nalaeram_logo.jpg
(2588)

என்னின் மிகுபுகழார் யாவரே, பின்னையும்மற்

றெண்ணில் மிகுபுகழேன் யானல்லால்,-என்ன

கருஞ்சோதிக் கண்ணன் கடல்புரையும், சீலப்

பெருஞ்சோதிக் கென்னெஞ்சாட் பெற்று.

பதவுரை

என்ன

-

என்னுடையவனான

நரும் சோதி கண்ணன்

-

கறுத்த நிறத்தையுடைய ஸ்ரீக்ருஷ்ணனும்

கடல்  புரையும் சீலன்

-

கடல் போன்ற (கம்பீர) ஸ்வபாவ முடையவனும்

பெரும் சேயதிக்கு

-

மிகப் பெரிய சோதிவடிவமானவனுமான எம்பெருமானுக்கு

என் நெஞ்சு ஆள் பெற்று

-

என்னுடைய நெஞ்சானது அடிமைப்பட்டதனால்

என்னில்

-

என்னைவிட

மிகு புகழார் யாவரே

-

மிக்க புகழுடையவர் யார் கொல்?

மற்று பிள்ளையம் எண்ணில்

-

இன்னமும் ஆராய்ந்து பார்க்குமளவில்

மிரு புகழோன் யான் அல்லால்

-

மிக்க புகழுடையவன் தவிர வேறு யாருமில்லை.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (என்னில் மிகுபுகழார்.) முதற்பாட்டில், ஆழ்வார் எம்பெருமானைப் புகழத் தொடங்கி, இரண்டாம் பாட்டில், அவனை நாமோ புகழ்வதென்று பின்வாங்கி, மூன்றாம் பாட்டில்- புகழாதிருக்க முடியாமையைச் சொல்லி முடித்தார். அவனைப் புகழ்வது நமக்குத் தகாதென்று நாம் அயோக்யதையால் பின்வாங்க நினைத்தாலுங்கூட ஏதேனுமொருபடியாலே அவனது புகழ்களைப் பற்றி நம் வாயால் சில பாசுரங்கள் பேசியே தீர வேண்டியதாகிறதே! ஹா ஹா! நம்முடைய பாக்கியமே பாக்கியம்;நம்மைவிட பாக்கியசாலிகள் வேறு யாமுளர்? எம்பெருமானுடைய சில திருக்குணங்கள் நம் வாயிலும் புகுந்து புறப்படும்படியான நல்லகாலம் வாய்த்ததே! என்று மகிழ்கிறார் இதில்.

“என்னில் மிகுபுகழார் யாவரே” என்பதில் சொல்லுகிற அர்த்தமே “பின்னையும் மற்றெண்ணில் மிகுபுகழேன்யானல்லால்” என்பதிலும் கிடந்தாலும் ஸந்தோஷாதிசயத்திலே இரட்டித்துச் சொல்லுகிறபடி “இல்லையெனக்கெதி ரில்லைனெக்கெதி ரில்லையெனக்கெதிரே” என்பதுபோல. இவ்விடத்தில் இவர் நினைக்கிற புகழாவது- பாக்யசாலி என்கிற கீர்த்தியாம். ஆகவே. என்னைவிட பாக்யசாலி வேறு யார்? என்றதாயிற்று.

‘உமக்கிப்போது என்ன பாக்கியம் வந்துவிட்டது?’ என்ன, பின்னடிகளில் அந்தப் பாக்கியத்தை விவரிக்கிறார்;- என்ன கருஞ்சோதிக்கண்ணன் கடல்புரையுஞ் சீலப் பெருஞ்சோதிக்கு என்னெஞ்சு ஆளாகப் பெற்றதனால் “என்னில் மிகுபுகழார் யாவரே?” என்ன வேண்டியதாயிற்று என்கிறார். என்ன என்றது- என்னுடைய என்றபடி தன்னுடைய வடிவை எனக்கு அநுபவிக்கக் கொடுத்தருளின கண்ணபிரான் என்கை. கடல்புரையும் சீலன் என்றது கடல்போன்ற கம்பீரஸ்வபாவமுடையனென்றபடி. சீலம் என்ற வடசொல் - ஸ்வபாவமென்றும் நல்லொழுக்கமென்றும் பொருள்படும். “சீலப்பெருஞ் சோதிக்கு” என்றவிடத்து சீலன் என்று பிரியும்; “சில விகாரமாமுயர்திணை” என்பது நன்னூல். ஆள் பெற்று என்றது - ஆளாகப் பெற்றது காரணமாக என்றபடி. எம் பெருமானை நெஞ்சால் நினைத்தாலும் கெடுதியாமென்ற கொண்டிருந்த கொள்கை நீங்கி அப்பெருமான் விஷயத்திலேயே இன்று என்னெஞ்சு ஆழ்ந்து அவகாஹிக்கப்பெற்றதனால் நான் மஹாபாக்ய சாலியானேன் என்றாயிற்று.

இதென்ன விசித்திரம்; எம்பெருமானை நீசனேன் நெஞ்சால் நினைப்பதும் கெடுதல் என்று சில ஸமயங்களில் சொல்லுகிறார்; மற்றுஞ் சில ஸமயங்களிலோ ‘அவனை நினைப்பது மஹாபாக்யம்’ என்கிறார்; இவ்விரண்டு வார்த்தைகளும் ஒன்றோடொன்று சேரவில்லையே; ‘நினைத்தல் கூடும்’ என்பது ஸித்தாந்தமா? ‘கூடாது’ என்பது ஸித்தாந்தமா? என்று சிலர் சங்கிக்கக்கூடும். இரண்டும் ஸித்தாந்தமே யென்று கொள்ளக்கடவது. இப்படியுமுண்டோ? என்னில்; கேண்மின்; “நீசசனேன் நிறையொன்றுமிலோன்” என்னும்படியான தம்முடைய தாழ்வு நினைவுக்க வந்துவிட்டால், அப்போது, ‘நாயிலுங்கடை கெட்ட நாமோ பரம்பொருளை நினைப்பதற்கும் புகழ்வதற்கும் தகுதியுடையோம்? இதில் ப்ரவர்த்திக்க நமக்கு என்ன யோக்யதை?’ என்று பின்வாங்க வேண்டியதாகிறது. இதுவும் தகுதியே. எம்பெருமானடைய வடிவழகும் போக்யதையும் நோக்கப்படுமிடத்து நெஞ்சையும் வாயையும் கட்டிவைத்திருக்க முடிகிறதில்லை; பரவசமாகவே ப்ரவ்ருத்தி உண்டாய் விடுகிறது. அந்த ஆநந்தத்தினால் தலைதடுமாறாகக் கூத்தாடிக் கொண்ட “என்னில் மிகு புகழார் யாவரே” என்றும் “யானே தவஞ் செய்தேன்” என்றம் “எனக் காரும் நிகரில்லையே” என்றம் பலவாறு பேச வேண்டியதாகிவறது. இதுவும் தகுதியே. ஆகையால் இரண்டுக்குங் குறையில்லையென்க. ஆத்மஸமர்ப்பணம் பண்ணுகையும், பண்ணின பிறகு அநுதாபங் காட்டுதலுமாகிற இரண்டும் அவிருத்தமென்று கொள்வது போல இதனையுங் கொள்க.

English Translation

My heart is wedded to the Lord, my dark radiant Krishna, of ocean-like glory-flood effulgence.  Who in the world is more celebrated than we? Come to think, can there be such a one other than me?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain