nalaeram_logo.jpg
(2518)

என்றும்புன் வாடை யிதுகண் டறிதும் இவ் வாறுவெம்மை

ஒன்றுமுருவும் சுவடும் தெரியிலம் ஓங்கசுரர்

பொன்றும் வகைபுள்ளை யூர்வான் அருளரு ளாதவிந்நாள்

மன்றில் நிறைபழி தூற்றிநின் றென்னைவன் காற்றடுமே.

பதவுரை

என்றும்

-

எப்பொழுதும்

புன்

-

கொடுமை செய்கிற

வாடை இது

-

இந்த வாடையை

கண்டு அறிதும்

-

கண்டறிவோம்!

இ ஆறு வெம்மை உருவம்

-

இப்படிப்பட்ட (வாடையினுடைய) வெப்பத்தின் தன்மையையும்

சுவடும்

-

குறிப்பையும்

ஒன்றும்

-

ஒருவிதத்தாலும்

தெரியிலம்

-

அறிகின்றிலோம்;

ஓங்கு அசுரர்

-

வலிமையாற் கிளர்கின்ற அசுரர்கள்

பொன்னும் வகை

-

அழியும்படி

புள்ளை

-

கருடப்பறவையை

ஊர்வான்

-

ஏறி நடத்துகிற எம்பெருமான்

அருள் அருளாத

-

தனது  கருணையால் என்னை வந்து காத்தருளாத

இ நாள்

-

இக்காலத்திலே

வன் காற்று

-

வலியவாடையானது

என்னை

-

என்னை

மன்றில் நிறை பழி

-

வெளியிலே பரவிநிறைகிற பழிப்பை

தூற்றி

-

அயலாரை விட்டுத் தூற்றுவித்து

நின்று அடும்

-

அப்பாற் போகாமல் நிலை நின்று அழிக்கினறது

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  வாடைக்கு வருந்தின நாயகியின் வார்த்தை இது. பிரிந்த நிலையில் பல பொழுதும் வாடை வருத்துதலால் அதனைப் பற்றி அடிக்கடி கூறி அலற்றும்படியாயிற்று. ஆகவே கூறியது கூறல் (புநருக்தி) என்னுங் குற்றத்திற்கு இடமில்லாமை உணர்க. இங்ஙனம் விருவன வேறு சிலவற்றிற்கும் இவ்வாறே கண்டு கொள்க.

எப்பொழுதும் கொடுமை செய்வதையே இயல்பாகக்கொண்ட இந்த வாடையை இன்று நேற்றல்ல, நெடுநாளாகவே கண்றிவோம். ‘வாடை வருத்துகிறது’ என்று பொதுப்படக் கூறமுடிவதேயன்றி இன்ன வடிவமாய் இன்ன குணத்தால் இன்னது செய்து வருத்துகிறதென்று ஒருவகையாலும் விவரித்துக் கூறக்கூடாதபடியுள்ளது இதன் கொடுமை; ஆஸுரப்ரக்ருதிகளான துஷ்டர்களை யொழித்து சிஷ்யர்களான அடியாதைக் காத்தருளுமியல்வுடைய பெருதமான் எனக்குக் கொடியதான வாடை வருத்துதலைக் காத்தருளுமியல்வுடைய பெருமான் எனக்குக் கொடியதான வாடை வருத்துதலைத் தவிர்த்து அடிமையாகிய என்னை ரக்ஷித்தருள தொழிவதே!; நான் வாடைக்கு வருந்துவதைக் கண்டு ஊரார் அலர்தூற்றும்படியாயிற்றே! இப்படியன்றோ என்னை இவ்வாடை கொலை செய்கின்றது! என்கிறாள்.

‘புன்வாடை’ என்பதற்கு மந்தமாருதமென்றும் பொருள் கொள்ளலாம். வாடையிது கண்டறிதும் = இவ்வாடையின் துஷ்டத்தனத்தை அநுபவித்திருக்கிறோமென்றவாறு, முன்னடிகளின் கருத்தை வேறுவகையாகவு முரைக்கலாம்;- வெகு காலாமகவே இந்த மாருதத்தை அநுபவித்தறிவோம்; ஆனால், இப்படி வெப்பம் பொருந்திய வடிவத்தையும் தன்மையையும் (இதற்கு உள்ளனவாக) முன்பு கண்டடிறியோம்; இதன் ஸ்வரூபஸ்வபாவங்கள் இன்றே மாறுபட்டன) என்று. இவ்வுரைக்கு ‘ஒன்றும்’ என்பது பெயரெச்சம்; ஒன்றுதல்- பொருந்துதல்.

ஓங்கு அசுரர் = தேவதாந்தரங்களை ஆராதித்துப் பெற்ற வர பலத்தாலும் புஜபலத்தாலும் தொழுத்திருக்கின்ற அசுரர். அன்றி, வணங்காமுடி மன்னராய் நிமிர்ந்து தலையராயுள்ள அசுரர் என்னவுமாம். ‘மன்றில் நிறைபழி தூற்றி’ என்று பழிதூற்றுதலுக்கு வாடையே கர்த்தாவாகக் கூறப்பட்டிருப்பதன் கருதபுது என்னவெனில்; தான் வாடைக்கு வருந்துதலைக் கண்டு ஊரார் அவர் தூற்றுகிறபடியால் வாடை ப்ரயோஜக கர்த்தா என்றபடி; ஒரு சிறுக்கி நாயகனைப் பிரிந்தாளாம்; காற்று மேலேபட்ட மாத்திரத்தில் துடிக்கிறாளாம்; நாணமடமச்சம் நன்றாயிருக்கிறது!’ என்று பிறர் ஏசும்படியாறிறென்கை. “இருள் குங்குமத் தோளரங்கேசர் முன்னாளிலங்கா புரங்காவலன் காலினால் வீழ் கருங்குன்றுபோல் மண்முகங்கு கதிவீழ கண்டாரெனக்கின்று தண்டாரளித்தால், மருங்கெங்கும் வம்போதுவார் வாயடங்கும் வாடைக்கும் நிலமங்கை யாடைக்கும் நோகேன். நெருங்குந்தனம் சந்தனம் பசலாகும் நீளாதிரா மையல் மீளாதிராதே” னஎற திருவரங்கக் கலம்பகச் செய்யுளின் கருத்து இங்கு உணரத்தக்கது. ‘நிறைபழி’ என்றது நாயகியைப் பற்றின பழி என்பதுமாத்திரமல்லாமல் நாயகனைப்பற்றின பழியுமாம் என்பது பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம். ஒருத்தியைத் தன் பக்கலியே ஆசைப்படவைத்து வாடைக்கு ஈடுபட்டுத் துடிக்கும்படியாக உபேக்ஷப்பதே! என்று நம்பெருமானையும் அவர் தூற்றுவர்களாம். அடும்- கொல்லும்; மாண்பாயந்தமான வேதனையைச் செய்யும் என்றவாறு. வன்காற்று என்னை அடூம்= கண்ணோட்டமில்லாத காற்றானது, பரிஹாரஞ் செய்யவும் பொறுத்திருக்கவும் மாட்டாத மெல்லியவான என்னைக் பெண் கொலை யென்பதும் பாராது நாசப்படுத்தா நிற்கும்.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது:- ஆழ்வார் தாம் எம்பெருமானைச் சேர்வதற்கு தவரைப்படுகிற வளவில் உடனே பேறு கிடையாமல் தாமத்திதலால் அப்பொழுது இவ்வுலகத்துப் பொருள் தம்மை வருத்தும் விதத்தைக் கூறுவதாம். முன்பு ஸம்ஸாரத்தில் அநுபவித்த துக்க பரம்பரைகள் இனியன என்னும்படி இப்பொழுது எம்பெருமானைச் சேரப்பெறாத துயரம் அதிகப்பட்டமை இதில் தோன்றும். (என்றும் புன்வாடையிது கண்டறிதும்) எப்பொழுதும் வருத்துந் தன்மையதான இவ்வுலகப் பொருளை யாம் கண்டறிவோம். (இவ்வாறு வெம்மை உருவும் சுவடும் ஒன்றும் தெரியலம்) இப்படிப்பட்ட பொருளின் தன்மையுங் குறியும் ஒருபடியாலும் எம்மாற் கூறமுடியாதபடி மிக்குள்ளன. (ஓங்கசுரர் பொன்றும்வகை புள்ளையூர் வானருளருளாக விந்நாள்) துஷ்ட நிக்ரஹ சிஷ்டபரிபாலக சீலரும் அதற்கு ஏற்படி விரைவுள்ள வாஹனத்தை யுடையவருமான எம்பெருமான் தனது இயல்பாகிய கருணையால் அடியேனை ஆட்கொள்ளாத இக்காலத்தில். (மன்றில் நிறைபழி தூற்றி வன்காற்று என்னை நின்று அடும்) எம்பெருமானைச் சரணமடைந்தும் இங்ஙனம் பரிபவப்படுகிறேனென்ற பழியைப் பலரும் எங்குந் தூற்றச் செய்து இவ்வுலகத்துப் பொருள் என்னை நிலையாக வருத்துகின்றது என்றதயாயிற்று. ஸ்வாபதேசத்தில் பழியாவது- எம்பெருமான் தானே வந்து ஆட்கொள்ளுமளவும் ஆறியிராமல் பதறுகின்றதனாலுண்டாகும் ஸ்வரூபஹாநி. “பேற்றுக்குத் தான் பக்ரவர்த்திக்கையும் பழியிறே” என்பர் நம்பிள்ளை.

English Translation

With no grace forthcoming today from the lord who rides the Garuda bird and I destroys tyrant Asuras, the strong southern winds blow in the courtyard for long hours and heap slander to hurt me. We have seen such harsh winds before but never such heat, such fury, such destruction.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain