nalaeram_logo.jpg
(2509)

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்

யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்

மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்

ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே?

பதவுரை

மேகங்களே

-

ஓ மேகங்களே!,

திருமால் திருமேனி ஒக்கும் யோகங்கள்

-

எம்பெருமானது திருமேனியை யொத்திருக்கும்படியான உபாயங்களை

உங்களுக்கு எவ் ஆறு பெற்றீர்

-

உங்களுக்கு (ஸித்திக்கும்படி) எவ்விதமாய் அடைந்தீர்கள்?

உரையீர்

-

சொல்லுங்கள்;

உயிர்

-

உயிர்களை

அளிப்பான்

-

பாதுகாக்கும் பொருட்டு

நல் நீர்கள் சுமந்து

-

நல்ல ஜலத்தைத் தரித்து

மா கங்கள் எல்லாம் திரிந்து

-

பெரிய வானங்களிலெல்லாம் ஸஞ்சரித்து

நும் தம்

-

உங்களுடைய

ஆகங்கள் நோவ

-

உடம்புகள் நோகும்படி

வருந்தும்

-

(அவ்வுடம்புகளை) வருந்திச் செய்த

தவ ஆம்

-

தபஸ்ஸோ

அருள் பெற்றது

-

(அவ் வெம்பெருமான) அருளை நீங்கள் பெற்ற காரணம்?.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***நாயகனைப் பிரிந்த நிலையில் கண்ணிற் காணும் பொருள்களையெல்லாம் நோக்கிப் பலவாறு இரங்குகின்ற நாயகி, புருஷோத்தமனோடு ஒத்த தன்மையையுடைய மேகங்களைக் கண்டு அவற்றை நோக்கி ‘எம்பெருமானது திருமேனியையொத்த மேனியையுடைமையாகிய  ஸாரூப்ப நிலையை நீஙக்ள் என்ன முயற்சிகள் செய்து பெற்றீர்கள்? கைம்மாறு கருதாமல் பரோபகாரத்துக்காகவே நல்ல நீரைச் சுமந்துகொண்டு உடம்பு வருந்தச்சென்று ஆங்காங்குப் பெய்து எல்லா வுயிர்களையும் பாதுகாத்தலாகிய பெருந்தவ முடைமையால் உங்களுக்கு எம்பெருமான் கருணை நேர்ந்து அதனாலேதான் இந்த நிலை வந்தது போலும் என்று கூறுகின்றாள்.

பொய்கையாழ்வார் கடலை நோக்கி “மாலுங் கருங்கடலே! என் நோற்றாய்! வையகமுண்டாலினிலைத் துயின்றவாழியான், கோலக் கருமேனிச் செங்கண்மால் கண்படையுள், என்றுந் திருமேனி நீ தீண்டப்பெற்று” என்று எம்பெருமான் எக்காலமும் உன்னிடத்தே பள்ளிகொண்டிருப்பதற்கு ஏற்ப என்ன தவம் புரிந்தாய்? என்று கேட்டார்; இவ்வாழ்வார் மேகத்தை நோக்கி ‘எம்பெருமானோடு உருவொத்திருக்கும்படியாக நீங்கள் என் தவம் புரிந்தீர்கள்? என்று வினவுகின்றார். அதை அனுட்டித்த உபாயத்தையறிந்து தானும் அனுஷ்டித்து அந்நிலைமை பெறக் கருத்துப்போலும். மேகம் வடிவத்தால் திருமாலை யொக்குமென்று தலைவி கூறுதலை “கரும் பெரு மேகங்கள் காணில் கண்ணனென்று ஏறப்பறக்கும்”. “நன்று பெய்யும் மழைகாணில் நாரணன் வந்தானென்று ஆலும்” என்னுமிடங்களிலும் காண்க. “ஒக்குமம்மானுருவ மென்று உள்ளங் குழைந்து நாணாளும்,தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந் தோறுந் தொலைவன் நான்” என்றதுங் காண்க.

மேகங்களோ- ஓகாரம் மிக்கது, விளியுருபு. ஓ மேகங்கள் என மாறினுமாம். எவ்வளவு தூரத்திலிருந்தாலும் தன் கரல் கேட்கும்படி ‘மேகங்களோ’ என்று கூப்பிடுகிறாள்; ‘நாராயணா ஓ! மணிவண்ணா நாகணையாய்’ என்ற கஜேந்திராழ்வான் கூப்பிட்டாற்போல யோகம்- ஒத்திருப்பதற்குக் காரணமான உபாயம். மஹாகம் என்னும் வடசொல் மாகம் எனத்திரிந்தது. ஆகாசம் பலவன்றியே ஒன்றுதானே, ‘மாகங்கள்’ என்ற பன்மை எதுக்கென்னில்;- இந்தப் பன்மை பொருளின் பன்மையைக் குறிப்பதன்று, ஒருபொருளின் பல்லிடங்களைக் குறிக்கும். ‘நீர்கள்’ என்றவிடத்துப் பன்மை மிகுதி காட்டுவதாம். மேகம் பலவாதலால் நீரும் பல வாயிற்று என்னவுமாம்.

ஸ்ரீவைகுண்டத்தி லுளள்ளவர்களும் எம்பெருமானோடொத்த வடிவத்தை அவனருளரற் பெற்றவர்களுமான முக்தர்களை ஆழ்வார் பாவகையாலே எதிரில் காணப்பெற்ற அவர்களை நோக்கி ‘நீங்கள் இந்த ஸரரூப்யநிலையை எங்ஙனம் அடைந்தீர்கள்? சொல்லுங்கள்; “ஆதியந்தமான மற்புதமான வானவர்தம் பிரான், பாதமா மலத்சூடும் பக்தியிலாத பாவிகளுய்ந்திடத், தீதில் நன்னெறிகாட்டி யெங்குந் திரிந் தரங்கனம்மானுக்கே காதல்செய் தொண்டர்” என்றபடி இவ்வுலகத்தில் எல்லாப் பிராணிகளையும் உஜ்ஜீவிப்பிக்கும் பொருட்டு மெய்வருத்தம் பாராமல் எங்குத் திரிந்த குணரண பூர்த்திகொண்டு நல்லொழுக்கங்காட்டிக் கைம்மாறு கருதாது உலவுதலாகிய ஸாதனத்தால் பகவானருளைப்பெற்று அதனால் உமக்கு இந்நிலை நேர்ந்தது போலும் என்று கூறுதல் இதற்கு ஸ்வாபதேசப் பொருள்...

English Translation

O Clouds! Tell, me how did you acquire the lord Tirumal's dark hue!  I know, carrying life-sustaining water, you roam the skies, hurting your bodies sorely, That penance earned you his grace!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain