nalaeram_logo.jpg
(2581)

ஊழிதோறூழி ஓவாது வாழியே, என்று யான்தொழ இசையுங் கொல்?,

யாவகை யுலகமும் யாவரு மில்லா, மேல்வரும் பெரும்பாழ்க் காலத்து, இரும்பொருட்

கெல்லா மரும்பெறல் தனிவித்து, ஒருதான் ஆகித் தெய்வ நான்முகக் கொழுமுளை

ஈன்று, முக்கண் ஈசனொடு தேவுபல நுதலிமூ வுலகம் விளைத்த உந்தி,

மாயக் கடவுள் மாமுத லடியே.

பதவுரை

யாவகை உலகமும்

-

எவ்வகைப்பட்ட லோகங்களும்

யாவரும்

-

எவ்வகைப்பட்ட பிராணிகளும்

இல்லா

-

இல்லாமலிருந்த

மேல்வரும் பெரு பாழ் காலத்து

-

கீழ்க்கழிந்த மஹா ப்ரளய காலத்தில்

இரு பொருட்கு எல்லாம்

-

எண்ணிறந்த ஆத்ம வஸ்துக்களுக்கெல்லாம்

பெறல் அருதனி ஒரு வித்து தான் ஆகி

-

பெறுதற்கரிய மூவரைக் காரணமும் தானேயாய்க்கொண்டு

தெய்வம் நான் முகன் கொழு முளை ஈன்று

-

நான்முகக் கடவுளாகிற சிறந்த ஒரு முனையைப் படைத்து

முக்கண் ஈசனோடு பல தேவு நுதலி

-

முக்கண்ணனான சிவன் முதலி பல தேவங்களை உண்டாக்கி (ஆக இவ்வகையாலே)

மூ உலகம் வளைத்த உந்தி

-

மூன்று லோகங்களையும் உண்டாக்கின திரு நாபியையுடையவனாய்

மாயன்

-

ஆச்சர்யபூதனாய்

கடவுள்

-

ஸர்வோத்தமனான ஸ்ரீமந்நாராயணனுடைய

மா முதல் அடியே

-

(உஜ்ஜீவனத்திற்கு) மூலகாரணமான திருவடிகளையே

ஊழி ஊழி தோறு

-

ஸர்வகாலமும்

ஓவாது

-

இடைவிடாமல்

வாழிய என்று யாம் தொழ இசையும் கொல்

-

‘வாழ்ந்திடுக‘ என்று நாம் சொல்லி வணங்கும்படியாக (பாக்கியம்) வாய்க்குமோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (ஊழிதோறூழி) கீழ்ப்பாட்டில் தனிமாத் தெய்வத் தடியவர்க்கிணை நாமாளாகவே இசையுங்கொல்“ என்று பாகவத சேஷத்வம் நமக்குக் கிடைக்குமா? என்று மனோரதித்தார், பாகவதர்களை அநுவர்த்தித்துப் பார்த்தார், அவர்கள் எப்போதும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு... உன சேவடி செவ்வி திருக்காப்பு“ என்று எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநம் செய்வதையே தொழிலாகக்  கொண்டிருந்தார்கள், அதைப்பார்த்து ‘இவர்களுடைய காலக்ஷேபமேயன்றோ நமக்கு உத்தேச்யம், இவர்களோ இடைவிடாது எம்பெருமான் திருவடிகளுக்கு மங்களாசாஸநமே பண்ணிக்கொண்டிரா நின்றார்கள். இது மிக அழகாயிராநின்றது இப்படிப்பட்ட போதுபோக்கு நமக்கும் கிடைக்குமாகில் நலமாயிருக்குமே!‘ என்று கொண்டு, அப்படிப்பட்ட பாக்கியம் வாய்க்குமா என்கிறார் இதில்.

யாவகையுலகமும் என்று தொடங்கி மாயக்கடவுள் என்னுமளவும் எம்பெருமானுடைய பெருமையைப் பேசுகிறார். “பன்மைப் படர் பொருளாதுமில்பாழ் நெடுங்காலத்து நன்மைப்புனல்பண்ணி நான்முகனைப் பண்ணித் தன்னுள்ளே, தொன்மைமயக்கிய தோற்றிய சூழல்கள் சிந்தித்தே“ என்ற பாசுரம் இங்கு ‘அநுஸந்திக்கத்தகும். சேதந வர்க்கங்களிலும் அசேதநவர்க்கங்களிலும் ஒன்றுமில்லாதபடி மஹாப்ரளயங் கோத்தகாலத்தில், தேவமநுஷ்யாதி ரூபத்தாலே எண்ணிறந்தவைகளாய் அசித்தோடே கலசிக்கிடப்பவையான ஜீவயஸ்துக்களுக்கெல்லாம் தானே காரணமாயிருப்பவன் எம்பெருமான்.

தனிவித்து ஒரு தனாகி – தான் ஒரு தனிவித்தாகி என்று அந்வயிப்பது. லித்தாகி என்னாமல் ஒரு லித்தாகி என்னாமல் ஒரு தனிவித்தாகி என்றதனால் – நிமித்தகாரணம் ஸஹகாரி காரணம் உபாதான காரணம் என்கிற மூவகைக் காரணங்களும் எம்பெருமான் தானேயாகிறான் என்று தெரிவிக்கப்பட்டதாயிற்று. உலகில் குடம் துணி முதலிய வஸ்துக்கள் ஜனிக்கவேணுமானால் மேற்சொன்ன முக்காரணங்களும் அமையவேண்டும், பானைக்கு மண் உபாதான காரணமென்றும், சக்கரம் தடி தண்ணீர் முதலியவை ஸஹகாரிகாரணமென்றும், குயவன், காலம், அத்ருஷ்டம் முதலியன் நிமித்தகாரணமென்றும் சொல்லப்படும். கார்யவஸ்துக்களுக்கெல்லாம் இப்படிப்பட்ட காரணங்கள் இருந்தாக வேண்டுமாகில் பிரபஞ்சமாகிற காரியத்திற்கு எது உபாதானகாரணம்? எது ஸஹகாரி காரணம்? எது நிமித்தகாரணம்? என்று கேள்வி பிறக்குமே, எம்பெருமான்றானே மூவகைக் காரணமுமாகிறானென்பது வேதாந்திகளின் கொள்கை. இஃது இங்கு விரிப்பிற் பெருகும்.

மேல்வரும் என்பதற்கு, கீழே கழிந்த என்று பொருள் கொள்ளுதல் விபரீதலக்ஷணை யினாலென்க. இங்கு வியாக்யான ஸ்ரீஸூக்கி – “மேலென்றது பண்டென்றபடி, வருமெறது போனவென்றபடி.

அரும்பெறல் என்றது நிர்ஹேகத்வத்தைக் காட்டும். இப்படிப்பட்ட விலக்ஷணமான தொரு காரண வஸ்துவானது ஸம்ஸாரிகளிடத்திலுள்ள கிருபையினால் தானாகவேவந்து முகங்காட்டிக் காரியம் செய்த்தென்கை. அன்றி, ஒருவகை முயற்சியால் பெறமுடியாதது.

அத்வாரக ஸ்ருஷ்டியென்றும் ஸத்வராக ஸ்ருஷ்டியென்றும் ஸ்ருஷ்டி இருவகைப்படும். எம்பெருமான் தானே ஸ்ருஷ்டிப்பது அத்வாரகஸ்ருஷ்டியாம், ஒருவன் மூலமாக ஸ்ருஷ்டிப்பது ஸத்வராக ஸ்ருஷ்டியாம். அண்டஸ்ருஷ்டி வரையில் தானே ஸ்ருஷ்டிப்பதாதலால் அது அத்வாரகஸ்ருஷ்டி இவ்வருகுள்ளவற்றை நான்முகன் மூலமாக ஸ்ருஷ்டிக்கிறானாகையாலே இவற்றின் ஸ்ருஷ்டி ஸத்வாரகஸ்ருஷ்டி. இதைச் சொல்லுகிறார்மேல் தெய்வநான்முகக்கொழுமுளையீன்று என்று. கப்பும் கிளையுமு காயும் கனியும் முளையினின்று உண்கிறபடியால் நான்முகன் இங்கு ஒரு முளையாகக் கூறப்பட்டான் கொழுமுளை என்றது சிறந்த அங்குரம் என்றபடி. இப்பாலுள்ள கார்யவர்க்கங்களையெல்லாம் உண்டாக்குகைக்குப் பாங்கான யோக்யதையை யுடையவன் பிரமன் என்றவாறு.

“நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனுந் தான்முகமாய்ச் சங்கரனைத்தான் படைத்தான் என்றபடி பிறகு அடைவே பல தேவதைகளையும் ஸ்ருஷ்டித்தனனாதலால் தேவபலநுகலி என்றும் அருளிச்செய்தார். ஆக, ஸத்வாரகஸ்ருஷ்டியாலே உண்டாக்கின ஸகலவஸ்துக்களுக்கும் மூலகந்தம் திருநாபியாகையாலே மூவுலகம் விளைத்தவுந்தி என்றார். இப்படிப்பட்ட திருவுந்தியையுடைய மாயக்கடவுளுண்டு –ஆச்சரியமான ஞானசக்திகளுடையனான ஸரவேச்வரன் அவனுடைய திருவடிகளை, ஊழிதோன்றி யோவாது வாழியவென்று யாக தொழ விசையுங்கொல்.

அந்தத்திருவடிகளை ச்ரமப்டுத்திக் காரியங் கொண்டவர்களைப்போலே நாமும் ஆகாமல் அவற்றுக்குப் பல்லாண்டுபாடப் பெறவேணும். வாழிய – வியங்கோள்வினை முற்று.

English Translation

In the great deluge when all the worlds and all the gods disappeared, the Lord became the precious seed for all that existed, then sprouted a stalk and created the four-faced Brahma, then the three-eyed Siva and the various gods.  Will we experience the joy of relentlessly praising the wonder-lord, the lord with lotus on his navel that made all the worlds, through age after age?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain