமையாயிருப்பதற்கு ஆசைப்படுமவரான

தாமோதரனார் தமக்கு

-

தாம்பாலாப்புண்ட பெருமானுக்கு

அடிமை செய் என்றால்

-

(நெஞ்சே! நீ) அடிமை செய் என்று சொன்னால்

நெஞ்சினார்

-

எனது நெஞ்சானது

செய்யாது

-

அப்படியே அடிமை செய்யாமல்

எமக்கென்று

-

என் வார்த்தை கேளாத ஸ்வாகத் திரியம் பாராட்டி

தாம் செய்யும தீ வினைக்கே

-

(வெகுகாலமாகத்) தான் செய்து வருகிற தப்புக் காரியத்திலேயே

தாழ்வுறுவர்

-

ஊன்றியிருக்கின்றது;

இங்கு

-

இப்படிப்பட்ட நிலைமையில்

யாம் செய்வது யாது

-

நான் செய்யத்தக்கது என்னோ?

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (தமக்கடிமை வேண்டுவோர்.) கீழ்ப்பாட்டில் “நிழலுமடிதாறுமானோம்” என்று தாம் எம்பெருமானோடு ஐக்கியப் பட்டமையைப் பேசினாரே; உடனே இவருடைய நெஞ்சானது பழையபடியே நைச்சியம் பாவித்துப் பின்வாங்கத் தொடங்கிற்று. அந்த நிலைமையைக் கண்டு ஆழ்வார்; ‘அந்தோ! என் செய்வேன் நெஞ்ச அநுகூலித்து வரும்போது எம்பெருமான் அருமைப்படுகிறான், எம்பெருமான் எளியனாம்போது நெஞ்சு பின்வாங்குகிறது; இந்த இழவுக்கு என்ன செய்வேன்?’ என்று அலமருகின்றார். பாயை விரித்துவிட்டுக் கணவனை அழைத்து வரப்போனாளாம் ஒரு நாயகி; கணவனை அழைத்து வருவதற்குள்ளே பாய் சுருட்டிக் கொள்ளுமாம்; மறுபடியும் பாயை விரிக்கப் பார்ப்பாளாம்; அந்த க்ஷணந்தன்னிலே நாயகன் ஓடிப்போவானாம். பாயை விரிப்பதற்கும் கணவனை யழைத்து வருவதற்குமே அவளுடைய போது சரிப்போகுமாம். அப்படியே ஆழ்வார்க்கு நெஞ்சை இணக்கிக் கொள்வதற்கும் எம்பெருமானை இழுத்துப் பிடிக்க நினைப்பதற்குமே போது சரிப்போகிறது போலும். இவர்க்கு இப்படியே அடிக்கடி சிரமம் உண்டாவது பற்றி அந்த வருத்தம் தோன்ற “யான் செய்வதில்விட்த்திங்கியாது” என்று தீநஸ்வரப்பாசுரம் பேசுகிறபடி காண்மின்.

“தமக்கடிமை வேண்டுவோர்” என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; ‘தாம் பிறர்க்கு அடிமை செய்ய ஆசைப்படுவன் எம்பெருமான்’ என்கிற ஒரு பொருளும், ‘தமக்கு அடிமை செய்வார் வேணுமென்று எம்பெருமான் ஆசைப்பட்டிருப்பான்’ என்கிற மற்றொரு பொருளும் செவ்வனே கிடைக்கும். அடிமை என்ற பதத்திற்கு சேஷத்வம் என்றும், சேஷபூதர் என்றும் அர்த்தமுண்டாகையாலே இவ்விரண்டு யோஜநைகளும் ஒக்கும். தனக்கு சேஷத்வத்தை வேண்டுகையாவது- தான் தாஸனாயிருக்க விரும்புகை. தனக்கு சேஷபூதரை வேண்டுகையாவது- தான் ஸ்வாமியாயிருக்க நினைக்கை எம்பெருமானுக்கு ஸ்வாமித்வம் அஸா காரணமாயிருக்கச் செய்தேயும் சேஷத்வத்திலே அவனுக்கு ஆசையாம். ஏனென்னில்; தனக்கு அடிமைப்பட்டவர் பரமாநந்தமடைகிறபடியைத் தான் காண்கையினாலே, தான் ஸ்வாமியாயிருக்குமிருப்பிலே அவ்வளவு ஆநந்தமில்லை யென்றும் சேஷப்பட்டிருக்குமிருப்பிலேயே ஆநந்த மிகுதியுண்டென்றும் கைகண்டு, சேஷித்வத்திற் காட்டிலும் சேஷத்வத்திலே மிக்க விருப்பமுடையனாயிருக்கிறானாம் எம்பெருமான். இங்கு இவ்வர்த்தத்தையே பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்- “தமக்கு அடிமையை உகக்குமவர்; அது எங்கே கண்டோமென்றால் (தாமோதரனார்) அநுகூலையான தாயார்க்கு அடியுண்பது கட்டுண்பதானவிடத்திலே கண்டோம்” என்பது வியாக்கியமான ஸ்ரீஸூக்தி.

தாமோதரனார் என்ற சொற் சேர்க்கை உழகுக்கு ஏற்ப இவ்வர்த்தமே இங்குப் பொருந்தும். தாமோதான் என்றால் கயிற்றை வயிற்றிலே உடையவன் என்று பொருள் அதாவது - வெண்ணெய் களவு கண்ட காரணத்திற்காக யசோதைப் பிராட்டியினால் கண்ணி நுண் சிறுத்தாம்ப கொண்டு கடத்தப்பட்டவன என்கை. இதனால், எம்பெருமானுக்கு, சேஷத்வத்திலே விருப்பமுடைமை விளங்குமிறே. இங்கே இவ்விசேஷண மிடுவதற்குப் பயன் யாதெனில்; சேஷியாக இருப்பதற்கே இட்டுப் பிறந்த எம்பெருமானும் அந்த சேஷித்வ நிலைமையை உபேக்ஷித்துவிட்டு சேவ்ருத்தி செய்ய ஆசைப்படுகிறான்; என்னுடைய நெஞ்சோமென்றால் சேவ்ருத்தி செய்வதற்கே இட்டுப் பிறந்து வைத்தும் இந்த ரஸமியாதே பிற்காலிக்கின்றது! என்கைக்காகச் சொல்லுகிறபடி. தமக்கு அடிமை வேண்டுவராகிய தாமோதரனார் தமக்கு (நெஞ்சே நீ) அடிமை செய்’ என்று நான் உரைத்தால், அந்தப் பாவிநெஞ்சானது அதைக் கேளாமல், அப்படி அடிமை செய்யாமல் ஸ்வாதந்திரியங்கொண்டு, நெடுநாளாகத் தான் செய்து வருகிற (நைச்சியாநு ஸந்தாநம்பண்ணிப்பின் வாங்குகையாகிற) தப்புக் காரியத்தையே செய்யப்பார்க்கின்றது!. எம்பெருமானோ மேல் விழுகிறான், நெஞ்சோ பின் வாங்குகின்றது; இந்த அவஸ்தையில் இன்னது செய்வதென்று எனக்குத் தோன்றவில்லையே! எம்பெருமான் வழியே போவதா? நெஞ்சுபோம் வழியே போவதா? என்ன செய்த்தக்கது என்று அலைபாய்கின்றாராழ்வார்.

(எமக்கென்று.) நெஞ்சானது எனக்கு சேஷப்பட்டதாகையாலே நான் சொன்னபடியே கேட்கக் கடமைப்பட்டிருந்தும் பாரதந்திரியம் வஹியாமையால் தான் போன போக்கே போம்படியாக ஸ்வாதந்திரியம் வஹிக்கின்றது. உனக்கென்றிருக்கையன்றியே எமக்கென்றிருக்கை ஸ்வாதந்திரிய காரியமாதலால் இங்கு எமக்கென்று என்பதற்கு ஸ்வதந்த்ரமாகி’ என்று பொருளுரைக்கப்பட்டது. ‘எனக்கென்று’ என்ன வேண்டுமாயினும் நெஞ்சினார் என்ற பன்மைக்குச் சேர எமக்கென்று எனப்பட்டது.

தாம் செய்யும் தீவினைக்கே தாழ்வுறுவர் = இதற்கு இரண்டுபடியாகப் பொருளுரைக்கலாம்; நெஞ்சினார் தாம் செய்கிற பாவங்களையே நினைத்து, இப்படி பாவியான நாமோ பகவானை அநுபவிப்பது! என்று கொண்டு, தாழ்வுறுவர் - நைச்சியம் பேசிப் பின்வாங்குகின்றார் என்னலாம். அன்றி, எம்பெருமான் நெருங்கினவாறே நெஞ்சினார் தாம் பின்வாங்கிக் போவதாகிற ஒருபாபத்தை அடிக்கடி செய்வது வழக்கமாயிற்றே. அந்தப் பாபத்திலேயே இப்போதும் ஊன்றுகின்றார் என்றும் உரைக்கலாம். இந்த யோஜகையில், தாழ்வுறுதலாவது - ஆஸக்தியை யுடைத்தாயிருந்தால் “விஷயங்களிலே கால்தாழ்ந்தான்” னஎ“றால் விஷய ப்ரவணனானான் என்று பொருள்படுமிறே. தீவினைக்கே என்றது- தீவினையிலேயே என்றபடி. முந்தின யோஜநையில், தான் செய்த பாவங்களை நினைத்தே என்றபடி. நெஞ்சினார் என்ற பன்மை கோவத்தினாலாயது.

இங்கு + யாது, இங்கி யாது; “உயிர்வரினுங்குறல் மெய்விட்டோடும், யவ்வரினிய்யாம்” என்பது நன்னூல்.

எம்பெருமான் அணுகிவரும்போது ஆழ்வார் நைச்சியம் பேசிப் பின்வாங்குதலென்பது திருவாய்மொழியிலும் (“வனவேழுலகின் முதலாய” என்ற [1-5-1] திருவாய்மொழி காண்க.)  வந்தாலும், இப்பிரபந்தத்தில் அடிக்கடி வருகின்றது. பரமபுருஷன் தனது பரத்துவத்தை மறைத்து ஸௌலப்ப குணத்தை எவ்வளவுதான் காட்டினாலும், *பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பு முடையவர்களுக்கு ஸ்வதோஷமே அடிக்கடி நெஞ்சில்பட்டுக் கூச்சமுண்டாகுமென்பது இதனால் காட்டப்படுகின்ற தென்றுணர்க.

English Translation

Damodara, the Lord who was leashed to a mortar, is pleased with servitude, But the heart is not the one serve if told to.  Istead it will go on subserving its base karmas claiming, "I am my own" In such a situation, what is it that we can do?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain