nalaeram_logo.jpg
(2585)

முயற்றி சுமந்தெழுந்து முந்துற்ற நெஞ்சே,

இயற்றுவாய் எம்மொடுநீ கூடி,-நயப்புடைய

நாவீன் தொடைக்கிளவி யுள்பொதிவோம், நற்பூவைப்

பூவீன்ற வண்ணன் புகழ்

பதவுரை

முயற்சி சுமந்து

-

எம்பெருமானைப் பற்றிப் பேசுகையிலே உத்ஸாஹம் பூண்டு

எழுந்து

-

கிளம்பி

முந்துற்ற நெஞ்சே

-

(அவ்விஷயத்தில் என்னைவிட) முற்பட்டிருக்கிற மனமே!

நீ எம் எம்மொடு கூடி

-

நீ (தனிப்பட்டுப் போகாமல்) என்னோடு சேர்ந்து

இயற்றுவாய்

-

காரியத்தை நடத்த வேணும்; (நாம் இருவருஞ் சேர்ந்து நடத்த வேண்டிய காரியம் என்னவென்றால்)

நல் பூவைப்பூ ஈன்ற வண்ணான்

-

(அழகிய காயாம் பூவிலுண்டான நிறம் போன்ற நிறத்தையுடையனான எம்பெருமானுடைய

புகழ்

-

திருக்கல்யாணகுணங்களை

நயப்பு உடைய

-

அன்பு பொதுந்திய

நா ஈன்

-

நாவினாலே கவனஞ் செய்யப்படுகிற

தொடை கிளவியுள்

-

சேர்க்கைப் பொருத்தமுடைய சொற்களிலே

பொதிவோம்

-

அடக்குவோமாக.

(இதுவே நீயும் நானும் சேர்ந்து செய்ய வேண்டிய காரியம்.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (முற்றுசுமந்து.) ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப் பேசுகிறார். தமது நெஞ்சானது தம்மைவிட்டுத் தனித்துப் போய்விட்டதாம் பகவத் விஷயாநுபவத்திற்கு; அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூறி ‘என்னையுங் கூடக் கூட்டிக்கொள்’ என்கிறார்.

நெஞ்சு பிரிந்து போய்விட்ட தென்பதும் அதனை அழைத்து வார்த்தை சொல்லுகிறதென்பதும் அஸம்பாவிதமன்றோ? நெஞ்சு போய்விட்டதென்றால் வார்த்தையே சொல்ல முடியாதன்றோ; நெஞ்சு நினைத்ததையன்றோ வாய் சொல்லும்; “முந்துற்ற நெஞ்சே; இயற்றுவாய் எம்மொடு நீகூடி; என்று இப்போது சொல்லுகிற ஆழ்வார் நெஞ்சு அற்றவரென்று எப்படிக் கொள்ள முடியும்? நெஞ்சோடு கூடியிருந்ததுதானே இந்த வார்த்தை சொல்லியிருக்க வேண்டும்; அப்படியிருக்க “முந்துற்ற நெஞ்சே!- நீ எம்மொடுகூடி இயற்றுவாய்” என்று அருளிச் செய்வது எங்ஙனே பொருந்தும்? என்று சங்கிக்க வேண்டா; தம்மிற்காட்டில் நெஞ்சை வேறபடுத்திச் சொல்லுதல் கவிமா நெஞ்சை வேறுபடுத்திச் சொல்லுதல் கவிமரபு. நெஞ்சைத் தூது விடுவதாகவுஞ் சொல்லுவர்களிறே. நல்ல விஷயங்களைச் சொல்லிக்கொண்டு போது போக்குவதற்கு இவ்விருள் தருமாஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல் உண்டியே உடையே உகந்தோடு கிறவர்களாயிருப்பதால்,  உசாந்துணையாவது நெஞ்சு தவிர வேறில்லாமல் அந்த நெஞ்சை நோக்கித்தானே வார்த்தை சொல்ல வேண்டும். “யானும் என்னெஞ்சும் இசைந்தொழிந்தோம்” என்று மேலே அருளிச் செய்யப் போகிறார். ஆகையாலே நெஞ்சை விளித்து வார்த்தை சொல்லுவதென்பது பக்தர்களுக்கு ஒரு நற்போது போக்காக அமைந்ததாம். நெஞ்சு பிரிந்து போயிற்றதாகச் சொல்வதும் அப்படியே; நெஞ்சுவிடுதூதாகச் சொல்வதும் அப்படியே. இது நிற்க.

இப்பாட்டின் கருத்தை ஆழ்வார்க்கும் நெஞ்சுக்கும் ஸம்பாஷணையாக வைத்து எழுதுவோம்;-

ஆழ்வார்:- ஓ நெஞ்சே! நீ எனக்கும் முன்னாடி வெகு உத்ஸாஹமாகக் கிளம்புகிறாயே; என்ன செய்யப் போவதாக உத்ஸாஹங் கொண்டிருக்கிறாய்?

நெஞ்சு: ஆழ்வீர்! நான் பகவத் விஷயத்திலே அவகாஹிக்கப்போகிறேன்; அதில் எனக்கு வெகு உத்ஸாஹமிருப்பதால் என்னைத் தடை செய்ய வேண்டா.

ஆழ்வார் :- உன்னை யாரும் தடை செய்வாரில்லை; என்னோடே சேர்ந்து காரியம் நடத்தினாயாகில் நல்லது என்று வேண்டிக் கொள்ளுகிறேன்.

நெஞ்சு:- நீர் செய்வதாக உத்தேசித்திருக்கும் காரியம் யாது? நான் மேற்கொண்ட காரியத்தோடு அது விரோதப்படாத காரியமாயிருந்தால் பார்ப்போம்.

ஆழ்வார்:- நீ கொண்ட காரியமே நானும் கொண்டது; வேறில்லை; காயாம்பூப்போல் அழகிய கறுத்த திருநிறமுடையனான எம்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களை நல்ல சொல் தொடைகளிலே சேர்த்துப்பாடி அநுபவிக்கப் பாரிக்கின்றேன்; அதற்கு நீ துணை செய்ய வேணும் - என்கிறார்.

முயற்சியாவது முயற்சி; அதனைச் சுமப்பதாவது மேற்கொள்ளுகை; ப்ரயத்னப்படுகை என்றபடி... இயற்றுதல்- காரியம் நடத்துதல்.

நயப்புடைய= (நயப்பாவது - ஆசை.) இந்த விசேஷணம் நாவிலும் அந்வயிக்கலாம்; கிளவியிலும் அந்வயிக்கலாம். எம்பெருமானைத் துதிக்க ஆசைக்கொண்ட நாக்கினால் கவனம் செய்யப்படுகிற என்றபடி, கிளவியில் அந்வயிருக்கும்போது- அன்பு மிகுதியினாலுண்டாகிற சொற்கள் என்றதாம். நாவீன் என்றவிடத்து ஈனுதலாவது உண்டாக்குதல்.

தொடை கிளவியுள்- ***- பதாநாம் ஸௌப்ராத்ராதிநிமிஷநி ஷேல்யம் ச்ரவணயோ:” (ஸ்ரீகுணரத்நகோசம்) என்றபடி- பதங்களுக்கு ஒன்றோடொன்று அமையும் சேர்த்தி பழகுக்குத் தொடை என்று பெயர்.  ஆகவே, சேர்த்தியழகு பொருந்திய இனிய சொற்களிலே பகவத்குணங்களை அமைத்துப் பாடும்படி நெஞ்சே! நீ அநுகூலிக்க வேணுமென்றதாயிற்று. இப்பிரபந்தம் முழுவதும் வெண்பாவினாலமைந்தது.

English Translation

O Heart Surging forward with eagerness! Come join me in writing this poem. Together let us weave the glories of lthe hue-of-kaya-flowers-Lord with the string of passionate words issuing from the tongue.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain