nalaeram_logo.jpg
(2553)

இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,

வடம்போ தினையும் மடநெஞ்சமே,நங்கள் வெள்வளைக்கே

விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்

தடம்போ தொடுங்க,மெல்லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே.

பதவுரை

இடம்போய் விரிந்து

-

எல்லாவிடங்களிலும்போய் வளர்ந்து

இ உலகு அளந்தான்

-

இவ்வுலகத்தை அளந்து கொண்டவனுடைய

எழில் ஆர்

-

அழகு நிறைந்த

தண்

-

குளிர்ந்த

துழாய்போது வடம்

-

திருத்துழாய் மலர் மாலையைப் பெறும் பொருட்டு

இனையும்

-

வருந்துகிற

மட நெஞ்சமே

-

பேதைமையுடைய மனமே!

வியல் தாமரையின் தடபோது

-

சிறந்த பெரிய தாமரைமலர்

ஒடுங்க

-

குவிய

மேல் ஆம்பல்

-

புல்லிய ஆம்பலை

அலர்விக்கும்

-

அலரச் செய்கிற

வெள் திங்கள்

-

வெள்ளிய சந்திரன்

நங்கள் வெள்வனைக்கே வடம் போல் விரிதல் இது

-

நமது வெளுத்த வளைகளைக் கழலச் செய்வதற்காகவே விஷம்போல ஒளி பரப்புதலாகிய இது

வியப்பே

-

ஓர் ஆச்சரியமோ?

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனது மாலைபெறாமல் வருந்துகின்ற நாயகி மதிக்கு இரங்கி நெஞ்சொடு கூறல் இது.  எல்லாவிடங்களிலுஞ் சென்று வளர்ந்து இந்தவுலகத்தை அளந்து கொண்டவனான ஸர்வேச்வரனுடைய திருத்துழாய்மாலையைப் பெறும்பொருட்டு வருத்திக் கிடக்கிற நெஞ்சமே! சந்திரன், சிறப்பில்லாத ஆம்பலினிடத்து அன்பு வைத்து அதற்கு மகிழ்ச்சி தந்து சிறந்த தாமரையை அழிக்கும் அற்பகுண முடையவனாதலால் அவன் நமது அழகிய கைவளைகளைக் கழலச் செய்தல் ஒரு வியப்பன்று என்கிறாள். இது சந்திரோபாலம்பம். தாமரைக்குத் தலைவனான ஸூர்யன் கண் மறைந்த விடத்து அத்தாமரையை வருத்துகிற இவனுக்கு, தலைவனைப் பிரிந்த எம்மை வருத்துதல் இயல்பே என்றவாறு.

வடம்போதினையும் = ‘வடம்போது இனையும்’ என்று பிரிப்பதன்றி, வடம்போதில் நையும் எனவும் பிரிக்கலாம்; பொருள் ஒன்றே. மடநெஞ்சமே! = தூலபமான பொருளில் பற்றுவைத்ததோடு அப்பற்றை என்றும் விடமாட்டாமல் வீணே வருந்துகின்ற நெஞ்சமே! என்றவாறு, ‘விடம்போல் விரிதல் என்றது- விஷம் கொலைசெய்வது போல நம்மைக் கொலை செய்வதற்காகவே வந்து தோன்றல் என்றபடி; ஆகவே இவ்வுலமை- வருத்துந் தன்மை பற்றியதேயன்றி நிறம்பற்றியதன்று. வியப்பே = எ- எதிர்மறை; வியப்பன்று என்றவாறு.

இதற்கு உள்ளுறை பொருளாவது- பேறுபெறாத நிலையில் தமக்குண்டான விவேகமும், பிரதிகூலமாய் வருத்துந் தன்மையை ஆழ்வார் தமது திருவுள்ளத்தை நோக்கிக் கூறுதலாம். (இடம் போய் + மடநெஞ்சமே!) ஸவஸகூலபனான ஸர்வேச்வரனுடைய போக்யதை முதலியவற்றறில் ஈடுபட்டுப் பூர்ணாநுபவங் கிடையாமை பற்றி வருத்தம் இளமனமே! (வியல் தாமரையின் தடம்போது ஒடுங்க மெல்ஆம்பல் அலர்விக்கும் வெண்திங்கள்) சிறந்த பொருள்களை வெளிக்காட்டாமல் இழிந்த பொருட்களை வெளிக்காட்டுகிற விவேகம். (எங்கள் வென்வளைக்கே விடம்போல் விரிதல் இது வியப்பே) நமது சுத்தமான அடிமைத் தன்மையையும் குலைப்பதாகப் பரவுகிற விது ஆச்சரியமோ! என்று ஆழ்வார் திருவுள்ளத்தில் க்லேசத்தோடு அருளிச் செய்தராயிற்று.

English Translation

O Foolish Heart of mine, desiring the Tulasi-garland of the lord who rose and measured the Earth! While the big petals of the red lotus close. The little pearls of the white lily open up by the Moon which spreads its moonlight poison everywhere, to take our white bangles, Is this is surprising?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain