nalaeram_logo.jpg
(2510)

அருளார் திருச்சக் கரத்தால் அகல்விசும் பும்நிலனும்

இருளார் வினைகெடச் செங்கோல் நடாவுதிர், ஈங்கோர்பெண்பால்

பொருளோ எனுமிகழ் வோஇவற் றின்புறத் தாளென்றெண்ணோ?

தெருளோம் அரவணை யீர்இவள் மாமை சிதைக்கின்றதே.

பதவுரை

அரவு அணையீர்

-

ஆதிசேஷசயனத்தை யுடையவரே!

அருள் ஆர் திரு சக்கரத்தால்

-

கருணை நிறைந்த திருவாழியைக் கொண்டு

அகல் விசும்பும்

-

பரந்த விண்ணுலகத்திலும்

நிலனும்

-

மண்ணுலகத்திலும்

இருள் ஆர்வினை கெட

-

இருளையொத்த கொடிய தொழில்கள் நிகழாதபடி

(துஷ்ட நிக்ரஹஞ் செய்து)

செங்கோல் கடாவுதீர்

-

உமது கட்டளையைத் தடையன்றிச் செலுத்துகிறீர்.

(அப்படி லோகங்களை ரக்ஷிக்கிற நீர்)

இவள்

-

இப்பராங்குச நாயகியினுடைய

மாமை

-

மேனி நிறத்தை

சிதைக்கின்றது

-

அழிப்பதானது

ஈங்கு

-

‘இவ்வுலகத்தில்

ஓர் பெண்பால்

-

ஒரு  பெண்ணைக் காப்பது

பொருளோ எனும்

-

புருஷோத்தமோ’ என்கிற

இகழ்வோ

-

அவதாரமோ?

(அல்லது)

இவற்றின் புறத்தாள் என்று எண்ணோ

-

(உம்மால் ரக்ஷிக்கப்படுகின்ற) விண்மண்ணுலகங்களுக்கு உள்ளாகாமல் வெளியாயிருப்பவளொருத்தியிவள்’ என்ற எண்ணமோ?

தெருளோம்

-

அறிகின்றிலோம்

.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** - நாயகனுடைய விசலேஷத்தால் நாயகி துடித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் வந்து உதவாத நாயகனைத் தோழி வெறுத்துரைக்கும் பாசுரமிது. நீரோ ஸமாக்யமானவரவ்வீர்; திருவாழியாய்வானைப் பரிகரமாகக் கொண்டு எல்லாவுலகங்களிலும் துஷ்டர்களை நிரஸித்து சிஷ்டர்களை வாழ்விப்பதையே விரதமாகக் கொண்டிருக்கின்றீர்; இப்படிஸர்வரக்ஷகரான நீர் இவளையும் ரக்ஷிக்கக் கடமைப்பட்டிருந்தும் இவளொருத்தியை மாத்திரம் பாதுகாவலரது கைவிட்டிருக்கின்றீர்; ‘இவள் நம்மால் அவசியம் காக்கப்பட வேண்டியவளல்லள்.;

அப்படிப்பட்ட தகுதி இவளிடத்து ஒன்றுமில்லை’ என்று இகழ்ந்து கைவிட்டீரோ? அன்றி, நம்மால் காக்கப்படும் உலகங்களுக்கு இவள் உட்பட்டவளல்லள்; பஹிர்ப்பூதை’ என்று கருதிக் கைவிட்டீரோ? என வருந்திக் கூறியவாறு.

திருவாழியாழ்வானும் சேதநகோடியில் ஒருவராதலால் ‘அருளார் திருச்சக்கரம்  என அருளுடைமை கூறப்பட்டது. ஆயுதகோடி ஆபரணகோடி என்னுமிரண்டிலும் அகவயித்திருக்கின்ற திருவாழிக்கு ப்ரதிகூல நிக்ரஹத்தில் கோபம்போலவே அநுகூல ரக்ஷணத்தில் அருளும் மிக உரியதாம்.

இங்கு எம்பெருமானை அரவணையீர்! என விளித்தது கருத்துடன் கூடியது; இவள் தரையிலே வருந்திக் கிடக்க உமக்கு படுக்கை எங்கனே பொருந்திற்று? படுக்கைக்கு மேல் விரி வேண்டாவோ? படுக்கையில் கிடப்பார் ப்ரஹ்மசாரியாயோ கிடப்பது? தனிக்கிடை கூடுமோ? இவண் வேண்டாவோ? என்றவாறு.

“இவள் மாமை சிதைக்கின்றதே” என்றவிடத்துப் பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானங் காண்மின்:- (இவளுடைய மேனிநிறத்தை) அவன்தானே கைதொட்டு அழிக்கிறானென்றபடி பிரஜை கிணற்றிலே விழுந்தால் லரங்காத தாயைத் ‘தள்ளினான்’ என்நுமோபாதி ரக்ஷகனானவன் ரக்ஷியாதொழிந்தால் அவ்வளவுஞ் சொல்லலாமிறே.” என்று.

ஆழ்வாருடைய ஆற்றாமையைக் கண்ட அன்பர்கள் எம்பெருமானை நோக்கி விண்ணப்பஞ்செய்த வார்த்தை யென்பது இதற்கு ஸ்வாபதேசம். முதல்வாக்கியத்தால், எம்பெருமான் தனது ஸங்கல்ப ரூபனான திருவாழியாழ்வானைக் கொண்டு நித்யவிபூதியில் பகதநுபவவொழுக்காகிய இருள் நடையாடாதபடியுஞ், லீலா விபூதியில் அஜ்ஞானநகார்யமான பொல்லாவொழுக்காகிய இருள் நடையாடாதபடியுஞ் செய்து இரண்டு விபூதியையும் இருள் அகலக் காட்டி பிரியாமையாலே ரக்ஷிக்குமங்குள்ளாரை; அத்தைக் கொண்டு விரோதிகளை இரு துண்டமாக இட்டு ரக்ஷிக்கும் இங்குள்ளாரை.”  ஆழ்வார்க்கு உடனே பேற உதவாது அவர்க்கு ஆற்றாமையால் நிறவேறுபாட்டை உண்டாக்குகினது இவ்வுலகத்தில் ஒருபுறத்தில் தம்மைத் தாயம் பாதுகாத்துக் கொள்ளவும் சக்தியில்லாமல் பரதந்திர ராயிருப்பவர் இவர் என்ற உபேக்ஷையோ? இவ்வுலகத்தார்போல ஸம்ஸாரத்திலே அமுந்திக்கிடப்பதுமு அவ்வுலகத்தார்போல எம்பெருமானை யடுத்து அடிமை செய்து  ஆராதித்தலுமில்லாதவராதலால் இவர் நமது பாதுகாப்புக்கு உட்பட்ட இரண்டு உலகிலுஞ் சேராது புறம்பான வரென்று நினைத்தோ? இன்ன தென்று தெரியவில்லையென்று அன்பர்கள் கூறியவாறு.”

“அசக்தியும் பாரதந்திரியமும் அநாதரத்துக்கு உறுப்பல்லாமையாலும் விபூதி த்வயவ்யாவ்ருத்தி வைலக்ஷண்யத்துக்கு உருப்பாகையாலும் அங்கீகார ஹேது உண்டென்றபடி அரவணையீர்! என் கையாலே அந்த விபூதியிலுள்ளாரோடு நித்யஸம்ச்லேஷம் நடக்கிறபடி சொல்லுகிறது” என்பது அழகிய மணவாளச் சீயருரை.

English Translation

O Lord reclining on a serpent! With your benevolent discus, you reign over the wide Earth and sky, destroying the darkness of karmas, This girl wanes day by day.  Is it because your consider women to be of no consequence in your reign? Or is it because you consider this girl outside the pale of justice? We do not know.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain