nalaeram_logo.jpg
(2468)

இமையப் பெருமலைபோ லிந்திரனார்க் கிட்ட,

சமய விருந்துண்டார் காப்பார் - சமயங்கள்

கண்டான் அவைகாப்பான் கார்க்கண்டன் நான்முகனோடு

உண்டா னுலகோ டுயிர்.

பதவுரை

இமயம் பெருமலைபோல்

-

பெரிய இமயமலை போன்றிருக்கும்படி

இந்திரனார்க்கு இட்ட

-

இந்திரனுக்காகச் சமைத்து வைத்த

சமயம் விருந்து

-

வழக்கமான ஆராதனையை

உண்டு

-

உட்கொண்டபோது (நேர்ந்த கல்மழையாலாகிய ஆபத்தில் நின்றும்)

கார்க்கண்டன் நான்முகனோடு காப்பான் ஆர்

-

சிவனையும் பிரமனையும் (பெரிய ஆபத்துக்களில் நின்றும்) ரக்ஷிப்பவன் யார்?

ஆர் காப்பார்

-

காப்பாற்றினது யார்?

சமயங்கள்

-

வைதிக மதங்களை

கண்டான்

-

பிரவர்த்திப்பித்தவன்

ஆர்

-

யார்?

அவை காப்பான்

-

அவற்றை (நிலை குலையாதபடி) ரக்ஷிப்பவன்

ஆர்

-

யார்?

உலகோடு உயிர் உண்டான் ஆர்

-

உலகங்களையும் (உலகங்களிலுள்ள ஜீவராசிகளையும் (பிரளயத்தில்) உண்டு ரக்ஷித்தவன் யார்? (எல்லாம் எம்பெருமானே யன்றோ)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸர்வரக்ஷகன் எம்பெருமானே யென்பதை மூதலிக்கிறார். பண்டு திருவாய்ப்பாடியில் கண்ணபிரானுடைய அதிமாநுஷ சீலவ்ருத்த வேஷங்களைக் கண்டு ஆயர்களனைவரும் ‘இவனே நம் குலக்கொழுந்து, இவன் கட்டளைப்படியே நாம் நடக்கவேண்டும்‘ என்று நிச்சயித்திருந்தனர். இங்ஙனமிருக்கையில் சரத்காலம் வந்தது, அப்போது இடையர்கள் வருஷந்தோறும் நடத்துவதுபோல் வழக்கபடி இந்திரனுக்குப் பூஜைசெய்யப் பற்பல வண்டிகளில் சோறும் தயிரும் நெய்யும் காய்கறிகளும் மற்றுமுள்ள பூஜாத்ரவ்யங்களுமாகிய இவற்றைச் சேகரிப்பதைக் கண்டு கிருஷ்ணன் ‘ஓ பெரியோர்களே! நாமும் நம்முடைய பசுக்களும் எதனால் ஜீவிக்கிறோமோ அதற்குப் பூஜை செய்வதன்றோ தகுதி, இக் கோவர்தனகிரியே பசுக்களுக்குப் புல்லுந் தண்ணீருங் கொடுத்துக் காப்பாற்றுகின்றது, இந்திரனால் நமக்கு என்ன பயணுன்டு? ஒன்றுமில்லை, ஆகையால் நீங்கள் இப்பூசனை யனைத்தையும் இம்மலைக்கே இடுங்கள்‘ என்ன, இடையர்கள் இதைக்கேட்டு அங்ஙனமே செய், கண்ணபிரான் தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றைமுற்றும் அமுது செய்தருள, அவ்விந்திரன் மிகக்கோபத்தோடு புஷ்கலாவர்த்தம் முதலிய பல மேகங்களை ஏவி, கண்ணன் விரும்பியமேய்க்கிற கன்று கட்கும் பசுக்கட்கும் இடையர்க்கும் இடைச்சியர்க்கும் தீங்குதரும் படி கல்மழையை ஏழுநாள் இடைவிடாது பெய்வித்தபொழுது, கண்ணபிரான் கோவர்த்தனமலையை யெடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லாவுயிர்களைங் காத்தருளினன் என்ற வரலாறு முன்னடிகட்கு அறியதக்கது.

இடையர் இந்திரனுக்கு இட்ட பூஜை “அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும் தயிர்வாவியும் நெய்யளறும்“ என்னும்படியாகப் பெரியமலை போன்றிருந்ததனால் ‘இமய பெருமலைபோல்‘ என்றார்.

சமயவிருந்து – ‘ஸமயம்‘ என்னும் வடசொல்லுக்குள்ள பல பொருள்களில் ‘ஸங்கேதம்‘ என்கிற பொருள் இங்கு விவக்ஷிதம், வினாச்சுட்டு மேல் ஒவ்வொரு வினையிலும் அந்வயிக்கவுரியது. வைதிகமதங்களை ஏற்படுத்தினவன் யார்? பாஹ்யகுத்ருஷ்டி மதங்களாலே அவற்றுக்குக் குலைதல் வாராதபடி அவற்றைப் பரிபாலனம் செய்தருள்பவன் யார்? சிவனுக்கு நேர்ந்திருந்த பிரமஹத்தியாகிற ஆபத்தை நீக்கிக் காத்தவன் யார்? வேதங்களை அசுரர்க்குப் பறி கொடுத்துக் கண்கெட்டு நின்று தவித்த பிரமன் துயரைத் தீர்த்தது யார்? உலகங்களைப் பிரளங்கொள்ளாதபடி திருவயிற்றிலே வைத்து நோக்கினவன் யார்? எல்லாவகை ரக்ஷணங்களுஞ் செய்தவன் எம்பெருமானே யென்று தெளிவித்தபடி. ஆளவந்தார் இப்பாசுரத்தையே திருவுள்ளம்பற்றி ஸ்தோத்ரத்நத்தில் “***“ என்ற மூன்று ச்லோகங்களருளிச் செய்தன ரென்னலாம்.

‘கார்க்கண்டன் நான்முகனோடு உலகோடு உயிர் உண்டான் ஆர்‘ என்னுமளவும் ஒரு வாக்கியமாக யோஜித்து உரைக்கவுமாம். “அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டுமிழ்ந்த எச்சில் தேவர்“ (பெரிய திருமொழி 11-6-2) என்கை.

English Translation

The Lord ate up the mountain-like heap of food-offering meant for Indra, then protected the cows with a mount. Who else can do this? He is the maker afreligious texts, and their protector too. He swallowed Siva, Brahma and all the worlds.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain