nalaeram_logo.jpg
(2542)

கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்றுஓ ரோகருமம்

உற்றுப் பயின்று செவியொடு சாவி உலகமெல்லாம்

முற்றும் விழுங்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்

உற்றும் உறாதும் மிளர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே.

பதவுரை

கன்று பிணை

-

இளமையான பெண்மான்களுடைய

மலர் கண்ணின்

-

பரந்த கண்களின்

குலம்

-

சாதியை

வென்று

-

ஜயித்து

ஒரே கருமம் உற்று

-

ஒரு காரியத்திலே பொருந்தி

பயின்று

-

அக்காரியத்திலே பழகி

செவியோடு உசாவி

-

(அக்காரியத்தைக் ) காதுகளோடு வினாவி ஆலோசித்து,

உற்றும் உறாதும் மிளிர்ந்த

-

(எனக்கு) அனுகூலமாயும் பிரதிகூலமாயும் தடுமாறுகிற

கண் ஆய்

-

கண்களாய் (இவை)

உலகம் எல்லாம் முற்றும் விழுங்கி உமிழ்ந்த பிரானார் திரு அடி கீழ்

-

எல்லாவுலகங்களையும் மிச்சமில்லாதபடி (பிரளயகாலத்தில்) வயிற்றினுட்கொண்டு (பின்பு) வெளியிட்ட எம்பெருமானது திருவடிகளின் கீழே (இவ்வுலகத்திலே)

எம்மை உணர்கின்ற

-

எம்மை (த் தமக்கு உள்ளாம்படி) கவர்ந்து கொள்கின்றன.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தலைவிநோக்கின் வாசிகண்டு தலவைன் குறிப்பறிந்து உரைத்தல் இது. இப்பாட்டு நெஞ்சை நோக்கித் தன்னுள்ளே சொல்லியது. ‘தலைமகள் நோக்கிலே விடுபட்ட தலைமகன் அக்கண்கள் தனக்குப் பாதகமாகிறபடியைப் பாங்கனுக்குச் சொல்லுகிறான்’ என்றுங் கொள்வர்.

இளைய மான்பேடை மருண்டு நோக்கும் நோக்கத்திலும் இவளுடைய நோக்கம் அழகியதென்பதைக் காட்டக் ‘கற்றுப் பிணைமலர் கண்ணின்குலம் வென்று’ எனப்பட்டது. நன்று + முணை, கற்றுப்பிணை, மென்றொடர்  வன்றோடாயிற்று. கன்று இளமைப்பெயர், பிணை- பெண்மைப் பெயர். (தொல்காப்பியம் – பொருளதிகாரம்- மரபியல் 5.)  “யானையுங் குதிரையுங் கழுதையும் கடமையும், மானோடைத்துங் கன்றெனற்குரிய,” “புல்லாய் நவ்வி யுழையே கவர், சொல்வாய் நாடிற்பிணை யெனப்படுமே” என்பவற்றால் இச்சொற்கள் மானுக்கு உரியனவாதல் அறிக.

ஒரோ கருமற்றுப் பயின்று செவியோடு உசாவி = தான் நாயகியை நோக்காத பொழுது அவள் தன்னை மனத்திற் பொருந்திய காமக் குறிப்பு வெளியாம்படி அன்போடு நோக்குதலும்,தான் அவளை நோக்கும்பொழுது அவள் நாணத்தால் தன்னை யெதிர் நோக்காது பார்வையைப் பொது நோக்காக வேறொரு வஸ்துவைப் பார்ப்பவள்போல வேற்றிடத்திற் செலுத்தலும், இங்ஙனம் அடிக்கடி பலகால் விரைவில் நிகழும் பொழுது அவள் கண்பார்வை காலளவுஞ் செல்லுதல் தான் கருத்தூன்னியதொரு காரியத்தைப்பற்றிக் காதையடுத்து வினாவி அதனோடு ஆராய்தல்போலுதலும் என்னுமிவை வெளியிடப்பட்டனவாயின. ஒரு பொருளிலும் பற்றில்லாம லிருத்தவனொருவன் அத்தன்மை யொழிந்து ஒரு பொருளில் பற்றிவைக்க நேர்ந்தால் அதில் கருத்தூன்றி அவ்விஷயத்தைக் குறித்து அறிவுடையாரோடு ஆலோசித்து முடிவு செய்யத் தொடங்குவது வழக்கமானதலால், அப்படியே இதுவரையிலும் பொதுநோக்கமுடைய கண்கள் தன்னிடத்தில் அன்பு நோக்கம் வைத்து ஈடுபட்டு இதுவரையிலும் பொதுநோக்கமுடைய கண்கள் தன்னிடத்தில் அன்பு நோக்கம் வைத்து ஈடுபட்டு அத்தன்மையைக் குறித்துக் காதுகளோடு வினாவலுற்றன என்று கண்களின் மேலேற்றிக் கூறினானென்க. நாயகியின் கண்கள் காதளவும் நீண்டு விலக்ஷணமாயிருக்குந் தன்மை இதனால் வெளியிடப்பட்டதாம்.

குறிப்பு நோக்கத்தைத் தனக்கு அநுகூலாமகவும் பொது நோக்கத்தைத் தனக்குப் பிரதிகூலமாகவுங் கொண்டு ‘உற்றும் உறாதும் மிளிர்ந்து’ என்றான். உலகமெல்லாம் முற்றும் விழுங்கியுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ் எம்மை யுண்கின்றவே’ என்று அந்வயிப்பது, த்ரிவிக்ரமாவதார காலத்தில் பூமி முழுதும் அப்பெருமான் திருவடிக் கீழிடமானதால், தனக்கு இவ்வுலகில் நிகழ்ந்த நிகழ்ச்சியைப் பிரானார் திருவடிக்கீழ் நிகழ்ந்ததென்றான். ஸர்வாக்ஷகனான ஸர்வேச்வரனுடைய விபூதியின் கண் எனக்கு இந்த நலிவு உண்டாயிற்றென்றவாறு.

உண்கின்ற- வினைமுற்று; உண்கின்றன என்றபடி. என்னை வசப்படுத்திக் கொள்ளுகின்றன; என்னை நலிகின்றன என்றுமாம்.

ஆழ்வாருடைய ஞானத்திலே பாகவதர் ஈடுபட்டு உரைக்கும் வார்த்தை இதற்கு உள்ளுறைபொருள். (சுற்றுப் பிணைமலர் கண்ணின் குலம் வென்று) ஸம்ஸாரமாகிற காட்டிலே திரிகிற பேதைமையுள்ள மிருகம் போல்வாருடைய ஐம்புல வழியிற் பரவுகிற ஞானசாதியை அதிசயித்து உத்க்ருஷ்டமாயிருக்கும் இவ்வாழ்வாருடைய ஞானம் என்கை. (ஒரோ கருமமுற்றுப் பயின்று) அந்த ஞானம் அறியத்தக்க பகவத் ஸ்வரூபம் முதலியவற்றிற் பொருந்தி ஊன்றி ஆராய்ச்சி செய்து நிற்குந் தன்மை சொன்னபடி (செவியோடு உசாவி) செவியென்றும் ச்ருதியென்றும் பர்யாயம்; அந்த ஞானம் சிறந்த பிராமாணமான ச்ருதியோடு ஒத்திருத்தல் தோன்றும். (பிரானார் திருவடிகீழ் உற்று முறாதும்) கீழ் (63ஆம் பாட்டு) “கண்ணம் புகுந்து’ என்றபடி மாநஸாநுபவம் நடந்தலால் வந்த உறவும் (64ஆம் பாட்டு) “கருக்காய் கடிப்பவர்போல்” என்றபடி பூர்ணநுபவம் பெறாமையாலுண்டான உறாமையும் என்னுமிரண்டும் குறிப்பிக்கப்பட்டன. (மிளிர்ந்த கண்ணாய்) எல்லா நிலையிலும் ஆழ்வாரது ஞானம் குவியாது விசாலித்துள்ளமையைக் காட்டும். (எம்மை உண்கின்றனவே) இப்படிப்பட்ட ஆழ்வாருடைய ஞானம் தம்மை வசப்படுத்தினமையைச் சொன்னபடி.

English Translation

Her petal-soft town-like eyes stand out in the crowd; with an intent gaze broken by the flap of her ears, as if they were beholding and not beholding the feet of the lord who swallowed and remade the Universe.  Those eyes with light in them consume my soul.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain