nalaeram_logo.jpg
(2595)

நாழால் அமர்முயன்ற வல்லரக்கன், இன்னுயிரை,

வாழா வகைவலிதல் நின்வலியே,-ஆழாத

பாரும்நீ வானும்நீ காலும்நீ தீயும்நீ,

நீரும்நீ யாய்நின்ற நீ.

பதவுரை

ஆழாத பாரும் நீ

-

(நீரில்; அழுந்தாமலிருக்கிற பூமியும் நீயிட்ட வழக்கு;

நீரும் நீ

-

ஜலதத்வமும்*;

தீயும் நீ

-

தேஜஸ்தத்வமும் நீ;

காலும் நீ

வாயுதத்வமும் நீ;

வானும் நீ

-

ஆகாசமும் நீ;

ஆய் நின்ற நீ

-

இப்படி பஞ்ச பூதங்களையும் வடிவாகவுடைய நீ,

நாழால் அமர் முயன்ற

-

அஹங்காரத்தினால் யுத்தம் செய்வதில் கைவைத்த

வல் அரக்கன்

-

கொடிய இராவணனுடைய

இன் உயிரை

-

இனிமையான பிராணனை

வாழா வகை

-

வாழ்ந்திருக்க ஒட்டாமல்

வலிதல்

-

கவர்ந்து கொண்டது

நின்வலியே

-

உனக்கு ஒரு சூரத்தனமோ? அல்ல.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நாழாலமர் முயன்ற.) அநந்யப்ரயோஜநரான நம்மை உபேக்ஷிக்கின்ற எம்பெருமானுடைய சிந்தனை இனி நமக்கு ஏதுக்காக? அவனைக் குறித்துப் பாசுரஞ் சொல்வதுதான் இனி நமக்கு எதுக்கு? இனி நாம் வாயை மூடிக்கொண்டு கிடப்போம்- என்றிருக்கப் பார்த்தார் ஆழ்வார்; எம்பெருமான் அவரை அப்படியே இருக்கவொட்டவில்லை; பாசுரம் பேசவே தூண்டிவிட்டான்; இதென்ன அற்புதம்! நாம் வாயை மூடிக் கிடப்போமென்று பார்த்தாலும் பரவசமாகவே வாய் பேசத் தொடங்குகின்றதே! நமது முயற்சி இல்லாதிருக்கச் செய்தேயும் வாய்பேச எழும்புகிறதென்றால் இது யாருடைய செயலாக இருக்கவேணுமென்று ஆராய்ந்தார்;  ”***- தோ விநாத்ருணாக்ரமபி ***- (அவ்வெம்பெருமானையொழியத் துரும்பும் எழுந்தாடாது”) என்றிருப்பதனாலே, அவ்வெம்பெருமானே இனி செய்விக்கிறானாக வேண்டும்; அவன்றான் மறைந்து உறைந்திருந்து நம் வாயைக் கிளப்புகிறான் போலும் என்று நிச்சயித்து ‘இனி நாம் இவன் விஷயமாக வாய் திறப்பதில்லை’ யென்று உறுதியாக நாம் கொண்டிருந்த எண்ணத்தைப்போக்கி வாயைக் கிளப்புகின்ற இவனுடைய ஸாமர்த்தியத்தை நாம் என்ன சொல்வோம்! என வியப்புற்று, பண்டு இராவணமென்பானோரரக்கன் ‘நான் யார்க்கும் தலை சாய்ப்பதில்லை; நிமிர்ந்த தலையைக் குனியவேமாட்டேன்’ என்று கொண்டு இறுமாப்புடனிருந்த நிலைமையைத் தொலைத்து அவனைப் பங்கப்படுத்தினான் இப்பெருமான் என்று எல்லாரும் மிக்க புகழ்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்களே. அந்தோ! இஃதொரு புகழ்ச்சியோ இவனுக்கு? இராவணனது உறுதியைக் காட்டிலும் வலிதான எனது உறுதியைச் சிதைத்து என்னை வாய்திறக்கப் பண்ணாநின்ற இப்பெருமானுக்கு அது ஒரு அருந்தொழிலோ? என்று ஈடுபட்டு எம்பெருமானையே நோக்கி இதனைப் பேசுகிறார்.

(திருமாலே!,) “ஆழாத பாரும் நீரும் தீயும் காலும் வாலும் நீயாய் நின்ற நீ, நாழலமர்முயன்ற வல்லாக்கனின்னுயிரை வாழாவகை வலிதல் நின்வலியே?” என்று அந்வயம். மண் நீர் எரி காற்று ஆகாயம் என்கிற பஞ்ச பூதமுமாய் நிற்கிற நீ என்றதற்குக் கருத்து யாதெனில்; “விருத்தமான விபூதிகளைச் சேரவிட்டு அநுபவிக்கிறவுனக்கு என்னைச் சேரவிடுகை ஒரு பணியோ; விபூதி ஸாமாந்யங்களுக்கு நிர்வாஹகனாய் அவற்றைச் சொல்லுகிற சப்தம் உன்னளவும் வரும்படி நிற்கிற வுனக்கு, உனக்கே அஸாதாரணமாய் உன்னலல்லது சொல்லாதவர்களைச் சேரவிடுகை பணியோ வென்றுமாம்” என்பது பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி. மண்ணானது நீரில் கரைந்துவிடும்; நீரானது தீயை அணைத்துவிடும்; இப்படி பரஸ்பரம் விருத்த ஸ்வபாவங்களான பஞ்சபூதங்களை ஒன்று சேர சரீரமாகக் கொண்டு = யஸ்ய ப்ருதிவீ சரீரம். யஸ்ய ஆபச்சரீரம்” என்று வேதங்கள் ஓதும்பட நிற்கிறவுனக்கு அருமையென்று சொல்லக்கூடிய காரியம் ஒன்றுமேயில்லை என்றவாறு. ஆனாலும், நீ அருமையான காரியங்களைச் செய்கிறவன் என்று பாராட்டிச் சொல்ல வேண்டுமானால் என்னுடைய உறுதியைப் போக்கடித்து என்னை வாய்திறக்கப் பண்ணின இக்காரியமொன்றே அருமையாகப் பாராட்டிச் சொல்லவுரியது; என் உறுதியைக் காட்டிலும் லகுவான உறுதியையுடையரான இராவணாதிகளைப் பங்கப்படுத்தினாயென்பதை அருந்தொழிலாகப் பலரும் பாராட்டிச் சொல்லுகிறார்களே, அது பயனற்ற சொல் என்றாராயிற்று.

நாழாலமர்முயன்ற என்றது - வணங்கா முடித்தனமாகிற அஹங்காரதோஷத்தினால் உன்னை எதிரிட்டுச் சண்டை செய்வதாக ஒருப்பட்டு வந்த என்றபடி அப்படிப்பட்ட வல்லரக்கனுண்டு- பெருமிடுக்கனான இராவணன், அவனுடைய தித்திப்பான பிராணனை அந்த சரீரத்தில் வாழவொட்டாமல் கவர்ந்து கொண்டது உனக்கு மிடுக்கோ? வலியே என்ற ஏகாரம்- வலியல்ல என்பதைக் காட்டும். என்னுடைய உறுதியைப் போக்கினது வலியேயன்றி அவனது உயிரைப் போக்கினது வலியல்லகாண் என்கை.

English Translation

Your engaged a boastful Rakshasa in a battle and took his sweet life.  Does this behave your valour? –when you are the Earth, you are the sky, you are the wind, you are the Fire, You are the water, and you are yourself as well!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain