nalaeram_logo.jpg
(2469)

உயிர்கொண் டுடலொழிய ஓடும்போ தோடி,

அயர்வென்ற தீர்ப்பான்பேர் பாடி, - செயல்தீரச்

சிந்தித்து வாழ்வாரே வாழ்வார், சிறுசமயப்

பந்தனையார் வாழ்வேல் பழுது.

பதவுரை

உடல் ஒழிய

-

சரீரத்தைப் போட்டு விட்டு

உயிர் கொண்டு

-

ஆத்மாவைப் பிடித்துக்கொண்டு

ஓடும்போது

-

(யமபடர்கள்) ஓடும்போது

ஓடி

-

(எம்பெருமானாகிய தானே) ஓடிச் சென்று

செயல் தீர

-

பேற்றுக்காக நாம் செய்ய வேண்டிய செயல் (ப்ரவ்ருத்தி) ஒன்றுமில்லை யென்று

சிந்தித்து

-

ஸ்வரூபத்தை யுணர்ந்து

வாழ்வாரே

-

வாழநினைப்பவர்களே

வாழ்வார்

-

வாழ்ச்சி பெறுவர்

அயர்வு என்ற

-

கஷ்ட மென்று சொல்லப் படுகிற எல்லாவற்றையும்

தீர்ப்பான்

-

தீர்க்குமவனான எம்பெருமானுடைய

பேர்

-

திருநாமங்களை

பாடி

-

வாய்விட்டுப் பாடி

சிறு சமயம் பந்தனையார்

-

அற்பங்களாய் பல நியமங்களோடு கூடினவையாய் ஸம்ஸாரபந்தத்திற்கே காரணமாகவுள்ளவையான உபாயங்களைப் பற்றினவர்களுடைய

வாழ்வு ஏல்

-

வாழ்ச்சியோ வென்றால்

பழுது

-

உபயோகமற்றது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ப்ரவ்ருத்திதர்மநிஷ்டரென்றும் நிவ்ருத்திதர்ம நிஷ்டரென்றும் இருவகை யதிகாரிகளுண்டு, ஆயாஸப்பட்டுச் செய்யும் ஸ்வப்ரவ்ருத்திகளாலன்றிப் பலன்பெற முடியாதென்றெண்ணி விரிவாக உபாயங்களை அநுஷ்டிக்குமவர்கள் ப்ரவ்ருத்தி தர்மநிஷ்டரெனப் படுவர், (ஸ்வரூபோசிதங்களான) திருவிளக்கெரிக்கை திருமாலையெடுக்கை முதலான ப்ரவ்ருத்திதர்மங்களையும் உபாயபுத்தியின்றியே ஸ்வயம் புருஷார்த்தபுத்தியுடன் அநுஷ்டித்து, எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையன்றிப் பேற்றுக்கு உபாயமாவது வேறொன்றுமில்லை, நம்முடைய உபாயப்ரவ்ருத்திகளெல்லாம் எம்பெருமான் தானே செய்யும் ரக்ஷணத்துக்கு விலக்கடியாகும் என்று துணிந்து 1. “காம்பறத்தலை சிரைத்து உன்கடைத்தலையிருந்து வாழுஞ்சோம்பர்“ என்கிறபடியே அகிஞ்சநராயிருக்குமவர்கள் நிவ்ருத்தி தர்மநிஷ்டரெனப் படுவர் (***) இவ்விருவகை யதிகாரிகளுள், செயல் தீரச்சிந்தித்து வாழ்பவரான நிவ்ருத்தி தர்மநிஷ்டர்களே உண்மையாக வாழ்வரென்றும், அநர்த்தகரங்களான காற்கட்டுகளைப் பூண்டுகொள்ளும் ப்ரவ்ருத்தி தர்மநிஷ்டர்கள் இப்படி வாழ்வது அரிது என்றும் இப்பாட்டா லருளிச்செய்யப்படுகிறது.

(உயிர்கொண்டு இத்யாதி) யமபடர்கள் வந்து ஆத்மாக்களைச் சரீரங்களில் நின்றும் இழுத்துக்கொண்டு காலபாசத்தாற்கட்டி நலியக் கொண்டுபோனால் தானே நேரில் ஓடிச் சென்று அயர்வுகளைத் தீர்ப்பவனான எம்பெருமானுடைய திருநாமங்களை மகிழ்ந்துபாடி, தம்முடைய பாரதந்திரிய ஸ்வரூபத்தை உற்றுநோக்கி உபாய ப்ரவ்ருத்திகளை யொழித்திருப்பவர்களுடைய வாழ்வே வாழ்வு, மற்றையோருடைய வாழ்வு தாழ்வுதான் என்றாராயிற்று.

அயர்வென்ற – இரண்டனுருபுதொக்க வினையாலணையும் பெயர். “தீர்ப்பான் பெயர்பாடி“ என்றபுதிய பாடத்தில் வெண்டனை பிறழும், ‘பேர்பாடி‘ என்ற பிராசீநபாடமே கொள்க.

பந்தனையார் “***“ என்ற வடசொல் பந்தனை யெனத் திரிந்தது, அதனையுடையார் பந்தனையார். காற்கட்டுகளை யுடையார் என்றவாறு. சிறு சமயம் என்ற விசேஷணங்கள் பந்தனையில் அந்வயிக்கும்.

English Translation

When life departs from the body, the lord rushes to ensure the safety of his souls. Sing his names, Ending Karmas, contemplating him. Those who live thus, alone live. Others who are tied to small returns do not live at all.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain