nalaeram_logo.jpg
(2586)

புகழ்வோம் பழிப்போம் புகழோம் பழியோம்

இகழ்வோம் மதிப்போம் மதியோம்-இகழோம்

மற்றெங்கள் மால். செங்கண்மால். சீறல்நீ, தீவினையோம்

எங்கள்மால் கண்டாய் இவை.

பதவுரை

எம் கண்

-

எங்களிடத்தில்

மால்

-

வ்யாமோஹகத்தையுடைய

செம் கண் மால்

-

புண்டரீகாக்ஷனான பெருமானே,

புகழ்வோம்

-

(ஒருவராலும் புகழ்ந்து முடிக்கவொண்ணாத உன்னை அற்ப ஞானிகளான நாங்கள்) புகழ்தோமாகில்

பழிப்போம்

-

(அயோக்யர் புகழ்வது புகழ்ச்சியன்றாதலால் உன்னை நாங்கள் பழித்தவர்களாகவே ஆய்விடுவோம்;

புகழோம்

-

(இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு) புகழாதிருந்தோமாகில்

பழியோம்

-

உன்னைப் பழித்தவர்களாக ஆக மாட்டோம்;

மதிப்போம்

-

உன்னைச் சிறந்தவனாக நெஞ்சால் நினைத்தோமாகிலும்

இகழ்வோம்

-

உன்னை அகௌரவப்படுத்தினவர்களாக ஆய்விடுவோம்;

மதியோம்

-

அப்படி நெஞ்சால் நினையாதிருந்தோமாகில்

இகழோம்

-

அகௌரவப்படுத்தாதவர்களாக ஆவோம்;

(ஆக இப்படிப்பட்ட உண்மையை நாங்கள் நன்கு அறிந்திருந்தும் உன்னைப் புகழாமலாவது மதியாமலாவது இருக்கப் போகிறதில்லை; புகழ்வதும், மதிப்பதும் செய்யத்தான் போகிறோம்.)

நீ சீறல்

-

நீ கோபங்கொள்ளலாகாது;

இவை

-

புகழ நினைப்பதும் (பிறகு) புகழலாகாதென்று பின் வாங்குவதுமாகிற இவை

தீ வினையோம் எங்கள் மால் கண்டாய்

-

மஹாபாவிகளான எங்களுடைய ப்ரமமேயாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (புகழ்வோம்.) “நற்பூவைப் பூவின்றவண்ணன் புகழை நயப்படைய நாவீன் தொகை கிளவியுள் பொதிவோம்” என்று கீழ்ப்பாட்டில், எம்பெருமானைத் துதித்துக் கவிபாடுவதாகத் தொடங்கின ஆழ்வார் “இப்போது நாம் எடுத்துக்கொண்ட காரியம் என்ன?” என்று சிறிது ஆராய்ந்து பார்த்தார்; எம்பெருமானைப் புகழ்வது என்கிற காரியத்தையா நாம் எடுத்துக்கொண்டோம்; ஹா ஹா!’ இப்படியும் நமக்கொரு மதிக்கேடு இருக்குமோ? எம்பெருமானைப் புகழ்வது நம்முடைய காரியமாமோ? வேதங்களே புகழத் தொடங்கி முடியாதென்று மீண்ட விஷயத்தை ‘நாமோ புகழக்கடவோம்! ஒருவனைப் புகழ்வதென்றால், அவனிடத்துள்ள குணங்களை யனைத்தையும் ஒன்றுவிடாமற் சொல்லித் தீர்த்து, மேலேயும் சில குணங்களை அதிகப்படியாக இட்டுச் செல்லுவதன்றோ புகழ்வதாவது; எம்பெருமானிடத்து அது செய்ய ஆரால் ஆகும்? சிற்றறிவாளரான நாம் என்ன சொல்ல வல்லோம்!; “கேழ்த்த சீர் அரன்முதலாக்கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து, சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல்புகழ் மாசூணாதே” (திருவாய்மொழி 3-1-7) என்னுமாபோலே அறிவிற்சிறந்த அரன் முதலானோர் புகழ்ந்தாலுங்கூட அது பகவத் குணங்களுக்கு இகழ்ச்சியாய் தலைக்காட்டா நிற்க, எமது ஊத்தை வாய்கொண்டு பேசுவது என்னாகும்! “பகவானுடைய குணங்கள் இந்த அற்பன் பேசும்படியான அளவிலேயோ இருக்கின்றன?” என்று பலரும் இழிவாக நினைக்கவன்றோ காரணமாகும் நாம் புகழ்வது- என்றெண்ணி அந்த எண்ணத்தை வெளியிடா நின்று கொண்டு எம்பெருமானை நோக்கிச் சொல்லுகிறார் இதில்.

புகழ்வோம் பழிப்போம் = திருமாலே! உன்னை நான் புகழ்ந்தேனாகில் பழித்தவனாவேன்; என்னுடைய புகழ்ச்சி உனக்குப் பழிப்பேயாம் என்றபடி. ஆசாரிஹீநனான ஒருபயல் வஸிஷ்டனைப் பற்றிப் பேசத் தொடங்கி ‘வஸிஷ்ட முனிவர் நல்ல ஆசாரசீலர்’ என்று புகழ்வதானது எப்படியோ, அப்படியேயன்றோ குணஹீகனான நீசனேன் குணக்கடலாகிய தேவரீரைப் புகழ்வதும். புகழோம் பழியோம் = நான் தேவரீரைப் புகழாதிருக்க பக்ஷத்தில் பழித்தவாக ஆகமாட்டேன். இவ்வர்த்தம் “புகழ்வோம் பழிப்போம்” என்றதிலேயே கிடைக்கக் கூடுமானாலும் ஸுஸ்பஷ்டமாகச் சொல்ல விரும்பினரென்க. உன் திருநாமத்தையே நான் எடுக்காதிருப்பின் யாதொரு பழிப்புமில்லை யென்றவாறு.

இகழ்வோம் மதிப்போம் = ‘மதிப்போ மிகழ்வோம்’ என மாற்றி அந்வயித்துக்கொள்வது. இதன் கருத்தாவது- வாய்விட்டுப் புகழ்வதென்கிற விஷயம் அப்படி கிடக்கட்டும்; தேவரீரை நாயினேன் நெஞ்சால் நினைப்பதாவது தகுதியோ என்று பார்த்தால், அதற்கும் யோக்யதையில்லை; நெஞ்சால் நினைப்பதுதானும் இகழ்ந்தவாறாகும் என்றபடி. மதியோம் இகழோம் = உன்னை நான் நெஞ்சாலும் நினையாதிருக்கில் இகழ்ந்தவனாக ஆகமாட்டேனென்கை.

ஆழ்வார் இப்படி சொன்னதும், எம்பெருமான் திருவுள்ளஞ் சீறிக்கண்சிவந்து நின்றான்; ஏனென்னில்; ‘திருநாவீறுடைய பிரானாகிய இவ்வாழ்வார் ஏதோ பாசுரம் சொல்வதாகத் தொடங்கினாரே,  நல்லது, செவிக்கு இனிதாகக் கேட்போம்’ என்று மிக்க ஆசை கொண்டிருந்தான் எம்பெருமான்; அந்த ஆசை  *ஊமனார்கண்ட கனவிலும் பழுதா யொழியும்படி ஆழ்வார் அயோக்கியதாநுஸந் தாகம் பண்ணி, ‘நான் புகழத்தகாது, நெஞ்சால் நினைகக்வுந் தகாது’ என்று பேசவே உண்ணுஞ் சோற்றை எதிர்பார்த்திருந்த பசியனுக்குச் சோறு  தடுமாறிப் போனால் கண் சிவந்து கோபமுண்டாவது போல எம்பெருமானுக்கும் * செவிக்கினிய செஞ்சொல் கேட்டுக்களிக்கப் பாக்கியமில்லாமற் போகிறதேயென்று கோபம் மேலிட்டுக் கண்கள் சிவந்தன; அந்த நிலைமையைக் கண்ட ஆழ்வார் “எங்கண்மால் செங்கண்மால்” என விளிக்கின்றார் பிரானே! நீ எங்களிடத்து இயற்கையாகவே வ்யாமோஹ முடையவனல்லையோ; இப்படி கண்கள் சிவக்கச் சீறலாமோ? என்ற கருத்து உள்ளுறை.

செங்கண்மால்! என்று ஆழ்வார் அழைத்தவாறே எம்பெருமான் “ஒய்! என்னை எதுக்கு அழைக்கிறீர்?  என்னை நெஞ்சால் நினைத்தாலும் இகழ்ந்தாகும் என்று சொல்லிவிட்டீரே; அப்படியிருக்க, என்னை நெஞ்சாலும் நினைத்து வாயாலும் ஏன் அழைக்கிறீர்? போம் போம்” என்று சீற்றந் தோற்றமுகத்தை மாறவைத்தான்; ஆழ்வார் அது கண்டு சீறல்  நீ  என்கிறார்; நாயனே! அநந்ய கதியான என்மேலோ நீ சீறுவது; சீறவேண்டா என்கை.

“புகழ்வோம் பழிப்போம் புகழோம் இகழ்வோம் மதிப்போம்- மதியோ மிகழோம்” என்று வெகு அழகாக நீர் சொன்ன வார்த்தைக்கு நான் சீறாமலுமிருக்க வேணுமோ? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஸமாதானம் போல் “தீவினையோம் எங்கண்மால் கண்டாயிவை” என்கிறார் இதன் கருத்து:- தேவரீரைப் புகழ்வோமென்றால் என்னுடைய அந்தராத்மா சீறுகிறது; புகழாதிருப்போமென்றால் தேவரீர் சீறுகிறது; இந்தப் பாவத்திற்கு என்ன பண்ணுவேன்; இது பெரிய தீவினையாயிரா நின்றதே! ஒரு விதத்தில் பார்த்தால் தேவரீரைப் புகழ நா எழும்பவில்லை; ஒரு விதத்தில் பார்த்தால் புகழாதிருக்க முடியவில்லை; ஆகையாலே, புகழவேண்டியதாயுமிருக்கிறது; நாமோ புகழ்வதென்று பின்வாங்க வேண்டியதாயுமிருக்கிறது; இது என்னுடைய ப்ராந்தி நிலைமைகாணீர்* யான் என்ன செய்வேன் என்றாயின்று. பின்னடிகளின் கருத்தை வேறுவகையாகவும் உரையிடலாம்.

English Translation

O Adorable Lord with lotus-red eyes!  We may praise or not praise, we may blame or not blame, we may reverse or not revere, we may revile or not revile.  Pray do not get angry.  Though we are sinners, these are love-offerings, note!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain