nalaeram_logo.jpg
(2520)

கண்ணும்செந் தாமரை கையு மவைஅடி யோஅவையே,

வண்ணம் கரியதோர் மால்வரை போன்று, மதிவிகற்பால்

விண்ணும் கடந்தும்பர் அப்பால்மிக் குமற்றெப் பால்எவர்க்கும்

எண்ணு மிடத்தது வோஎம்பி ரான தெழில்நிறமே?

பதவுரை

கண்ணும்

-

திருக்கண்களும்

செந்தாமரை

-

செந்தாமரைப் பூவையொப்ப

கையும்

-

திருக்கைகளும்

அவை

-

அத்தாமரைப் பூவையொப்ப

அடியோ

-

திருவடிகளும்

மதி விகர பால்

-

ஞானத்தின்

மிகுதியால்

விண்ணும் கடந்து

-

ஸ்வர்க்கலோகத்தாரை மேலிட்டு

உம்பர் அப்பால் மிக்கு

-

அதன் மேலிடத்துள்ள ஸத்யலோகத்தார்க்கும் அப்பாற்சென்று.

அவையே

-

அத்தாமரைப் பூக்களையேயொப்ப.

எம்பிரானது

-

எம்பெருமானுடைய

எழில் நிறம்

-

அழகிய திருமேனிவிளக்கம்

வண்ணம் கரியது ஓர் மால் வரைபோன்று

-

நிறத்தில் கறுத்ததான வொரு பெரிய மலையையொத்து

மற்ற எப்பால் யவர்க்கும்

-

அதன்மேல் பரமபதத்தில் எவ்விடத்துமுள்ள நித்ய ஸூரிகளுக்கெல்லோர்க்கும்

எண்ணும் இடத்துவோ

-

(இப்படிப்பட்டதென்று) அளவிடும்படியான தன்மையுடையதோ? (அன்று)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** நாயகனுடைய ரூப வைலக்ஷண்யமுரைத்த நாயகியின் பாசுரம் இது. “கைவண்ணந் தாமரை வாய் கமலம்போலும் கண்ணினையும் மரவிந்தம் அடியுமஃதே” என்றாப்போலேயிருக்கிறது முதலடி. வேறு உபமாநம் கிடைப்பது அரிது என்பது தோன்றப் பல அவயங்களுக்கு ஒருபொருளையே உவமை கூறியது. எம்பெருமானுடைய திருகுகண் திருக்கை திருவடி எண்ணுமுறுப்புகள் ஸாக்ஷாத் தாமரை மலர்களே; திருமேனி நிறமோவெனில், ஒரு அஞ்சன மாமலை போன்றுள்ளது; இதன் வைலக்ஷண்யத்தைச் சொல்லப்புகில், லீலா விபூதியின் பலவுலகங்களிலுமுள்ளா ரெல்லாரிற் காட்டிலும் ஞானத்தில் மேம்பட்ட பரமபதத்து யஸூரிகளுக்கும் இத்தன்மையதென்று நெஞ்சால் நினைக்கவுமாகாதென்றால் வாய் கொண்டு சொல்லவல்லாருண்டோ என்றளாயிற்று மநுஷ்யர்களிற் காட்டில் தேவர்களுக்கும்,  இந்திராதி தேவர்களிற் காட்டில் ஸ்ருஷ்டிகர்த்தாவான பிரமனுக்கும், அவனிற்காட்டிலும் முக்தர்க்கும், அவர்களிற் காட்டிலும் நித்யர்க்கும் ஞானம் படிப்படியே சிறக்குமென்பது கொள்கை. மிக மேம்பட்ட ஞானிகளாலும் எம்பெருமானது திருமேனியழகு வரையறுக்க வொண்ணாது எனவே, இங்குள்ளாரால் வரையறுக்கலாகாமை தானே விளங்கும்.

‘மதி விகற்பால் எண்ணுமிடத்தநுவோ’ என்று அந்வயிக்கும். ‘விகல்பம்’ னஎனும் வடசொல் ‘விகற்பு’ எனத் திரிந்தது; விகல்பமாவது வேறுபாடு; மற்றையோரறிவினுஞ் சிறந்து வேறுபட்டுத் தோன்றுகின்ற மதியினால் என்றவாறு. அப்படிப்பட்ட மதியினாலும் எண்ணுந் திறத்தனன்று எம்பெருமானது எழில் நிறம் காண்க.

ஆழ்வார் தமது அகக்கண்ணுக்குப் புலப்பட்ட எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டு இது நமக்கேயன்றி நித்யஸூரிகளுக்கும் அளவிடவொண்ணாத என்று இதனால் அருளிச் செய்தாராயிற்று.

மூன்றாமடியில் ‘யாவர்க்கும்’ என்பது ‘யவர்க்கும்’ எனக் குறுகியுள்ளது. ‘உயர்வறவுயர்நல முடையவன் யவனவன்’ என்ற பாசுரத்திலும், ‘நெஞ்சினால் நினைப்பான்யவன்” என்ற பாசுரத்திலும் ‘யவன்’ என்பதும், ‘பயிலுந் திருவுடையார் யவரேலுமவர் கண்டீர்” என்பதில் ‘யாவர்’ என்பதுங் காண்க. இங்கே யா வினா  எஞ்சாமைப் பொருளது. “ஆவோடல்லது யகரமுதலாது” (தொல்காப்பியம்- எழுத்ததிகாரம்- மொழிமரபு- 32.) என்று விதியைக் காட்டி ‘யாவர்க்கும்’ என்றும் ‘யவர்’ என்றுமுள்ள பாடல்களை மறுத்து எகர முதலாகப் பாடங் கொள்ள வேணுமென்று சிலர் வற்புறுத்துவர்; ‘ஆவோடல்லது யகரமுதலாது” என்ற விதிக்குக் கதியில்லையோ வெனில்,அச் சூத்திரவிதி இயற்கை மொழிக்கேயன்றிச் செய்யுளில் வேண்டுழிக் குறுக்கல் பெற்ற மொழிக்கு விலக்காகாது என்று கொள்க.

English Translation

My Lord's eyes are like lotuses. His hands are the same, his feet too are the same! His dark radiance is the hue of a huge mountain that rises over the skies, boggling the mind, over the world of celestials, beyond the comprehension of anyone, Oh!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain