nalaeram_logo.jpg
(2516)

நீலத் தடவரை மேல்புண்ட ரீக நெடுந்தடங்கள்

போல,பொலிந்தெமக் கெல்லா விடத்தவும், பொங்குமுந்நீர்

ஞாலப் பிரான்விசும் புக்கும் பிரான்மற்றும் நல்லோர்பிரான்

கோலம் கரிய பிரான்,எம் பிரான்கண்ணின் கோலங்களே.

பதவுரை

நீலம்

-

நீலமணிமயமான

தடைவரை மேல்

-

பெரியதொரு மலையின் மேலுள்ள

புண்டரீகம் நெடு: தடங்கல்போல பொலிந்து

-

பெரிய செந்தாமரைப்பூப் பொய்கைகள் போல விளங்குகின்றவைகளும்

எமக்கு எல்லாத இடத்தவும்

-

எமக்குக் காணுமிடந்தோறும் தோன்றுகின்றவையுமாயுள்ளவை

(எவையென்னில்)

பொங்கு முந்நீர்

-

கிளர்கிற கடல்சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும்

விசும்புக்கும் பிரான்

-

விண்ணுலகத்துக்குத் தலைவனும்

மற்றும் நல்லோர்பிரான்

-

மற்றுமுள்ளவர் யாவர்க்கும் தலைவனும்

கோலம் கரிய பிரான்

-

திருமேனி நிறம் கறுத்திருக்கப்பெற்ற பிரபுவுமான

எம்பிரான்

-

எம்பெருமானுடைய

கண்ணின்

-

திருக்கண்களினுடைய

கோலங்களே

-

அழகுகளேயாம்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனுடைய உருவெளிப்பாடு கண்ட நாயகி தோழிக்குக் கூறுதல் இது. ஒரு பொருளினிடத்து இடைவிடாது கருத்தைச் செலுத்த அந்தப் பாவனையின் ஊற்றத்தால் அப்பொருள் கண்ணுக் கெதிரில் தோன்றியது போலக் காணப்படுதல் இயல்பு. அதில் கண்ணழகில் ஆழ்ந்து கூறியது ,இது.

கடல் சூழ்ந்த மண்ணுலகத்துக்குத் தலைவனும் விண்ணுலகுக்குத் தலைவனும் மற்றுமுள்ள நல்லவர் யாவர்க்குந் தலைவனும் கரிய திருமேனியனுமான எம்பெருமானது திருக்கண்களின் அழகுளே எமக்குக் காணுமிடந்தோறுந் தோன்றுகின்றவையாயுள்ளன; அவை எங்ஙனே விளங்குகின்றன வென்னில், நீலர்ன மயமானதொரு பெரிய மலையின் மேலுள்ள பெரிய செந்தாமரை மலர்த் தடாகங்கள் போல விளங்காநின்றன.

எம்பெருமானுடைய கரிய பெரிய திருமேனிக்கு நீலத்தடவரையும், அவனது திருக்கண்மலர்களுக்குப் புண்டரீக நெடுந்தடங்களும் உவமையாயின. “கோலங்களே’ என்ற ஈற்று ஏகாரம்- பிரிநிலை; ஸர்வாங்கஸுத்தரனுடைய கண்ணழகி வீடுபட்டார்க்கு மற்றென்றும் பொருளாகத் தோன்றாமை காட்டும். 1. “தோள்கண்டார் தோளேகண்டார் தொடு கழற் கமலமனன் தான் கண்டார் தானே கண்டார் தடக்கை கண்டாருமஃதே, வாள் கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார், ஊழ்கொண்ட சமயத்தன்னானுருவு கண்டாரை யொத்தார்” என்றாற்போல், இனி, ஏகாரத்தை இரக்கமாகக் கொள்ளின், கண்ணுக்குப் புலப்படும் வடிவு கைகளால் கழுவுவதற்கு எட்டாது வருந்துகிறபடியை விளக்கும். இதில், ஞாலம் என்றதனால் லீலாவிபூதியையும், விசும்பு என்றதனால் வெளிநாடான நித்ய விபூதியுங் குறித்தார். ‘மற்றும் நல்லோர்’ என்றது இவ்வுலகத்தில் ஆழங்காற் படாமலும் முக்தியிற் சென்று சேரப்பெறாமலும் எம்பெருமான் குணங்களி லீடுபட்டு இடைநிற்கிற முமுக்ஷுக்களை. அன்றி, விசும்பு- தேவலோகமும். நல்லோர் - நித்ய முக்தரும் என்னவுமாம்.

பகவத கடாக்ஷத்திலே லீடுபட்ட ஆழ்வார் அவ்வீடுபாட்டின் முதிர்ச்சியாலே எம் பெருமானது திருக்கண்ணழகு உருவெளிப்பாடாய் எங்கு தோன்றி விளங்கக் கண்டு அதனை அன்பர்க்குக் கூறுதல் இதற்கு ஸ்வாபதேசம். திருவாய் மொழியிலும் “ ஏழையராவியுண்ணு மிணைக்கூற்றங்கொளோ வறியேன், ஆழியங் கண்ணபிரான் திருக்கண்கள் கொலோவறியேன், குழாவுந் தாமரை நாண்மலர்போல வந்து தோன்றுங் காண்டீர்.  தோழியாக என்னைமீர்! என் செய்கேன் துயராட்டியேனே” என்றருளிச்செய்வது காண்க.  மிளிர்ச்சி, குளிர்ச்சி, மலர்சசி, பெருமை, செம்மை முதலியவற்றையுட்கொண்டு “கண்ணின் கோலங்கள்” என்னப்பட்டது. “கரியவாகிப்புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப் பெரியலாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே” என்ற அமலனாகிபிரான் பாசுரன் காண்க. ‘எமக்கெல்லாவிடத்தவும்’ என்றது “நீன்று தோன்றிக் கண்ணுள் நீங்கா என் நெஞ்சுள்ளும் நீங்காவே” என்றார்போல. தம் திருவுள்ளம் எம்பெருமானது ஸௌந்தர்பத்தி கைப்பட்டு மற்றொன்றுக்கு உரித்தல்லாமல் அழிந்தபடி செல்லிற்றாயிற்று.

English Translation

My Lord is the dark-hued lord, the lord of the ocean-girdled Earth, the lord of the sky and the lord of all the good folk. His beautiful eyes resemble a thicket of lotuses in a gem pool on a dark mountain. They appear before me everywhere.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain