nalaeram_logo.jpg
(2578)

செக்கர்மா முகிலுடுத்து மிக்க செஞ்சுடர்ப் பரிதிசூடி, அஞ்சுடர் மதியம்பூண்டு,

பலசுடர் புனைந்த பவளச் செவ்வாய், திகழ்பசுஞ்சோதி மரகதக் குன்றம்,

கடலோன் கைமிசைக் கண்வளர்வதுபோல், பீதகஆடை முடிபூண் முதலா

மேதகு பல்கலன் அணிந்து, சோதி வாயவும் கண்ணவும் சிவப்ப, மீதிட்டுப்

பச்சைமேனி மிகப்பகைப்ப, நச்சுவினைக் கவர்தலை அரவி னமளியேறி,

எறிகடல்நடுவுள் அறிதுயில் அமர்ந்து சிவனிய னிந்திரன் இவர்முதலனைத்தோர்

தெய்வக் குழாங்கள் கைதொழக் கிடந்த தாமரை யுந்தித் தனிப்பெரு நாயக

மூவுலகளந்த சேவடி யோயே.

பதவுரை

பவளம் செம் வாய்

-

பவழங்களாலே சிவந்த இடங்களையுடையதும்

திகழ் பசும் சோதி

-

விளங்குகின்ற பசுமையான நிறத்தையுடையதுமான

மரகதம் குன்றம்

-

ஒரு பச்சை மாமலையானது,

செக்கர் மா முகில் உடுத்து

-

சிவந்த பெரிய மேகத்தை அரையில் உடுத்துக் கொண்டும்

மிக்க செம் சுடர் பரிதி சூடி

-

மிகவும் சிவந்த தேஜஸ்ஸையுடைய ஸூர்யனை சிரஸ்ஸில் அணிந்து கொண்டும்

அம்சுடர் மதியம் பூண்டு

-

குளிர்ந்த ஒளியையுடைய சந்திரனைக் கண்ட பூக்ஷணமாக அணிந்து கொண்டும்

பல சுடர் புனைந்து

-

(நக்ஷத்திரங்களாகிற) பல தேஜஸ்பதார்த்தங்களையும் (பலவகை ஆபரணங்களாக) அணிந்து கொண்டும்

கடலோன் கைமிசை

-

கடலரசனுடைய கைமேலே

கண்வளர்வதுபோல்

-

படுத்துக்கொண்டிருப்பதுபோல

பீதக ஆடைமுடி பூண் முதலா மேதகு பல்கலன் அணிந்து

-

பீதாம்பரம், திருவபிஷேகம் கண்டிகை முதலான சிறந்த பல திருவாபரணங்களைச் சாத்திக்கொண்டு

சோதி வாயவும் கண்ணனும் சிவப்ப

-

அழகிய வாயும் கண்களும் சிவந்திருக்கப்பெற்று

பச்சை

-

பசுமையான

மேனி

-

திவ்யமங்கள விக்ரஹத்தின் நிறமானது

மீதிட்டு மிக பகைப்ப

-

மற்ற ஒளிகளெல்லாவற்றிற் காட்டிலும் மேலோங்கி மற்ற ஒளிகளோடு போர் செய்துகொண்டு விளங்கப்பெற்று

எறிகடல் நடுவுள்

-

அலையெறிகின்ற கடலினிடையே

நஞ்சு வினை

-

விஷத் தொழிலையும்

கவர் தலை

-

கப்புவிட்டுக் கிளர்கின்ற(பல) தலைகளையுமுடைய

அரவு

-

திருவனந்தாழ்வானாகிற

இன் அமளி ஏறி

-

போக்யமான சயனத்தின் மீது ஏறி

அறி துயில் அமர்ந்து

-

யோகநித்திரையில் அமர்ந்து

சிவன் அயன் இந்திரன் இவர் முதல் அனைத்தோர் தெய்வம் குழாங்கள்

-

சிவன் பிரமன் இந்திரன் முதலிய எல்லாத் தேவ ஸமூஹங்களும்

கை தொழ கிடந்த

-

ஸேவிக்கும்படியாகப் பள்ளிகொண்டிருக்கிற,

தாமரை உந்தி தனி பெரு நாயக

-

தாமரைப் பூவைத் திருநாபியிலே உடைய அத்விதீய ஸர்வேச்வரனே!

மூ உலகு அளந்த

-

மூன்று லோகங்களையும் அளந்த

சே அடியோய்

-

அழகியதிருவடிகளை யுடையவனே! (வாழ்ந்திடுக!)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- [செக்கர்மாமுகில்.] ஆழ்வார், கீழ்ப்பிரபந்தமாகிய திருவிருத்தத்தின் முதற்பாட்டில் “அழுக்குடம்பும்” என்று தம்முடைய சரீரத்தின் தண்மையைப் பேசினார்; இந்த முதற்பாட்டில் எம்பெருமானுடைய திருமேனியின் வைலக்ஷண்யத்தி லீடுபட்டுப் பேசுகிறார். அப்ராக்ருதமாய் ஒப்புயர்வற்றதான பகவத் திவ்யமங்கள விக்ரஹத்திற்கு ப்ராக்ருத வஸ்துக்களிலே ஒன்றை உபமானமாக எடுத்துக்கூறுவதானது  ஒட்டுரைத் திவ்வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும், பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ  என்றபடி அவத்யமேயாயினும், ஓர் உபமானத்தையிட்டே அநுபவித்துத்தீர வேண்டியிருப்பதாலும், வேதாந்தங்களிலும் அப்படியே உபமானங்களையிட்டே நிரூபித்திருப்பதாலும் இவ்வாழ்வார்தாமும் இங்கு ஓர் உபமானத்தை யிட்டுப்பேசி அநுபவிக்கிறார்.

‘ப்ரஸித்தோபமை’ என்றும் ‘அபூதோபமை’ என்றும் உவமை இரண்டு வகைப்படும்; முகம் சந்திரனைப் போன்றது-திருவடி தாமரையைப் போன்றது-என்றிங்ஙனே பேசுதல் ப்ரஸித்தோபமையாம்; இனி அபூதோபமையாவது-தமிழில் இல்பொருளுவமை எனப்படும். ப்ரஸித்தமல்லாத ஒரு விஷயத்தைக் கவிகள் தம் புத்திசமத்காரத்தாலே ஏற்படுத்திக்கொண்டு அதனை த்ருஷ்டாந்தமாக்கிக் கூறுதல் அபூதோபமையாம். இப்படிப்பட்ட அபூதோபமையைக் கூறுவதன் கருத்து- உபமேயப் பொருளானது ஒப்பற்றது என்பதைத் தெரிவிப்பதேயாம்.

இப்பாசுரத்தில் அபூதோபமை வருணிக்கப்படுகிறது. எம்பெருமான் திருவரையில் திருப்பீதாம்பரம் சாத்திக்கொண்டும் திருமுடியில் திருவபிஷேகமணிந்து கொண்டும் இப்படியே மற்றும் பலபல திருவாபரணங்களைப் பூண்டுகொண்டும், செந்தாமரை போன்ற திருவாயும் திருக்கண்களும் விளங்கவும், ச்யாமமான திருமேனிநிறமானது மற்ற சோபைகளெல்லாவற்றையுங்காட்டில் விவேக்ஷித்து விளங்கவும் கடலினிடையே திருவனந்தாழ்வானெனும் திருவணையின் மீதேறித் திருக்கண்வளர்ந்தருளாகிறபடிக்கு த்ருஷ்டாந்தமாக வருணிக்கப் பொருத்தமான பிரஸித்தோபமை ஒன்றில்லாமையால் அபூதோபமை அருளிச்செய்கிறார். மரகதப்பச்சை மயமான ஒரு மலையானது செந்நிறமான மேகத்தைப் பீதகவாடையாக உடுத்துக்கொண்டும், கிரீடத்தின் ஸ்தானத்திலே ஸூர்யனை அணிந்து கொண்டும், கண்டிகை ஸ்தானத்திலே சந்திரனை அணிந்துகொண்டும்,

முத்துஸரம் முதலான மற்றும் பல திருவாபரணங்களின் ஸ்தானத்திலே நக்ஷத்திரங்களைப் புனைந்துகொண்டும் திரு அதரம் திருக்கண்களின் ஸ்தானத்திலே பவழமயமான பிரதேசங்களையுடைத்தாகியும் ஒரு கடலிலே பள்ளி கொண்டிருந்தால் எப்படியிருக்குமோ அப்படியிராநின்றது தேவரீர் திருக்கோலமுந்தாமுமாகத் திருப்பள்ளி கொண்டருளுகின்றமை-என்றாராயிற்று.

செக்கர் என்று சிவப்பு நிறத்துக்கும் செவ்வானத்துக்கும் பெயர்; இங்கே, சிவந்த மேகமென்றும், செவ்வானத்தில் தோன்றிய மேகமென்றும் பொருள் கொள்ளலாம். மேகங்கள் மலைச்சாரலிற் படியுமாதலாலும், செக்கர்மாமுகில் படிந்திருந்தால் பீதகவாடையுடுத்தாற்போலிருக்கு மாதலாலும் “செக்கர்மா முகிலுடுத்து” எனப்பட்டது. எம்பெருமான் உபமேயம்; மலை உபமானம்; பீதாம்பரம் உபமேயம், செக்கர்மாமுகில் உபமானம்.

“கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்த நீண்முடியன்” என்று திருவபிஷேகத்திற்கு ஸூர்யனை ஒப்புச் சொல்லுவதுண்டாதலால் “மிக்கசெஞ்சுடர்ப் பரிதிசூடி”  எனப்பட்டது. எம்பெருமானுடைய கிரீடத்திற்கு ஸாதாரண ஸூர்யன் உபமானமாகப் போராமையால்

மிக்க செஞ்சுடர் என விசேஷிக்கப்பட்டது. பரிதி என்கிற வடசொல் ஸக்ஷாத்தாக ஸூர்யனைச் சொல்லாதாகிலும் தமிழில் இலக்கணையால் ஸூர்யனுக்குப் பேராயிருக்கும். இங்கு உபமானமாகிய மலை ஸூர்யமண்டலம் வரை ஓங்கியிருப்பதாகக் கொண்டால் ஸூர்யன் கிரீடத்தின் ஸ்தானத்திலே ஆவன்.

மார்பில் அணிந்துகொள்ளும் ஆபரணங்களில் ‘சந்த்ரஹாரம்’ என்பது ஒன்று; அது சந்திரன் வடிவமாக அமைக்கப்படுமாதலால் அப்பெயர் கொண்டதாகிறது. சந்திரனுக்கு மலையினோடு ஸம்பந்தம் கீழ்ச்சொன்னபடியிலேயாம்: ஸூர்ய சந்த்ர மண்டலம் வரையில் ஓங்கின மலை என்று கொள்க. மதி-சந்திரன்; அம்-சாரியை.

பலசுடர் என்றது ஆகாசத்திலுள்ள மற்றும் பல நக்ஷத்ராதி தேஜஸ் ஸமூஹங்களைச் சொன்னபடி. திருவாபரணங்களில் நக்ஷத்ரஹார மென்பதுமொன்று. புனைந்த என்று பாடமானபோது பெயரெச்சமாகி மரகதக்குன்றத்திற்கு விசேஷணமாகக்கடவது!

பவளச்செவ்வாய்- ‘ப்ரவாளம்’ என்ற வடசொல் பவளமெனத் திரியும். வாய் என்று இடங்களைச் சொன்னபடி. மலையிற் பல இடங்களில் பவளமுண்டாதலால் பவளங்களாற் சிவந்த இடங்கள் “கைவண்ணந்தாமரை வாய்கமலம் போலும்கண்ணிணையுமரவிந்தம் அடியுமஃதே” என்றும் “பவளவாய் கமலச்செங்கண்” என்றும் சொல்லப்படுகிற திவ்ய அவயவங்களுக்கு உபமானமாகக்கூறப்பட்டன.

திகழ்பசுஞ்சோதி மரகதக்குன்றம்- பசுமை நீலம் கருமை என்ற நிறங்களை அபேதமாகக்கூறுவது கவிமரபாதலால் எம்பெருமானுடைய காளமேகத்திருவுருவத்திற்கு மரகதக் குன்றத்தை[-பச்சைமாமலையை] உவமை கூறினார். ஸாதாரண மலையானது எம்பெருமானுடைய துளக்கலாகாநிலைக்கும் வளர்த்திக்கும் ஒப்பாகுமேயன்றி, காணப்புக்கவர்களின் கண்ணையும் நெஞ்சையும் குளிர்வித்து அவர்களுடைய ஸம்ஸாரபந்தங்களை யெல்லாம் போக்குந்தன்மையும் எப்போதும் தியானஞ்செய்வதற்கு உரியதாயிருத்தலும் பெருங்கருணைக்கு இருப்பிடமாயிருத்தலும் முதலிய குணவிசேஷங்களில் ஒப்பாகமாட்டாமையால், திகழ்பசுஞ்சோதி மரகதம் என்று குன்றம் விசேஷிக்கப்பட்டது. ஆக இப்படிப்பட்டதொரு குன்றம் உலகில் எங்குமில்லை; இருந்தாலும் அது கடலோன்கைமிசைக் கண்வளர்வது அஸம்பாவிதம்; ஆக இத்தனையும் ஸம்பாவிதமாகில் எம்பெருமான்படிக்குப் போலி சொல்லலாமாய்த்து.

செக்கர்மா என்று தொடங்கி, கண்வளர்வது என்னுமளவும் உபமானத்தை சிக்ஷித்து முடித்து, இனி பீதகவாடை என்று தொடங்கி உபமேயமான எம்பெருமானுடைய அநுபவத்தில் இழிகிறார். செக்கர்மாமுகிலுக்கு உபமேயம் பீதகவாடை; மிக்க செஞ்சுடர்ப் பரிதிக்கு உபமேயம் முடி(அதாவது-கிரீடம்); அஞ்சுடர் மதிக்கும் பலசுடர்கட்கும் உபமேயம் பூண்முதலாமேதகு பல்கலன். பூண் என்பது ஆபரணஸாமாந்யத்துக்குப் பேராயினும் இங்கே சந்த்ரஹாரமென்கிற ஆபரண விசேஷத்தைக் குறிக்குமென்க. மேதகு-மேவத்தகு என்றபடியாய், (திருமேனிக்குப்) பொருந்தத்தக்கன என்றதாம். மெய்தகு என்றும் பாடமுண்டாம்; மெய்-திருமேனி. கலன் –ஆபரணம். மீதிட்டுப் பச்சைமேனி மிகப்பகைப்ப-எம்பெருமானுடைய திருமேனியில் பீதகவாடையின் சோதி ஒரு நிறமாகவும், திருவபிஷேகத்தின் சோதி மற்றொரு நிறமாகவும், திவ்ய பூஷணங்களின் சோதி வேறொரு நிறமாகவும் திருவாய் திருக்கண் முதலிய அவயவங்களின் சோதி மற்றுமோர் நிறமாகவும் இப்படிப் பலவகை நிறச்சோதிகள் இருந்தாலும் திருமேனியின் நிறமாகிய   பாசியின் பசும் புறம்போன்ற மற்ற எல்லாச் சோபைகளோடும் போரிட்டு வெற்றிபெற்று விளங்குகின்றதாம். மேனி என்று உடலுக்கும் நிறத்துக்கும் பேர்; இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. பசுமை நிறமானது; (மீதிட்டு மிகப்பகைப்ப-மிகப்பகைத்து மீதிட என்று விகுதி மாற்றிக்கூட்டி யுரைக்கலாம்.) என்னுடைய சோபையின் முன்னே உங்களுடைய சோபை எப்படி விளங்கலாம் என்று போராடித் தானே மேற்பட்ட தாயிற்றாம். மீதிடுதல்-வெற்றி பெறுதல் என்னலாம். ஆக இவ்வளவும் எம்பெருமானுடைய திவ்யசோபைகளை வருணித்தாராயிற்று. இனி பள்ளிகொள்ளுமழகைப் பேசுகிறார்.

க்ஷீரஸாகரமத்தியில் திருவனந்தாழ்வான்மேல் துயில்கொண்டருளி, சிவன் பிரமன் இந்திரன் முதலான தேவர்களால் தொழப்படுமவனே! தாமரைபூத்த திருநாபியையுடைய ஸர்வேச்வரனே! பண்டொருகால் மாவலிபக்கல் நிரேற்று மூவுலகுமளந்தவனே! ஜய விஜயீ பவ-என்றாராயிற்று.

திருமேனியழகிலும் துயில்கொண்ட அழகிலும் இவ்வாழ்வார் நெஞ்சைப் பறிகொடுத்தாராகையாலே ஒரு வினைமுற்றோடே பாசுரத்தை முடிக்கமாட்டாமல் “மூவுலகளந்த சேவடியோயே!” என்று கண்ணாஞ் சுழலையிட்டுக்கிடக்கிறார்.

நஞ்சு+வினை-நச்சுவினை; சத்துருக்கள்மேல் விஷத்தை உமிழும் தொழிலையுடையவனிறே திருவன்ந்தாழ்வான். கவர்தலை-கப்புவிட்டுக் கிளர்கின்ற தலைகளையுடைய என்று சப்தார்த்தம்; பலபல தலைகளையுடைய என்பது தார்ப்பரியம். அமளி-படுக்கை. அறிதுயில்-யோகநித்திரை. சேவடியோய்-சேவடியோன் என்பதன் விளி.

English Translation

O Lord with lotus-red feet that strode the Earth! Wearing the red clouds as vestments, the radiant Sun as a diadem, the pleasing Moon on your person, and stars spangled all over, with red coral lips, and green radiance-spreading emerald mountains, you lie in the arms of the sealord, seemingly like one asleep; wearing  a yellow vestment, a crown, and many golden jewels, the red of your eyes and lips glowing, the green of your eyes and lips glowing, the green of your body overpowering the red, in the middle of the Ocean of Milk, on a serpent with many hoods, you recline in deep sleep where all the gods led by Siva, Brahma, and indra stand and offer worship.  O Lord without a peer or superior, with a lotus on your navel!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain