nalaeram_logo.jpg
(2601)

சூழ்ந்தடியார் வேண்டினக்கால் தோன்றாது விட்டாலும்

வாழ்ந்திடுவர் பின்னும்தம் வாய்திறவார்,-சூழ்ந்தெங்கும்

வாள்வரைகள் போலரக்கன் வந்தலைகள் தாமிடிய,

தாள்வரைவில் லேந்தினார் தாம்.

பதவுரை

எங்கும் சூழ்ந்து

-

நாற்புறங்களிலும் சுற்றிக்கொண்டு

அரக்கன்

-

இராவணனுடைய

வாள் வரைகள் போல் வன் தலைகள் தாம் இடிய

-

ஒளி பொருந்திய, மலைகள் போல் வலிதான தலைகளானவை இற்று விழும்படி

தாள்வரைவில் ஏந்தினார் தாம்

-

காலுரத்தை யுடைத்தாய் மலை போன்றதான வில்லைத் தாங்கி நின்றவரான இராமபிரான்

சூழ்ந்து

-

(இந்த லீலா விபூதியிலே வந்து) வளைத்துக் கொண்டு

அடியார் வேண்டின் அக்கால்

-

‘ஓ ஜனங்களே! நீங்கள் எனக்கு அடிமைப்பட வேணும்’ என விரும்பினால்

தோன்றாது விட்டாலும்

-

ஒரு அடியவனும் அகப்படாதபடி உபேக்ஷிக்கப் பெற்றாலும்

வாழ்ந்திடுவர்

-

திருவுள்ளத்தில் வெறுப்பு இல்லாமல்) உகந்தேயிருப்பர்;

பின்னும்

-

எக்காலத்திலும்

தம் வாய் திறவார்

-

(பிராட்டிமாரிடத்திலும் இந்த மனக் குறையை) வாய் திறந்து சொல்லிக்கொள்ளமாட்டார்.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (சூழ்ந்தடியார்.) ஆச்ரிதர்களிடத்தில் *எம்பெருமானுக்குள்ள வாத்ஸல்யத்தைப் பேசுகிறார். “எங்கும் சூழ்ந்து அரக்கண் வாள்வரைகள் போல் வன்தலைகள் தாம் இடியத் தாள் வரை வில்லேந்தினார் தாம் சூழ்ந்து அடியார் வேண்டினக்கால் (அடியார்) தோன்றாது விட்டாலும் வாழ்ந்திடுவர்; பின்னும் வாய் திறவார்” என்று அந்வயம். இராவணனது தலைகளை அறுத்துத் தள்ள வலிய வில்லைக் கையிலேந்தி நின்ற இராமபிரானாகிய திருமால் இந்த லீலா விபூதியில் வந்து சேர்ந்து இங்குள்ள ஸம்ஸாரிகளைச் சூழ்ந்து கொண்டு ‘எனக்கு நீங்கள் அடியாராக வேண்டும்’ என்று அபேக்ஷித்தவளவில், “த்வம் மே” என்றால் “அஹம் மே” என்கிற ஸம்ஸாரிகள் வணங்காமுடித்தனத்தினால் அநாதரவுகாட்டி அடியவர்களாக ஆகாவிட்டாலும், அதனால் திருவுள்ளத்தில் சிறிதும் வருத்தங் கொள்ளாமல் “நாம் அபேக்ஷித்தபடியே இந்த ஸம்ஸாரிகளெல்லாரும் அடியவர்களாக ஆய்விட்ட பக்ஷத்தில் இந்த லீலாவிபூதி ஆளற்று அழிந்துபோய் விடுமன்றோ; இஃது அழியாதபடி நோக்குவதற்கு இவர்கள் அமைந்தார்கள் என்று தேறி மகிழ்ந்தே செல்வர்; ஏகாந்தமான ஸங்கதிகளை யெல்லாம் கூசாமல் சொல்லுகைக்குரிய பிரட்டிமாரிடத்திலும் இவ்விஷயத்தைச் சொல்லிக்கொள்ள வாய்திறக்கமாட்டார்; ‘ஸம்ஸாரிகள் என்னை அலக்ஷியம் பண்ணிக் கைவிட்டார்கள்” என்று ஒருபோதும் சொல்லமாட்டார் என்றதாயிற்று.

ஸ்ரீவசநபூஷத்தில் (மூன்றாம் ப்ரகரணத்தில்- “பிராட்டி, ராக்ஷஸிகள் குற்றம் பெருமாளுக்கும் திருவடிக்கும் அறிவியாதாப்போல, தனக்குப் பிறர் செய்த குற்றங்களை பகவத் பாகவத விஷயங்களில் அறிவிக்கக் கடவனல்லன்” என்றருளிச் செய்தபின் “அறிவிக்கவுரியவனகப்பட வாய்திறவாதே ஸர்வஜ்ஞவிஷயங்களுக்கும் மறைக்குமென்னோநின்றதிறே” என்று அருளிச் செய்தது இந்தப் பாசுரத்தைக் கொண்டேயாம். அவ்விடத்தில் ஸ்ரீமணவாள மாமுனிகளின் வியாக்கியான ஸ்ரீஸூக்தி வருமாறு:- “எதிர்சூழல்புக்கு’ என்கிறபடியே தன்னுடைய சீல ஸௌலப்யாதிகளைக் காட்டி ஸம்ஸாரி சேதநர்களைத் தப்பாமல் அகப்படுத்திக்கொள்வதாக வந்தவதரித்துத் தமக்கு அடியார் வேணுமென்றபேக்ஷித்தால் அவர்கள் அப்படி அநுகூலமாய்த் தோன்றாதொழிந்தாலும் ‘இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்; நாம் இவர்களுக்கு உறுப்பாகப் பெற்றோமிறே’ என்று அதுதானே போக்யமாக விருப்பர்; அதுக்குமேல், அவர்கள் வைமுக்கியம் பண்ணினார்களென்று அவர்கள் குற்றத்தைத் தனியிருப்பிலே பிராட்டிக்கு மருளிச் செய்யாரென்கிற சூழ்ந்தடியார் என்கிற பாட்டிலே, சேதநர் செய்த குற்றங்களைத்  தன் திருவுள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு ப்ராப்தனான ஸர்வேச்வரனுமுட்படத் தன் திருப்பவளம் திறந்து அருளிச்செய்யாதே, தானருளிச் செய்யா தொழிந்தாலுமறியவல்ல ஸர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்குமென்று சொல்லா நின்றதிறே.” என்று.

இப்பாட்டை மற்றொரு வகையாகவும் பெரியவாச்சான்பிள்ளை உரைத்தருளினார்;- “அடியார் சூழ்ந்து வேண்டினக்கால், சூழ்ந்தெங்கும் வாள் வரைகள் போலரக்கன் வன்தலைகள் தரமிடியத் தாள்வரைவில் லேந்தினார்தாம் தோன்றாது விட்டாலும் (அடியார்) வாழ்ந்திடுவர்; பின்னும் தம் வாய்திறவார்” என்று அந்வயித்து, அடியவர்களாயுள்ளவர்கள் எம்பெருமானைச் சூழ்ந்து கொண்டு எமக்கு நீ ஸேவைஸாதிக்க வேணுமென்று வேண்டிக்கொள்ள எம்பெருமான் அவர்களுக்கு முகங்காட்டாவிடினும், அவன் திருவுள்ளமானபடியே ஆகக்கடவது’ என்று மகிழ்ந்திருக்கக் கடவர்கள் அடியவர்கள்; ‘ஆர்த்தியின் கனத்தாலே நாங்கள் ஓயாது புலம்பி வேண்டினாலும் எங்களுக்கு ஸேவை ஸாதியாமலிருப்பது ஏன்?’ என்று ஆக்ஷேபிக்க வாய் திறக்கவும் கடவரல்லர்; அபேக்ஷிப்பது மாத்திரம் அடியவர்களது கடமையேயன்றி அபேக்ஷித்தபடியே அவன் காரியஞ் செய்யாவிடில் அவனையெதிர்த்து வாய் திறக்க இவர்களுக்கு அதிகாரமில்லை- என்று சேதநர்களின் ஸ்வரூபத்தை சிக்ஷித்தருளிச் செய்வதாக.

முந்தின யோஜநையில் எம்பெருமானுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது; இந்த யோஜநையில் சேநருடைய ஸ்வரூபம் சொல்லுகிறது. இரண்டு வகையும் பொருந்தக் குறையில்லை.

சூழ்ந்து எங்கும் = இலங்கை முழுவதையும் ஆக்ரமித்துக்கொண்டு என்றபடி. வாள் என்பதும் வரைகள்போல் என்பதும்- அரக்கனது வன்தலைகட்கு விசேஷணங்கள்; வாள்- ரத்னங்களிழைத்த கிரீடங்களணிந்திருக்கையாலே ஒளிபொருந்திய என்றபடி. தாள் வரை வில் = விற்களுக்கு அடிப்பக்கம் உரத்திருக்க வேண்டியது அவசியமாதலால்; தாள்வில் எனப்பட்டது; காலுரமுடைய வில் என்றபடி. மலைபோல் பிறரால் சலிப்பிக்கவும் ஒண்ணாதபடி சிக்கென்றிருத்தல் பற்றி “வரைவில்” எனப்பட்டது.

English Translation

Whenever devotees gather and petition to the Lord, he gives them succour, even though he does not appear before them; and after that too, he doesn't speak to them.  He wielded a bow and stood like a mountain, rolling the heads of the Rakshasa, like boulders all around.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain