nalaeram_logo.jpg
(2594)

இருநால்வர் ஈரைந்தின் மேலொருவர், எட்டோ

டொருநால்வர் ஓரிருவர் அல்லால்,- திருமாற்கு

யாமார் வணக்கமார் ஏபாவம் நன்னெஞ்சே

நாமா மிகவுடையோம் நாழ்.

பதவுரை

இரு நால்வர்

-

அஷ்ட வஸுக்கவென்ன

ஈரைந்தின் மேல் ஒருவர்

-

ஏகாதசருத்ரர் களென்ன

எட்டோடு ஒரு நால்வர்

-

த்வாதசாதித்யர்களென்ன

ஓர் இருவர் அல்லால்

-

அச்ஸிநீ தேவர்களென்ன ஆகிய முப்பத்துமூவரமரர்கள் தவிர (மற்றவர்களான)

யாம்

-

நாம்

திருமாற்கு

-

எம்பெருமானைப் பணிவதற்கு

ஆர். எவ்வளவு மணிசர்?

-

வணக்கம் ஆர்

-

நம்முடைய பணிவுதான் எத்தன்மையது!

ஏ பாவம்

-

அந்தோ!;

நல் நெஞ்சே

-

நல்ல மனமே!

நாமா

-

நாமோ வென்றால்

மிக நாழ் உடையோம்

-

மிகவும் குற்றமுள்ளவர்களாயிருக்கிறோமிறே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (இரு நால்வர்.) எம்பெருமானைச் சிந்திப்பதற்கும் துதிப்பதற்கும் அர்ஹரல்லாத நாம் நிறக்கேடாக அவனைச் சிந்தித்தல் செய்து ‘அவன் நமக்குத் திருமேனியை ஸேவஸாதிப்பிக்கவில்லையே!’ என்று கை யொழிந்து கிடப்பதே நல்லதன்றோ என்று திருவுள்ளம் பற்றின ஆழ்வார், பழைய அயோக்யதாது ஸந்தாநமே பண்ணுகிறார் இதில். ஜன்மத்தாலும் ஆசாரத்தாலும் தூயரான முப்பத்து முக்கோடி தேவர்களன்றோ அவனுக்கு அடிமைசெய்ய அர்ஹதையுடையார்; ஒரு குணமுமின்றிக் குற்றமே வடிவான நாம் அப்பெருமானை வணங்குவதற்கு எவ்வளவு?. நாம் என்பதற்கும் நம்முடைய வணக்கமென்பதற்கும் இங்கே என்ன விஷயமிருக்கிறது! என்று தம்முடைய அயோக்யதையைக் கூறி அகலப்பார்க்கிறார். பகவதநுபவம் விலக்ஷணர்க்கே கிடைக்குமத்தனை யல்லது நம்மைப்போன்ற பாவிகளுக்கிடையாதுகாண் நெஞ்சே!, நீ ஏன் வீணாக நாக்கை நீட்டிக் கிடக்கிறாய்? என்கிறார் போலும்.

இதற்கு மற்றொருபடியாகவும் கருத்துரைக்க இடமுண்டு;- “நின்னை விண்ணோர் தாள் நிலந்தோய்ந்து தொழுவர் நின்மூர்த்தி பல் கூற்றிலொன்று காணலு மாங்கோலென்றே?” (திருவிருத்தம்- 92) என்றபடி எம் பெருமானுடைய வடிவழகில் சிறிதும் ஈடுபாடின்றியே; எங்களுக்குச் சீர்வாமைக்கு மருந்து கொடுக்கக் கடலைக்கடை; மாவலியைக் கொல்லு; இரணியனைக் கொல்லு; இராவணனைக் கொல்லு’ என்று உடம்பு நோகக் காரியம் செய்யுமாறு நிர்பந்திக்கிற ப்ரயோஜநாந்தரபரர்களான தேவதைகளுக்கு அப்பெருமானுடைய அநுபவம் எளிதாகக் கிடைக்குமேயன்றி ப்ரயோஜநாந்தர மொன்றையும் வேண்டாதே. ‘உன் வடிவழகின் அநுபவமே எமக்குப் பரமப்ரயோஜநம்’ என்றிருக்கிற நமக்குக் கிடைக்குமோ நெஞ்சே; ப்ரயோஜநாந்தரபரர்கட்குத்தான் காரியம் செய்யக்கடவோமென்று ஸங்கல்பித்துக் கொண்டிருக்கிற அப்பெரியவர்க்கு நம்முடைய அநந்யப்ரயோஜநத்வம் தோஷமாகவன்றோ திருவுள்ளத்திற்பட்டுக் கிடக்கிறது; இப்படிப்பட்ட தோஷம் நிறைந்துள்ள நமக்கு அவருடைய அநுக்ரஹம் கிடைக்குமா என்ன? கிடைக்காது தான்- என்று இன்னாப்பாகச் சொல்லுகிறார் என்றுரைக்கவுமாம். ப்ரயோஜ நாந்தரங்களை நச்சினவர்களும் உபாயாந்தரங்களைப் பற்றினவர்களுமான தேவதைகட்குக் காரியம் செய்கிற எம்பெருமான் அநந்ய ப்ரயோஜநராயும் அநத்யோபாயராயுமுள்ள ஆழ்வார் தமக்குக் கடுகக் காரியஞ் செய்யவில்லை யென்றால் இப்படித்தானே சொல்லவேண்டும்.

“எண்மர் பதினொருவ  ஈரறுவரோரிவர்” என்று முதல் திருவந்தாதியில் பொய்கையார் அருளிச்செய்த முப்பத்துமூன்று தேவர்களையே இவரும் சப்தபேதத்தாலே அருளிச் செய்கிறார். அவர் அஷ்டவஸுக்களை எண்மர் என்றார்; இவர் இருநால்வர் என்கிறார்; அவர் ஏகாதச ருத்ரர்களைப் பதினொருவர் என்றார்; இவர் ஈரைந்தின்மேலொருவர் என்கிறார்; அவர் த்வாதசாதித்யர்களை ஈரறுவர் என்றார்; இவர் எட்டோடொரு நால்வர் என்கிறார்; அச்விநீதேவர்களை ஓரிருவர் என்றது மாத்திரம் இருவர்க்குமொத்தது. ஆக முப்பத்துமூன்று தேவர்களைச் சொன்னது ஸமஸ்த தேவர்களையும் சொன்னபடியாமென்பர்; ஆண்டாளும் “முப்பத்து மூவரமரர்க்கு முன் சென்று” என்றருளிறே. வேதமும் ***-=த்ரயஸ்த்ரிம்சத்வைதேவா” என்று பலவிடங்களிலும் ஓதாநின்றது. முப்பத்து மூலரமரர்கள் தாம் எம்பெருமானுக்கு உரியவர்கள்; நாம் ஆர், நம்முடைய வணக்கமென்பது யாது? என்று ஸநச்யர்னுஸந்தான்யமாகவோ வெறுப்பாகவோ அருளிச் செய்தாராயிற்று. யாம் ஆர் = பிறப்பு ஒழுக்கம் முதலியவற்றால் அயோக்யரான நாம் அவனுக்கு எந்த வகுப்பில் சேர்ந்தவர்கள்? ரக்ஷ்யவர்க்கங்களுள் ஒரு வகுப்பிலும் சேர்ந்தவர்களெல்லாம் என்றபடி. வணக்கம் ஆர் = அயோக்யரான நம்முடைய ஆச்ரயணந்தான் அவனுக்கு எங்ஙனே? நாம் ஆச்ரயித்தோமென்பது அவனக்கொரு பொருளோ?

“பிறையேறு சடையானும் நான் முகனுமிந்திரனும், இறையாக விருந்தேத்த வீற்றிருத்தலிது வியப்பே” (திருவாய்மொழி 3-1-10.) என்னும்படியாயுள்ள அவனுக்கு, அறிவொன்றுமில்லாத நம்முடைய வணக்கம் ஒரு வஸ்துவாகவும் இட்டெண்ணத்தக்கதோ வென்றபடி. “வணக்கம் எது” என்னாமல் “வணக்கம் ஆர்” என்று அஃறிணைச் சொல்லுக்கு உயர்திணை வினாச்சொல் இட்டுச் சொன்னது ஒரு வகைக் கவிமரபு. ஏபாவம் = வடமொழியில் *** (அஹஹ)* (ஹந்த) ** (பத) என்னும் அவ்வயயங்கள் போலே தமிழில் இது ஒரு இரக்கக் குறிப்பிடைச் சொல்போலும் ‘இருநிலத்தோர் பழிபடைத்தேன் ஏபாவமே” என்ற திருநெடுந்தாண்டகமுங்காண்க.

திருமாற்கு யாமார் வணக்கமார் ஏபாவம்! = புருஷோத்தமனாகிய அவன் முன்னே நாம் ஒரு பதார்த்தமாக நிற்பதும், அவனை நாம் வணங்கினோமென்பதும் எவ்வளவு ஹேயமான விஷயம்!- என்று தம்மில் தாம் கர்ஹித்துக்கொள்ளுகிறபடி. ஏன் இப்படி சொல்லுகிறீர்? என்ன; நாமா மிகவுடையோம் நாழ் என்கிறார். நாமா என்றது- நாமோ வென்றால் என்றபடி. நாம் அளவற்ற குற்றமுடையவர்களன்றோ; ஆனது பற்றி “நாமார் வணக்கமார்” என்றோம் என்கை. இப்பாட்டில் அயோக்யதாநுஸந்தாநம் பண்ணுகிறாராகக் கொள்ளும் பக்ஷத்தில் “நாமாமிகவுடையோம் நாழ்” என்றது. அபராதஸஹஸ்ர பாஜநம்” என்றுமாபோலே ஸ்வரூபமாகச் சொல்லிக்கொண்டதாம். அங்ஙனன்றி, ப்ரயோஜநாந்தரபரர்கட்கு அவர் காரியம் செய்வரேயன்றி அநந்ய ப்ரயோஜநரான நமக்குக் காரியம் செய்வரோ? என்று வெறுப்பாகச் சொல்லுகிறரென்று கொள்ளும் பக்ஷத்தில், இங்கு நாமா மிகவுடையோம் நாழ் என்றது- ப்ரயோஜநாந்தர பரர்களுக்கே காரியஞ் செய்கிறவரான அவருடைய திருவுள்ளத்தாலே குற்றமாகத் தீர்மானிக்கப்பட்ட அநந்யப்ரயோஜநத்வத்தை நாம் உடையோமென்றோ? என்றவாறு. நாழ்- குற்றம்.

English Translation

The eight vasus, the eleven Rudras, the twelve Adityas, the twin Asvis, -being none of these, who are we to the Lord? What is our worship to him? Alas, O Heart! We have only a boastful tongue.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain