(2475)

மெய்தெளிந்தா ரெஞ்செய்யார்? வேறானார் நீறாக

கைதெளிந்து காட்டிக் களப்படுத்து, பைதெளிந்த

பாம்பின் ஆனையாய். அருளாய் அடியேற்கு

வேம்பும் கறியாகும் ஏன்று.

 

பதவுரை

வேறு ஆனார்

-

வேறுபட்டவர்களான (பகைவர்களான) துரியோதநாதிகள்

நீறு ஆக

-

சாம்பலாய் ஒழிந்து போம்படியாக

தெளிந்து

-

(ஆச்ரித விரோதிகளைக் கொல்லுதல் தருமமே என்று) தேறி

தெளிந்த பை பாம்பு இன்அணையாய்

-

விளங்குகின்ற படங்களை யுடைய ஆதிசேஷனாகிற இனிமையான படுக்கையைச் சென்று சேர்ந்த பிரானே!

அடியேற்கு

-

அடியேனுக்கு

அருளாய்

-

அருள்புரிய வேணும்

என்று

-

வேணுமென்று விரும்பினால்

கைகாட்டி

-

(பாண்டவர்களுக்கு) வேண்டிய உதவிகளைச் செய்து

களம படுத்து

-

(அந்த எதிரிகளைப் போர்களத்தில் கொன்றொழித்து) (இவ்வகையாலே மண்ணின்பாரம் நீக்கி)

வேம்பும் கறி ஆகும்

-

வேப்பிலையும் கறியாகச் சமைத்துக் கொள்ள கூடியதே

மெய் தெளிந்தார்

-

உள்ளதை உள்ளபடியறியுமவர்கள்

என் செய்யார்

-

எதுதான் செய்யமுடியாதவர்கள் (எது நினைத்தாலும்  செய்யக்கூடியவர்களே)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அடியேன் சீலமில்லாச் சிறியேனாயினும் அடியேன் பக்கல் அருள்செய்யவேணும், குற்றமே வடிவாகவுள்ளவர்களை இகழ்ந்தொழிய வேண்டுமேயன்றிக் கைக்கொள்வது தகாது என்று திருவுள்ளம் பற்றலாகாது, வேப்பிலை கைக்குமென்றாலும் இதைக் கறியாகச் சமைத்து உட்கொள்ள வேணுமென்னும் விரும்புடையார்க்கு அது கறியாகின்றதன்றோ, அப்படியே குற்றவாளரைக் கைக்கொள்வதே சீரியது என்று தெளிந்தவர்கள் என்போல்வாரை ஏன் அங்கீகரிக்கமாட்டார்கள்? அங்கீகரித்துத் தீருவர்கள். ஸ்வாமிந்! அடியேனுடைய குற்றங்களை நற்றமாகவே கொண்டோ அல்லது அவற்றில் திருக்கண் செலுத்தாமலோ அடியேனை விஷயீகரித்தருளவேணும் என்றாராயிற்று.

வேறானார் – அடியவர்களான பாண்டவர்களோடு வேறுபட்ட துரியோதனாகியரைச் சொல்லுகிறது. ஆச்ரிதவிரோதிகளென்ற காரணத்தினால் எம்பெருமான்றனக்கே விரோதிகளென்க.

 

English Translation

O Lord reclining on a bright serpent! With a clear goal, you directed a war against the perverse hundred and burnt them to ashes. Pray grace this devotee self of yours. Even Neem can become food when properly cooked.  How much more can be done with an enlightened mind!

 
வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்


Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain