nalaeram_logo.jpg
(2505)

தண்ணந் துழாய்வளை கொள்வது யாமிழப் போம்- நடுவே

வண்ணம் துழாவியோர் வாடை யுலாவும்- வள்வாயலகால்

புள்நந் துழாமே பொருநீர்த் திருவரங் கா! அருளாய்

எண்ணந் துழாவு மிடத்துஉள வோபண்டும் இன்னன்னவே?

பதவுரை

வள்வாய் அலகால்

-

கூர்மையான வாயின் நுனியினால்

புள்

-

பறவைகள்

நந்து உழாமே

-

(தன்னிடத்துள்ள) சங்கைக்கோர்த்தாதபடி

பொரு

-

அலைமோதுகிற

வளை கொள்வது

-

(எமது) கைவளைகளைக் கொள்ளை கொள்ளாநின்றது

யாம்

-

(உன்பக்கல் ஈடுபட்ட) நாம்

இழப்போம்

-

வளையை இழக்கிறோம்; (இப்படியிருக்க)

ஓர் வாடை

-

(எமக்கும் தனக்கும் யாதொரு ஸம்பந்தமு மில்லாத காற்றானது.

நடுவே

-

இடையே பிரவேசித்து

நீர்

-

காவிரிநீர் சூழ்ந்த

திரு அரங்கா

-

ஸ்ரீரங்கமென்னுந் திருப்பதியை யுடையவனே!

தண் அம் துழாய்

-

குளிர்ந்த அழகிய (உனது திருத்துழாயானது

வண்ணம் துழாவி உலாவும்

-

(எமது) நாமை நிறத்தைக் கவர்ந்த பொருட்டுத் தடவித் தேடிக்கொண்டு ஸஞ்சரிக்கத் தொடங்குகின்றது.

அருளாய்

-

(அதற்கு யாம் மாமை யிழக்காதபடி) வந்து சேர்ந்தருள வேணும்.

எண்ணம் துழாவும் இடத்து (மனம் தடுமாறு மளவிலும்)

பண்டும் இன்னன்ன உளவோ

-

முன்பும் இப்படிப்பட்ட (எம் நிலைமைகள் போன்ற) நிலைமைகள் (வேறு எங்கேனும்) உள்ளனவோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாசுரத்தில் தோற்றுவித்த ஸம்ச்லேஷம் கனவின் காட்சிபொன்றதாதலான க்ஷணிகமாயிற்று; பழைய விச்லேஷவ்யஸநமே தோன்றிற்று. ஆகவே, நாயகனைப் பிரிந்த நாயகி வாடைக்கு வருந்தியிரங்கும் பாசுரத்தாலே ஆழ்வார் தமது க்லேசத்தை வெளியிடுகிறார். ஆற்றாமை மிகுதியால் தலைவனை எதிரில் நிற்கிறாப்போலப் பாவித்து முன்னிலைப்படுத்திக் கூறியது இது. அன்றி, உருவெளிப்பாட்டில் கண்ட தலைவனை நோக்கியுரைதத்ததுமாம். உன்னோடு நேரில் ஸம்பந்தம் பெற்று திருத்துழாயானது விச்வேஷகாலத்தில் ஸம்ச்லேஷத்தை நினைப்பூட்டி மிகவும் வருத்தப்படுத்தி உடலிளைக்கச் செய்வதும் அதற்கு ஆற்றாது நாமெலிந்து வளையிழப்பதும் யுக்தமாயிருக்கலாம்; அதுவன்றி, “பீஷாஸ்மாத் வாத: பவதே” வாயுவானவன் எம்பெருமானிடத்து அஞ்சிக்கொண்டு (அவனது கட்டளைக்கு உட்படிந்து) வீசுகின்றான்” என்ற உபநிஷத்தின்படியே இயல்பில் உனக்கு அஞ்சி நடக்குந் தன்மையான காற்று உனது ஸம்பந்தம்பெற்ற நம்மை மையம் பார்த்து வருந்திக் கொள்ளை கொள்ளைத் தொடங்குவது தகுதியோ? காற்று உன்னை நலிய என்ன ப்ராப்தியுண்டு! அங்ஙனம் ஆகாதபடி எம்மைக் காத்திட வேண்டும்; உன் பக்கல் அன்பு வைத்தவர்களில் எம்மைப்போல் வருந்தியவரும் உன்னால் உபேக்ஷிக்கப்பட்டவரும் இதுவரையிலும் எங்கும் எவருமில்லையேயென்கிறாள். திருத்துழாயானது என்னை எவ்வளவு வேணுமானாலும் ‘துன்பப்படுத்தட்டும், அதற்று நான் உடம்பட்டிருக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என்றது அதில் நோக்குடையதல்ல; ‘காற்று என்னை ஹிம்ஸிப்பதாவது ஒருபடியாலும் யுக்தமன்று, என்று வற்புறுத்திக் கூறுவதில் நோக்குடைத்து. ஒருபுறத்தில் திருத்துழாய் நலியவும் மற்றொருபுறத்தில் வாடை வந்து வீசி கலியவும் இப்படி இரண்டு ஹிம்ஸநவஸ்துக்களுக்கு ஈடுகொடுக்க என்னாலாகவில்லையே! இந்த ஹிம்ஸைக்கு அவகாசமின்றநியே ஸம்ச்லேஷத்தைத் தந்தருளாய் என்றவாறு.

விரஹிகளை வருத்துவதில் துணைவேண்டாமல் அஸஹாய சூரமான வாடை யென்பாள் ‘ஓர்வாடை’ என்கிறாள். ‘உலாவும்’ என்றதனால் கம்பீரமான செருக்குடை தோன்றும். “வனவரயுலகால புன் நந்துழாமே பொருநீர்த் திருவரங்கா!” என்று விளியால்- உனது நாட்டுக்கு உறுப்பான தண்ணீரும் தன்னையடைந்த பொருளை  எதிரி கருராதபடி திரைக்கையாற பொருது காத்திடுகின்றதே; உனக்குமாத்திரம் அது இயல்பாகாதோ? அடுத்தாரை ரக்ஷிக்குந்தன்மை அசேதநத்துக்கே இருக்கும்போது பரமசேதகனான உனக்கு அது மிகவும் இருக்கவேண்டாவோ? எனக் குறிப்பித்தபடி, காவிரி நீர் அலைமோதுவது இயற்கையாயினும் தன்னிடத்து உள்ள நத்தைகளைப் பறவைகள் கூர்மையான வாயலகால் கொத்தமைக்காக அலைமோதுவதாக வருணித்தது சமத்காரம், உழாமே - மே விருதிபெற்ற எதிர்மறை வினையெச்சம். உழுதல் - கொத்திக் கிளறுதல்.

அருளாய்- ‘செய்யாய்’ என்னும் வாய்ப்பாட்டுச்சொல் உடன்பாடு எதிர்மறை இரண்டுக்கும் பொதுவாதலால், ‘நீ அருளவேணும்’ என்கிற பொருள்போல ‘நீ அருளுகிறாயில்லை’ என்கிற பொருளும் கொள்ளவுரியதே.

எம்பொருமானைச் சேராத நிலையில் அவனது இனிமையும் இவ்வுலகத்துப் பொருளும் அவனை நினைப்பூட்டுவனவாய் தம்மை வருத்தும் நிலைமையை ஆழ்வார் அப்பெருமானை முன்னிலைப்படுத்திக் கூறுதல் இதற்கு உள்ளுறைபொருள். (தண்ணந்துழாய்வளை கொள்வது யாமிழப்போம்) குளிர்ந்த தன்மையையும் அழகிய குணத்தையுமுடைய உன் போக்யதை எமது அநந்யார்ஹசேஷத்லத்தைக் கவர்ந்த கொள்ளட்டும்; அதனை இந்த போய்யதைக்கு நாம் இழப்போமாக. அதுவன்றி (ஓர் வாடை நடுவே வண்ணந் துழாவி உலாவும்) உன் கட்டளையை அநுஸரித்து நடக்கக்கடவதான லௌதிக பதார்த்தம் எமது உருவத்தை மாற்றலுற்றது. (புள்ளந்து வன்வாயலகால் உழாமே போரும் நீர் திருவரங்கா) வஞ்சனையுள்ள மாயை சுத்தமான ஆத்மாவைக் கொடிய ஊழ்வினைமூலமாக வருத்தாதபடி தடுத்துக் காக்கிற குணத்தையுடைய ஸ்ரீரங்கநாதனே! (அருளாய்) அதுபோல எம்மிடத்தும் கருணைசெய்வாயாக? எண்ணம் துழவுமிடத்து  பண்டும் இன்னன்ன உளவோ?) துன்பத்தால் மனந்தடுமாறுகிற நிலையிலும் இப்படி இரங்காதிருக்கும் ஸ்வபாவம் முன்பும் உண்டோ? இல்லையென்றபடி, ஸ்ரீஜானகிப் பிராட்டி, த்ரௌபதி, கஜேந்திராழ்வான், ப்ரஹ்லாதன், விபீஷணன், காகன் தொடக்கமான அளவற்ற அடியார்களிடத்தெல்லாம் இப்படிப்பட்ட உபேக்ஷை கண்டதில்லையே. எனக்கே இங்ஙனமாயிற்று என்றெரென்க.

இன்னன்ன = இவை அன்ன என்பதன் தொகுத்தல்; இவை போல்பவை என்பவடி ‘எண்ணத்துழாவுமிடத்து’ என்பதற்கு- மனத்தினால் ஆராய்ந்து நோக்குமிடத்து என்று பொருள்கொளள்வுங்கூடும். உனது குணங்களை ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட உபேக்ஷை வேறெவ்விஷயத்திலுங் கண்டதில்லை; பாவியெனுக்கே இங்ஙனமாயிற்று என்கை.

English Translation

O Lord of Tiruvarangam where waves of the kaveri ensure that sharp-beaked birds do not peck into snails! While I lose my bangles for the Tulasi wreath, is it proper for a cool breeze to blow through me and drain my colour? Has it ever happeened like this before? Tell me!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain