nalaeram_logo.jpg
(2556)

வேதனை வெண்புரி நூலனை, விண்ணோர் பரவநின்ற

நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்

பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்

சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே.

பதவுரை

வேதனை

-

வேதம் வல்லவனும்

வெள் புரி நூதனை

-

சுத்தமான யஜ்னோபவித முடையவனும்

விண்ணோர் பரவ நின்ற சாதனை

-

மேலுலகத்தார் துதிக்க அவர்களுக்குத் தலைவனாய் நின்றவனும்

ஞானலம் விழுங்கும் அநாதனை

-

(பிரளயகாலத்திலே) உலகத்தை வயிற்றினுள் வைத்து நோக்கி (அங்ஙனம் தன்னை நோக்குதற்கு) ஒரு தலைவனையுடையனாநாதவனும்

ஞாலம் தத்தும் பாதனை

-

உலகத்தை யளந்த திருவடியை யுடையவனும்

பால் கடல் பாம்பு அணைமேல்

-

திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வானாகிற் படுக்கையின் மேல்

பள்ளி கொண்டு அருளும்

-

யோக நித்திரை கொண்டருளுகிற

சீதனையே

-

குளிர்ந்த தன்மையுடையவனுமான எம்பெருமானையே

தொழுவார்

-

இடைவிடாது வணங்கியநுபவிக்கப்பெற்றவர்

விண் உளாரிலும் சீரியர்

-

பரமபதத்திலுள்ளவர்களிலுஞ் சிறப்புடையராவர்.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனைப் பிரியாத பாக்கியம் பெற்ற மகளிர்களின் சிறப்பைக் கூறித் தலைவி இரங்கும் பாசுரம் இது. வேதம் வல்லவனாய் சுத்தமான யஜ்ஞோபவீத மணிந்தவானய் மேலுலகத்தார் துதிக்குமாறு அவர்கட்குத் தலைவனாக நிற்பவனாய்ப் பிரளய காலத்தில் உலகங்களை வயிற்றினுள் வைத்து நோக்குபவனாய்த் தனக்கொரு தலைவனையுடையனாகாதவனாய் உலகத்தையளந்த திருவடியையுடைவனாய்த் திருப்பாற்கடலில் க்ஷேசாயியாகி யோகந்துயிர் கொண்டருள்பவனாய்க் குளிர்ந்த தன்மையயுடைவனான எம்பெருமானையே இடைவிடாது வணங்கி யநுபவிப்பவர் யாரோ, அவர்கள் பரமபதத்தில் வாழும் நித்ய முக்தர்களிற் காட்டிலும் சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை சிறப்புடையராவர் என்கிறது. நாயகனுடைய பிரிவிலே தனித்து மிக வருந்துகிற நாயகி, தன்னை யாற்றுவிக்கிற தோழியை நோக்கி, ‘நாயகனைப் பிரியாமல் அவனுடன் என்றுங்கூடி வாழ்பவர் முத்தியுலகத்துப் பேரின்பம் நுகர்வாரினுஞ் சிறப்புடையாராவர், என்ற இதனால் ‘அப்படிப்பட்ட பாக்ய விசேஷத்தை யான் பெற்றிலனே!’ என்று தன் ஆற்றாமை மிகுதியை வெளியிட்டாளாயிற்று.

ஸ்ரீதேவியும் பூதேவியும் ஒருகாலும் விட்டுப் பிரியாது திருவடி வருடக் கூடிக்குலவி யின்புற அவர்களுடன் அறிதுலமருந்தன்மையை ‘பாற்கடல் பாம்பணைமேற் பள்ளிகொண்டருளுஞ் சீதனை’ என்றதனால்குறிப்பிட்டு,அப்படிப்பட்ட இடையீடில்லாப் போகம் தனக்குக் கிடையாமையைப் பற்றிப் பொறாமையும் வருத்தமுங் கொண்டவை கொள்க.

‘வேதனை’ என்பதற்கு- வேதம் வல்லவன் என்றும், வேதங்களாலே பிரதிபாதிக்கப்படுபவன் என்றும் பொருள் கொள்ளலாம். வேண்புரிநூல் = வெண்ணிறமான முப்புரிநூல் வைதிக புருஷனென்கைக்கு அடையாளமான சுத்த யஜ்ஞோவீதத்தையுடையவன் என்றவாறு. “வேதமுதல்வன் விளங்கு புரிநூலன் (8-4-2.) என்ற திருமொழியுங் காண்க. “ஞாலந்தத்தும் பாதன்” என்பதற்கு- ‘உலகத்தை யளந்த திருவடியையுடையவன்’ என்று பொருள் கொள்வதன்றியே, பூமிக்கு உற்பத்தி ஸ்தாநமான திருவடியை யுடையவன் என்றும் பொருள் கொள்வர்; திருமாலின் திருவடியினின்று பூலோக முண்டாயிற்றென்று வேதங்கள் கூறும். சீலன் - அருளுடையானென்றபடி.

இடைவிடாது பகவதநுபவம் செய்வதற்கென்றே வாய்த்த இடமான பரமபதத்தில் பகவதநுபவத்திற்கு எவ்வகையான இடையூறுமில்லாதலால் அங்கிருந்து கொண்டு பகவானை யநுபவித்தல் வியப்பன்று; உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலம் பகவதநுபவத்திற்கு நேர்விரோதியாதலால் அப்படிப்பட்ட இந்த இருள் தருமா ஞானத்திலிருந்து கொண்டே அங்ஙனம் நித்யாநுபவஞ் செய்தலில் மிக அருமை யுண்டாதலால் அவ்வருமையைப் போக்கி எம்பெருமானை இடைவிடாது அனுபவிக்குமவர்களை நித்ய முக்தர்களிலும் மேம்பட்டவராகக் கூறத்தடையுண்டோ? ஒரு சிறந்த காரியத்தைப் பிரதிபந்தகமில்லாத விடத்தில் தலைக்கட்டுதலிற் காட்டிலும் பிரதிபந்தகம்மலிந்த விடத்தே தலைக்கட்டுதல் வியக்கத்தக்கதன்றோ எம்பெருமான் புக்கல் ஈடுபாடு கொண்ட- ஆவார் மற்றொன்றிற் சிந்தை செலுத்தாது அப்பெருமானையே மனமொழிமெய்களால் பூர்ணாநுபவஞ் செய்யப் பெற்றவர். இவ்வுலகத்திலிருந்து கொண்டே நித்யஸூரிகளிலும் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்தாராயிற்று. அப்படிப்பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே! என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும்.

English Translation

The Lord of the Vedas, the Lord wearing a white thread, the lord worshipped by celestials, the Lord of all, the lordless one who swallows the Universe, the lord who straddled the earth, the lord reclining on a cool serpent bed in the deep Ocean of Milk, -those who worship hum thus are superior even to the gods.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain