nalaeram_logo.jpg
(2541)

இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த

திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர் யாமும்அவா

ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்

கருக்காய் கடிப்பவர் போல்திரு நாமச்சொல் கற்றனமே.

பதவுரை

நிலம் தேவா

-

பூமிதேவர்களாகிய பிராமணர்கள்

இருக்கு ஆர் மொழியால்

-

வேதங்களிற் பொருந்தின மந்திரங்களைக் கொண்டு

நெறி இழக்காமை

-

முறைமை தவறாமல்

உலகு அளந்த திருதால் துணை வணங்குவர்

-

உலகங்களை அளவிட்ட (எம் பெருமானது) திருவடிகளை வணங்கி அனுபவிப்பார்கள்:

யாமும்

-

நாமும்

அவா ஒருக்கா

-

(எமது) ஆசையை அடக்க மாட்டாமல்

வினையொடும் எம்மொடும் நொந்து

-

(அப்படி அநுபவிப்பதற்கு விரோதியான எமது) பாவத்தையும் (அப்பாவத்திற்கு இடமான) எம்மையும் வெறுத்துக்கொண்டு

கனி இன்மையின் கருக்காய் நடிப்பவர்கள்போல

-

பழம்  கிடைக்காமையாற் பிஞ்சைத்தின்பவர் போல

திருநாமம் சொ£ல் கற்றனம்

-

(பூர்ணாநுபவம் கிடைக்காமையால் அதுவரையில் தரித்திருப்பதற்காக அவனது) திருநாமங்களாகிய சொற்களைச்சொல்லுதல் செய்கிறோம்.

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** நாயகியானவள் நாயகனுடைய பேர்கூறித் தரித்திருப்பதைத் தோழிக்குக் கூறுதல் இது. ஸம்ச்லேஷித்துப் பிரிந்த நாயகியானவள் மீண்டும் ஸம்ச்லேஷம் கிடைக்கப் பெறாமையினாலே தான் ஒருவாறு தரித்திருப்பதற்காக நாயகனுடைய நாமங்களைச் சொல்லிக்கொண்டு போது போக்குத லென்பதொன்றுமுண்டு; அது நிகழ்கின்ற தென்க.

புண்யசாலிகளான ப்ராம்ஹ்மணோத்தமர்கள் வேதமந்திரங்களால் எப்பொழுதும் எம்பெருமானைத் தவறாமல் அடைந்து அநுபவிப்பர்; யானோ அப்படிப்பட்ட நல்வினையில்லாமையால் எனது ஆசையை அடக்கமாட்டாமல் எனது தௌர்ப்பாக்யத்தை நொந்து கொண்டு இனிய பழங்களை உண்டு வாழப்பெறாத ஏழையர் காய்களைக் கடித்து உயிர் வாழுமாபோலே அவனது பூர்ணாநுபவம் பெருமையால் நமோச்சாரணஞ் செய்து உயிர் தரிக்கின்றேனென்கிறாள். ‘தருக்காய் கடிப்பர்போல்’ என்று உபமானத்தினால் இத்திருநாமச்சொல் கற்பதிலுள்ள அத்ருப்தி விளங்கும். கண்ணாலே கண்டு கையாலே அணைக்க ஆசைப்பட்டவர்க்குத் திருநாமச்சொல் கற்ற மாத்திரத்தால் என்னாகும்?

‘இருக்கார்மொழி’ எனற்து புருஷூத்தம் முதலியவற்றை. அன்றியே, இருக்கு- வேதங்களெல்லாம், - ஆர். தனக்குள்ளே பொருந்தும்படியான, மொழி- மூலமந்தரிமாகிய அஷ்டாக்ஷரமஹா மந்த்ரம் என்றுங் கூறுவர். நெறி இழுக்காமை = எம்பெருமானை வழிபடும் முறைமையில் ஒன்றும் வழுவாமல், ‘உலகளந்த திருத்தாளிணை’ என்றது- ஸர்வ ஸுலபமான திருவடி என்றபடி. நிலத்தேவர் = பூஸுரர் என்பர் வடநூலார்; இந்திரன் முதலிய தேவர்கள் ஸவர்க்க லோகத்தில் விளங்குவதுபோல இந்நிலவுலகத்தில் விளங்குபவர் ப்ராஹ்மணர்கள். வினையொடும் எம்மொடும் நொந்து = எம்பெருமானோடு கூடிக்குலாவி அநுபவிக்கப்பெறாத பிரதிபந்தகம் நமக்கு உண்டாயிற்றே! என்று வெறுப்புற்று என்றவாறு. (கனியின்மையில் கருக்காய் கடிப்பவர்போல்) கருக்காய்= பசுங்காய், இளங்காய். நன்றாக முகிர்ந்து நுகர்வோர்க்கு மிகவும் இனியதாயிருகின்ற கனி - பகவதநுபவத்தாலாகும் இனிய ஆநந்தத்துக்கு உவமை கட்டிளமைத்தாய் நுகருஞ் செவ்வியதல்லாத காய்- அவ்வளவு இனியதல்லராத நாமோச்சாரண மாத்திரத்துக்கு உவமை. காயின் முதிர்ச்சி கனியாதல்போல நாமோச்சாரணத்தின் பயன் அது பவாநந்தமாகும் என்பது இவ்வுவமையால் உய்த்துணரத்தக்கது.

உயர்வறவுயர்நல முடையவனான அயர்வறுமமார்க ளதிபதியால் மயர்வறாம் மதிநல மருளப்பெற்ற ஆழ்வார் ப்ராஹ்மணோத்தமர்களினுஞ் சிறந்து ஸகல வேத வேதாந்த ரஹஸ்யஸாரப் பொருள்களையும் கையிலங்கு நெல்லிக்கனியாகக்கண்டு பேசி யநுபவிக்கச் செய்தேயும் நைச்யாநுஸந்தாக ரூபமாக இப்பாசரம் அருளிச் செய்தாரென்க.

இருக்கு- ரிக் என்னும் வடசொல்லின் விகாரம்; வேதத்துக்கு பொதுப்பெயரும் ஒரு வேதத்துக்கு சிறப்புப் பெயருமாக வழங்கும் அது. ஒருக்கா =ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் (ஒருக்காமல்); இதில் ஒருங்கு என்பதன் பிறவினையான் ஒருக்கு’ - பகுதி. வினையொடும் எம்மொடும்- உருவுமயக்கம்; வினையையும் எம்மையும் எனப்பொருள்படுதலால்.

‘யாமுமவா’ என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள் கூறுவதுண்டு; ‘அவ்வா’என்பது ‘அவா’ எனத் தொக்கியிருப்பதாகக் கொண்டு, யாமும் அவ்வா?- தாமும் அப்படியோ? நிலத்தேவர்போல இருகுகார் மொழியால் திருத்தாளினை வணங்கும் பாக்கியமுடையோமோ? அல்லோம் என்றபடி ஒருக்காலினையோடும்- அடக்க முடியாத (பரிஹரக்கம்போகாத) வினையென்றபடி, ‘ஒருக்காவிளையொடும் எம்மொடும் நொந்து’ - அபரிஹார்யமாயிருப்பதொருபாபம் உண்டாவதே! இதை அநுஷ்டிக்கைக்கு நானுண்டாவதே! என்று நொந்து.

English Translation

The Vedic seers, -gods on Earth, -offer worship to the Earth-measuring lord with proper chants from the Rig Vedas.  We too, with deep regret for our sins and ourselves the sinners, came forward with that desire.  But like late fruit pickers who have to be content to bite raw fruit, we must recite his names alone and be satisfied.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain