nalaeram_logo.jpg
(2538)

வாசகம் செய்வது நம்பரமே? தொல்லை வானவர்தம்

நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்

வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்

தாயவன் ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.

பதவுரை

தொல்லை வானவர் தம் நாயகன்

-

பழமையான நித்ய ஸூரிகளுக்குத் தலைவனும்

நாயகர் எல்லாம் தொழுமவன்

-

ஈச்வரத்வம் பாராட்டுகிற (பிரமன் முதலியோர்) எல்லோரும் (தம் தம் தலைமைபெறும் பொருட்டு) வணங்கும்படியானவனும்

ஞாலம் முற்றும்

-

உலகம் முழுவதையும்

வேய் அகம் ஆயினும் சோரா வகை

-

ஒரு கோற்குத்து நிலமாயினும் தவறாதபடி (துளியிடமும் மிச்சமாகாதபடி)

இரண்டே அடியால் தாயவன்

-

(தனது இரண்டு அடிகளாலே அளந்து கொண்டவனுமாகிய

நம் இதை

-

நமது தலைவன்

ஆய் குலம் ஆய் வந்து தோன்றிற்று

-

இடையர் குலத்தையுடையவனாய்க் கொண்டு அக்குலத்தில் வந்துவளர்ந்த எளிமையை

வாசகம் செய்வது

-

எடுத்துப்புகழ்ந்து கூறுவது

நம்பரமே

-

நம்மாலாகக் கடவதோ? (ஆகாது)

காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தலைவனுடைய நீர்மையைத் தலைவிக்குத் தோழி கூறல் இது. நாயகனைக் களவொழுக்கத்தாற் புணர்ந்து பிரிந்து வருந்துகிற நாயகி ‘பராத்பானா யிருக்கின்ற அத்தலைவன் என்னை ஒருபொருளாகக் கருதி விரைவில் வந்து விவாஹஞ் செய்துகொள்ளுதல் கூடுமோ! என்று கவலைப்பட, அதுகண்ட தோழி; அங்ஙனம் யாவரினும் உயர்ந்த அவனுக்கு அன்புடையார் பக்கல் எளியனாகுந் தன்மையும் இயல்பில் உண்டு’ என்று அவனது ஸௌலப்யத்தையெடுத்துக்காட்டி நாயகிக்கு ஆறுதல் கூறுகின்றாள். இதனால், நமக்கு எளியனாய் வந்து விவாஹஞ் செய்துகொள்வான் என்றதாயிற்று.

எம்பெருமானைப் புகழ்வதற்கென்று ஏற்பட்ட வேதங்களும் அவன் தன்மையை முடியச் சொல்லமாட்டாமல் மீண்டனவென்றால் அதனைக் கூறுதல் நம்மாலாகுமோ? என்பது ‘வாசகஞ் செய்வது நம்பரமே’ என்றதன் கருத்து. வேய் அகமாயினும் = வேய் என்று மூங்கிலுக்குப் பெயர்; ஒரு மூங்கில் நாட்டப்படும் இடமாயினும் என்றபடி. சிறிதிடமேனும் தவறாமல் எல்லாவிடத்தையும் என்கை. இரண்டேயடியால் தாயவன் = “ஒரு குறளாயிருநிலம் மூவடி மண்வேண்டி உலகனைத்து மீரடியாலொடுக்கி ஒன்றுந், தருகவெனா மாவலையைச் சிறையில் வைத்த தாடாளன்” என்கிறபடியே தான்கேட்ட மூவடிநிலத்துக்கும் இடம் பறந்தபடி இரண்டடிகளாலேயே அளவிட்டு முடித்தவன். ஆய்குலமாய்வந்து தோன்றிற்று = அரசர் குலத்திலே ஒருத்திமகனாய்ப் பிறந்து இடையர் குலத்திலே ஒருத்தி மகனாள் ஒளிந்து வளர்ந்த எளிமை, வாசகஞ் செய்வது நம்பாமே? என்று அந்வயிப்பது. முதல் மூன்றடிகள் பரத்வத்தையும் ஈற்றடி ஸௌலப்யத்தையும் விளங்கும்.

மேன்மையோடு நீர்மையும் உடையவனாதலால் எம்பெருமான் உம்மைச் சேர்த்துக் கொள்வன; விரைந்து வருந்த வேண்டா என்று அன்பர்கள் ஆழ்வாரைத் தேற்றியபடி லீலாவிபூதி நித்யவிபூதி யென்னும் இரண்டுக்குந் தலைவனான மேன்மையையுடைய ஸர்வேச்வரன் ஆசாதஸுபனாய்க் கண்ணனாக வந்து அவதரித்த நீர்மையிற்கருத்து ஊன்றும்பொழுது, ‘கருமவசமில்லாதவனை பிறப்பு எடுத்தலும் அதிலும் அறிவில்லாமைக்கு எல்லைநிலமான எளிய குலத்தின்னாதலும் என்ன ஆச்சரியம்!’ என்று கொண்டு “பிறந்தவாறும்” என்றும் “எத்திறம்” என்றும் மோஹித்துக் கிடக்குமதொழிய அதற்குமேல் சொல்லிப் புகழ்தற்கு ஸாத்யப்படுமோ? என்றதாயிற்று.

‘பரமே’ என்ற ஏகாரம் எதிர்மறை; நம்பரமன்று என்கை. தாயவன் - தாவிவவன். தோன்றிற்று- இறந்தகாலத் தொழிற்பெயர்; இரண்டாம் வேற்றுமைத் தொகை...

English Translation

The lord celestials, worshipped by the gods, measured the Earth in two strides without losing a blade of grass.  He is our lord, who came as a cowherd lad. Is there anything we can say about him unequivocally?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain