nalaeram_logo.jpg
(2590)

நெறிகாட்டி நீக்குதியோ? நின்பால் கருமா

முறிமேனி காட்டுதியோ? மேனாள்-அறியோமை

எஞ்செய்வா னெண்ணினாய் கண்ணனே! ஈதுரையாய்

எஞ்செய்தா லென்படோம் யாம்?

பதவுரை

கண்ணனே

-

எம்பெருமானே!

நெறி காட்டி நின்பால் நீக்குதியோ

-

கருமம் ஞானம் முதலிய உபாயாந்தரங்களைக் காட்டி (இவற்றை அநுஷ்டித்துப் பலன் பெறுவாய் என்று சொல்லி என்னை) கைவிட்டு விடப் பார்க்கிறாயோ? (அல்லது)

கரு மா முறி மேனி காட்டுதியோ

-

கறுத்த மாமரத்தின் தளிர் போன்ற (உனது) திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து அநுப்ரஹிக்க நினைக்கிறாயோ?

மேல் நாள்

-

அநாதி காலமாக

அறியோமை

-

அறியாதவர்களான எங்களை

என் செய்வான் எண்ணினாய்

-

என்ன செய்வதாக திருவுள்ளம் பற்றியிருக்கிறது?

ஈது உரையாய்

-

தேவரீருடைய திருவுள்ள மின்ன தென்பதை அருளிச் செய்ய வேணும்;

என் செய்தால்

-

நீ எமக்கு என்ன நன்மையைச் செய்தாலும்

யாம் என் படோம்

-

யாம் என்ன அநர்த்தத்தைத்தான் அநுபவிக்க மாட்டோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நெறிகாட்டி.) ‘நம்மை விட்டுப் பின் வாங்கப் பார்த்த இவ்வாழ்வாரை நாம் உபாயமாகப் பொருந்தவிட்டுக் கொண்டோம்; இனி இவர் நம்மை நினைப்பதும் துதிப்பதும் செய்து கொண்டிருக்கப் போகிறார்; அப்படியே யிருக்கட்டும்; அல்லும் பகலும் அழுது கதறிக் கொண்டிருக்கட்டும்; நம்மைக் கிட்டி  அநுபவிக்க விரும்பினாராகில் கருமம் ஞானம் முதலிய ஸாதநங்களை அனுட்டித்து மெதுவாக வந்து சேரட்டும்’ என்ற எம்பெருமான் திருவுள்ளம் பற்றியிருப்பதாகத் தெரிந்துகொண்ட ஆழ்வார் அப்பெருமானையே நோக்கிக் கேள்வி கேட்கிறார்; - பெருமானே! உனக்கு ஸ்வாதந்திரியம் என்கிற ஒரு குணமும்-, நிர்ஹேதுகக்ருபை என்கிற ஒரு குணமும் உண்டு; எந்த குணத்தைச் செலுத்தி நீ காரியம் செய்ய நினைத்தாலும் செய்யக்கூடும். சிலரிடத்தில் ஸ்வாதந்திரியத்தைச் செலுத்திக் கைவிடப் பார்ப்பாய்; சிலரிடத்தில் நிர்ஹேதுக கருணையைச் செலுத்தி வலிகட்டாயமாகக் கைக்கொள்ளப் பார்ப்பாய். இப்படி எத்தனையோ செய்துமிருக்கிறாய். இப்போது அடியேன் விஷயத்தில் செய்யத் திருவுள்ளம் பற்றியிருப்பது எது? ஸ்வாதந்திரியத்தைக் காட்டிக் கைவிடப்பார்க்கிறாயோ? அல்லது, திருவருளைக் காட்டி அழகிய திருமேனியை ஸேவை ஸாதிப்பித்து விஷயீகரிக்கப் பார்க்கிறயோ? எப்படி நீ செய்தாலும் அப்படிக்கு என்னைப் போன்ற ஸம்ஸாரிகள் உடன்படி வேண்டியவர்களேயன்றி உன்னை நியமிக்கவல்லார் ஆருமில்லை; ஆனாலும் ‘இன்னது செய்ய நினைத்திருக்கிறேன்’ என்பதைச் சோதிவாய்திறந்து சொல்லிவிட்டால் நெஞ்சுக்கு ஆறுதலாயிருக்கும்- என்கிறார்.

நெறிகாட்டி நீக்குதியோ நின்பால்? =நெறியென்றால் வழி; வழியாவது உபாயம்; பகவத் கீதையில் சரமச்லோகத்துக்குக் கீழே விஸ்தாரமாகச் சொல்லப்பட்டுள்ள கர்மஜ்ஞாநாதி ஸாதநாந்தரங்களை இங்கு நெறி யென்கிறது. எம்பெருமான் யாரை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானோ அவர்களை நோக்கி “நீங்கள் எவ்விதமான அலைச்சலும் படவேண்டா; என்னையே தஞ்சமாக உறுதி கொண்டு மார்விலே கைவைத்து உறங்குங்கள்” என்பன்; எவர்களைக் கைவிட நினைக்கிறானோ அவர்களுக்கு அருந்தொழில்களை அளவில்லாதபடி விதித்து ‘இவற்றைச் சரியாகச் செய்து பேறு பெறுங்கள்’ என்பன். ஆகையாலே நெறிகாட்டுகை யென்பதும் நீக்குகை யென்பதும் பர்யாயம். நெறியைக் காட்டுகையாவது - ‘இது கார்மயோம், இது ஜ்ஞாநயோகம். இது பக்தி யோகம்; இவற்றுள் எது உமக்கு ஸாத்யமோ அதனை அநுஷ்டிக்கக் கடவீர்’ என்றுசொல்லி, தான் உதாவஸீகனாய் விடுகை. நெறிகாட்டி நின்பால் நீக்குதியோ? = உன்னையொழிய றேறொருபாயத்தைக் காட்டி உன்பக்கலில் நின்றும் என்னை அகற்றப் பார்க்கிறாயோ என்றவாறு.

நளமகாராஜன் தமயந்தியை உடுத்த புடவையிலே ஒரு  தலையையறுத்து ‘இது விதர்ப்பதேசம் போகிற வழி. இது கோலைதேசம் போகிற வழி; எந்த வழியில் வேணுமானாலும் போய்க்கொள்; என்று சொல்லிவிட்டு அகன்ற கதையை இங்கு நினைப்பது.

கருமா முறி மேனி காட்டுதியோ?= நிர்ஹேதுக விஷலிகாரத்திற்கு அடியேனை ஆளாக்கப்பார்க்கிறதோ என்கை. (******  ) மநாயமாத்யா ப்ரவசநேய ஸப்யோ ந மேதயா ந பஹுநா ச்ருதேந. யமேவைஷ வ்ருணுதே தேந லப்ய; தஸ்யைஷ ஆத்ம விவ்ருணுதே தநூம் ஸ்வாம்” என்று உபநிஷத்திலே சொல்லப்பட்டிருக்கிறபடி- எவனை அநுக்ரஹிக்கத் திருவுள்ளம் பற்றுகிறானே அவனுக்குத் தனது திவ்யமங்கள விக்ரஹத்தைப் பரிபூர்ணாநுபவ விஷயமாகக் காட்டிக்கொடுக்கக் கடவனாகையாலே, மேனி காட்டுதியோயென்கிறார். முறியென்று தளிர்க்குப் பெயர்; முறிக்கப்படுவது முறியென்று காரணப்பெயர். மாமுறி-மாந்தளிர்; அதுபோல் ஸுகுமாரமாயும், கரு- ச்யாமளமாயுமிருக்கிற திருமேனியைக் காட்டியருள நினைக்கிறாயோ?

கண்ணனே! மேனாள் அறியோதை என்செய்வா னெண்ணினாய்?= அநாதிகாலமாக அவிவேகியாய்க்கிடக்கிற அடியேன் திறத்தில் எது செய்ய நினைத்திருக்கிறது? நிக்ரஹமோ? அல்லது அநுக்ரஹமோ? சொல்லவேணும்.  மேனாளறியோதை என்றதன் கருத்து யாதெனில்; ஒன்றிலும் அறிவில்லாத அடியேனுக்கு உபாயாந்தரங்களை விதித்தால் என்ன செய்ய முடியும்? தேவரீருடைய நிர்ஹேதுகக்ருபைக்கு அஜ்ஞரும் அசக்தருமன்றோ இலக்கு; ஞானமுள்ளவர்களும் சக்தியுள்ளவர்களும் தங்களுடைய ஞான சக்திகளைக் கொண்டு கரையேறிவிடக்கூடும்; அறிவில்லாதவர்களும் அசக்தர்களுமே தேவரீருடைய நிர்ஹேதுகவிஷயீகாரத்திற்குப் பாத்திராமகக் கூடியவர்களாதலால் அஜ்ஞனான அடியேன் நெறிகாட்டி நீக்குவதற்கு உரியவனல்லேன்; கருமாமுறிமேனி காட்டுவதற்கே உரியேன்- என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் படும்படி சொல்கிறாரென்க.

என்செய்தாலென்படோம் யாம்- இதற்கு இரண்டு வகை பாகப் பொருள் கொள்ள இடமுண்டு; நீ ஸ்வாதந்திரியத்தைக்காட்டி அகற்றப்பார்த்தாலும் ஸரி; அநுக்ரஹித்துத் திருமேனியை ஸேவைஸாதிப்பித்தாலும் ஸரி; திருவுள்ளமானபடி எனது செய்தாலும் அதன்படி அடியேன் உடன் படத்தக்கவனேயொழிய வேறு என்ன தடை செய்யப்போகிறேன்- என்கிறார் என்னலாம். அன்றி, நீ என்ன நன்மை செய்தாலும் அதைத் தாங்கிக்கொள்ள என்னால் முடியப்போகிறதோ? யானையைக் குளிப்பாட்டி வைத்தாலும் நொடிப்பொழுதில் தும்புதூசிகளையே வாரி மேற்கொள்ளுமாபோகே, நீ செய்யும் நன்மையையும் கெடுத்துக் கொண்டு தீமையையே ஏறிட்டுக் கொண்டவனாவேன்- என்கிறார் என்னவுமாம்.

English Translation

O Krishna! Will you only show us the way to your feet and disappear? Or will you show us your dark radiant frame as well?  We do not know what lies ahead.  Pray tell us what you intend. Whatever you do will surely affect us.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain