nalaeram_logo.jpg
(2526)

பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்இப் பாயிருள்போல்

கண்டு மறிவதும் கேட்பதும் யாமிலம், காளவண்ண

வண்டுண் துழாய்ப்பெரு மான்மது சூதனன் தாமோதரன்

உண்டும் உமிழ்ந்தும் கடாயமண் ணேரன்ன ஒண்ணுதலே.

பதவுரை

காள வண்ணம்

-

கறுத்த திருநிறத்தையும்

வண்டு உண் துழாய்

-

வண்டுகள் தேனுண்ணப்பெற்ற திருத்துழாய் மாலையைமுடைய

பெருமான்

-

ஸர்வேச்வரனும்

மதுசூதனன் தாமோதரன்

-

மதுஸூதநனென்றும் தாமோதரனென்றும் திருநாமங்களை யுடையவனுமான திருமால்

உண்டும்

-

(பிரளயகாலத்திலே) வயிற்றினுட்கொண்டும்

உமிழ்ந்தும்

-

(பிரளயம் நீங்கின வளவிலே) வெளிப்படுத்தியும்

கடாய

-

பாதுகாக்கப்பெற்ற

மண்

-

பூமியினுடைய

ஏர்

-

அழகை

அன்ன

-

ஒத்த

ஒள் நுதலே

-

ஒளிபொருந்திய நெற்றியையுடையவளே!

பண்டும்

-

முன்பும்

பலபல

-

மிகப்பலவான

வீங்கு இருள்

-

பெரிய இருட்பொழுதுகளை

காண்டும்

-

பார்த்திருக்கிறோம்;

இ பாய் இருள்போல்

-

இந்தப் பரந்த இருட்பொழுது போல

கண்டும் அறிவதும் கேட்பதும்யாம் இலம்

-

யாம் (வேறொரு பொருளைக்) கண்டறியவதும் கேட்டறிவதும் இல்லோம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இருளுக்கு ஆற்றாது நாயகி, அவ்விருளின் கொடுமையைத் தோழிக்குக் கூறுதல் இது. எம்முடைய ஆயுஸ்ஸில் இதுகாறும் யாம் தினந்தோறும் இருட்பொழுதைப் பார்த்திருக்கிறோம்; அவற்றுக்கெல்லாம் ஓர் எல்லை உண்டு; வருத்தத்தை வளரச்செய்வதுமான ஓர் காளராத்ரியை எங்கும் எப்பொழுதும் கண்டதும் கேட்டதுமில்லை யென்று வருந்திக் கூறுகின்றாள்.

இருளின் கொடுமையைக் கூறுமிப்பாசுரத்தில் எம்பெருமானுக்குக் ‘காளவண்ணம் மரமேனியைக் காட்டி வருந்துகின்றது என்ற கருத்தைத் தோற்றுவிக்கு மென்னவாம். அன்றி, ‘காளவண்ணம்’ என்று விக்ஷேமிட்டது- இவ்விருட் பொழுதானது எம்பெருமானுடைய இருளன்ன மரமேனியைக்காட்டி வருத்துகின்றது என்ற  கருத்தைத தோற்றுவிக்கு மென்னலாம். அன்றி, ‘காளவண்ணம்’ என்பதை எம்பெருமானுக்கு விசேஷணமாக்காமல் வண்டுக்கு விசேஷணமாக்கவுமாம்.

பின்னடிகள் தோழியின் ஸம்போதநம் (விளி;) திருத்துழாய் மாலைகளை யணிந்து யாவர்க்கும் தலைவனாக விளங்குபவனும் தன் அடியார்களுக்குப் பகையனாவர்களை யழிப்பவனும் உகப்பார்க்குக் கட்டிவைக்கலாம்படி எளியவனுமான எம்பெருமான் பிரளயத்தில் உண்டும் பிறகு வெளிப்படுத்தியும் பாதுகாத்தருளின மிகப்பெரிய நிலவுலக முழுவதும் விலைமதிக்கும்படியான நெற்றியழ குடையவளே! என விளித்தபடி,  இப்பொருளில் மண்ணேரன்ன’ என்பது நுதலுக்கு விசேஷணமாகக் கொள்ளப்பட்டது. ‘ஒண்ணுதல்’ என்பது பண்புத்தொகை யன்மொழியாய் ஒண்ணுதலாளைக் குறிப்பாதலால் மண்ணேரன்ன என்பதை ஒண்ணுதலாளுக்கு விசேஷணமாக்குதலுமாம்; அப்போது பூமிப்பிராட்டிபோன்ற சிறப்புரயைவளை! என உயர்த்தி விளித்தபடி.

பராங்குச நாயகியானவள் தன் தோழியை விளித்து இப் பாசுரங் கூறுவதாகக் கொள்வதில் ஒரு குறையுண்டு; ஆசார்யஹ்ருதயத்தில் இரண்டாம் ப்ரகரணத்தில் இதற்கு மண்ணேரன்னவொண்ணுதல் பின்னைகொலென்கிற வொப்பு” இத்யாதி சூர்ணிகையில் ‘மண்ணொன்ன வொண்ணுதலே!’ என்ற இவ்விளியை ஆழ்வார்  விஷயமாகத் திருவுள்ளம் பற்றினமை விளங்குதலால் அதற்குப் பொருந்தாதொழியும். பொருந்த வுரையிட வேண்டுகையாலே, இப்பாசுரம்- ‘தோழி தலைவியை நோக்கிக் கூறுவது என்று கொள்ளத்தகும். “கலந்து பிரிந்து பிரிவாற்றாத தலைமகள் ராத்ரி வ்யஸநத்தாலே தான் நோவுபடுகிறபடியைத் தானே  சொல்லுகிறாளாதல்; தோழி வார்த்தையாதல்” என்ற நம்பிள்ளையீடு (அவதாரிகை) இங்கு அறியத்தக்கது. மண்ணேரன்ன வொண்ணுதலே = பூமிப்பிராட்டிபோலே எம்பெருமானுக்கு ப்ரிய மஹிரிஷியாயிருக்கின்ற பராங்கச நாயகியே! என்றவாறு.

இப்பாட்டுக்கு ஸ்வாயதேசப் பொருளாவது- எம்பெருமான் பல வகையாலும் பாதுகாத்த லீலாவிபூதியை ஒருபுடையொப்புமை சொல்லத்தக்க ஞானவொளி திருமுகத்தில் விளங்கப்பெற்ற ஆழ்வாரே! (அல்லது) ஊர்த்வ புண்ட்ரரூபமான திருமண்காப்பைத் தகுதியாகத் தரித்த திருநெற்றியையுடைய ஆழ்வாரே! இதற்கு முன்பும் பலபல வ்வாமோஹ பரம்பரைகளை உம்மிடத்துப் பார்த்திருக்கிறோம்;  இப்பொழுது மிக்கிருக்கின்ற வ்யாமோஹம்போல்வதொன்றை ஒருநாளும் கண்டறியோம் என்று பாகவதர்கள் ஆழ்வாருடைய ஸ்வாமோஹதிசயத்தை வியந்து கூறுவதாம்.

இரண்டாமடியின் முடிவில் ‘கண்டும்’ என்றதில் உம்மை- அசைநிலை; கண்டறிவதும் கேட்டறிவதும்  எனப்பிரித்துக் கூட்டுக. கண்டுமில்லோம், அறிவதுமில்லோம்,கேட்பதுமில்லோம் என்றும் உரைப்பர்.

English Translation

O Bright Girl! Your forehead has the radiance of the Earth that the dark-hued bee-humming Tulasi-garland lord Madhusudana, Damodara, swallowed, remade and straddled. Earlier too we have seen many dark colours, but never known on heard of such darkness as this.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain