nalaeram_logo.jpg
(2466)

தொழிலெனக்குத் தொல்லைமால் தன்னாம மேத்த,

பொழுதெனக்கு மற்றதுவே போதும், - கழிசினத்த

வல்லாளன் வானரக்கோன் வாலி மதனழித்த,

வில்லாளன் நெஞ்சத் துளன்.

பதவுரை

கழி சினத்த

-

மிகக்கோபத்தை யுடையவனும்

வல்லாளன்

-

மிக்க வலிமையுடையவனும்

வானார் கோன்

-

குரங்குகட்கு அரசனுமாகிய

வாலி

-

வாலியினுடைய

மதன்

-

மதத்தை (கொழுப்பை

அழித்த

-

தொலைத்த

வில் ஆளன்

-

சார்ங்கவில்லை ஆள்பவனான இராமபிரான்

நெஞ்சத்து

-

எனது நெஞசிடத்து

உளன்

-

எழுந்தருளி யிருக்கின்றான்

எனக்கு

-

(அந்த இராமபிரானுடைய திருக்குணங்களில் அகப்பட்ட) எனக்கு

தொழில்

-

நித்யகருமம்

தொல்லை மால் தன் நாமம் ஏத்த

-

புராணனான அந்த ஸர்வேச்வரனுடைய திருநாமங்களை வாயாரப் புகழ்வதாம்

எனக்கு

-

(உலகத்தாரில் வேறு பட்டவனான) எனக்கு

மற்றதுவே

-

கீழ்ச்சொன்ன ஸ்ரீராமநாம ஸங்கீர்த்தனத்தினாலேயே

பொழுது போதும்

-

போதுபோகும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சூது சதுரங்கமாடியே போதைப் போக்கும் சில லௌகிகர்கள் ‘ஆழ்வாரே! எங்களோடே ஒருகை ஆடவருவீரோ?! என்றழைக்க, அவர்கட்கு மறுமொழிகூறும் பாசுரமிது என்று விநோதமாகப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செய்வது காண்மின், - “எதிரிகள் சதுரங்கம் பொரப் போருவீரோ என்றழைக்க இவர் சொல்லும்படி“ என்று.

எம்பெருமானுடைய திருநாமங்களை ஸங்கீர்த்தநம் பண்ணுவதே எனக்கு நித்யகர்மாநுஷ்டாநம், என்போதெல்லாம் அதிலே போகின்றது, அதற்கே போது போராதிருக்க வேறொன்றுக்குப் போதுகிடைக்குமோ? வேறொன்றிலே நெஞ்சைச் செலுத்தவுமொட்டாதபடி.. எம்பெருமான் என்னெஞ்சினுள் உறைகின்றான் காண்மின் என்றாராயிற்று.

வானார் + கோன், வானரக்கோன். மதன் –மதம், மகரனகரப்போலி. வெள்ளிமலை பறித்த பெருவீரனான இராவணனையும் வாலிலே கொண்டு திரிந்தவனான வாலிக்கு ‘கழிசினத்த, வல்லாளன்‘ என்ற அடைமொழிகள் பொருந்தும். (வாலி மதனழித்த வரலாறு, கீழ் இருபத்தெட்டாம் பாட்டினுரையிற் காண்க.)

இராமபிரான் வாலியைக் கொன்றவிதனில் ஸாமாந்யர் சில ஆக்ஷேபங்கள் கூறுவதுண்டு, அவையும் அவற்றுக்கு ஸமாதானங்களும் வருமாறு. – ‘இராவணவதத்திற்கு உதவி தேடுகிற இராமன் இராவணை எளிதில் வெல்லவல்ல வாலியைக் கொன்றுவிட்டு, பயங்கொள்ளியான ஸுக்ரீவனை உதவிசெய்து கொண்டது என்ன புத்திசாலித்தனம்!‘ என்பர் சிலர், கேண்மின் – வலிமுன்னமே இராவணனுடன் அக்நிஸாக்ஷிகமாக ஸ்நேஹங் கொண்டிருந்தமைபற்றி அவனைத்தான் உதவிகொண்டால் இராவணன் முதலிய துஷ்டர்களைத் தொலைக்க வகையில்லாமையால்  இராமன் ஸுக்ரீவனை நண்பனாகக் கொண்டு அவன் வேண்டுகோளின்படி வாலியை வதைத்திட்டனன். இனிச் செய்ய வேண்டிய ராவண ஸம்ஹாரமாகிற தேவகாரியத்திற்கு இவ்வாலி வதம் அங்கமெனக் கருதத்தக்கது, எவ்வகைப் பெருந்தீங்கு செய்திருந்தாலும் சரணமடைந்தால் அவர்களைப் பாதுகாப்பதென்ற சிறந்த தருமத்தை மேற்கொண்டு நடப்பவனான இராமபிரான், அத்தருமத்தை முழுதும் விட்டவனும் ஸுக்ரீவன் சரணமடைந்த பின்னரும் அவனை மிக வருந்திக் கொல்லத் தொடங்கி அந்தத் தருமத்திற்கு எதிரானவனுமான வாலியைக் கொன்றது பொருந்தும். அன்றியும், பிறர் மனைவியைக் காதலித்துக் கவர்தலும், தம்பியிடம் பகை பாராட்டுதலும், வலியழிந்து முதுகுகாட்டி ஓடுகின்றவனைத் துரத்தி துரத்திக் கொல்லத் தொடங்குதலும் முதலிய தீச்செயல்கள் வாலியினிடம் இருந்ததனாலும் பரமதார்மிகனான இராமன் வாலியை அழிக்கலானான். இராமபிரான் தான் ஏகபத்நீ விரதமுடையனாய், தம்பியரைத் தன்னுயிர்போலக் கொள்பவனாய், வலியிழந்த பகைவனை ‘இன்றுபோய் நாளைவா‘ என்று அன்போடு சொல்லி விடுத்தருளும் மஹாவீரனாவான்.

இஃதெல்லாமிருக்கட்டும், மறைந்து நின்று அம்பு எய்தது கூடுமோ? எனின், இது அரசர் கொடிய விலங்குகளைப் பதுங்கி நின்று அழிக்கும் வேட்டைமுறையா லென்பர். “***“ என்று அதிமாநுஷஸ்வத்தில் ஆழ்வானருளிச் செய்ததுங்காண்க. வேறுவகையான ஸமாதானங்களும் உள்ளன. முதலில் சரணமடைந்த ஸுக்ரீவனுக்கு அபயமளித்து வாலியைக் கொல்வதாக வாக்குதத்தஞ் செய்துவிட்ட பெருமாள் பின்னர் வாலியினெதிரில் நின்று போர்செய்தால் இப்பெருமானது திறத்தைக் கண்டு அஞ்சி வாலியும் இவனைச் சரணமடைந்திருவனாயின் தஞ்சமடைந்தவனைக் கொலை செய்யக்கூடாமை பற்றி அவனைக் கொல்லாதுவிட நேர்ந்தால் முன்னைய வாக்கு (ஸுக்ரீவனுக்கு அளித்த வாக்கு)த் தவறி விடுமேயென்ற நோக்கம் முக்கிய காரணமாம். அன்றியும், எதிர்ந்தார் வலிமையிற் பாதி தன்னிடம் வந்து கூடும்படி வாலி சிவபிரானிடத்துப் பெற்றிருக்கின்ற வரம் பழுதுபடாமலிக்குமாறு மறைந்து நின்று அம்பெய்தனன் என்றலு மொன்று. அவரவர்கள் தேவதாந்தரங்களிடத்துப் பெற்றவரங்கள் பழுதுபடாதபடியன்றோ எம்பெருமான் காரியஞ்செய்வது. இங்ஙனம் பல காரணங்களுள. இங்கு விரிப்பிற் பெருகும். ஸ்ரீராமாயணம் அதன் வியாக்கியானங்கள் வல்லார்வாய்க் கேட்டுணர்க. கடவுளரது நியாயம் நுட்பமனாதும் அறிதற்கு அரியதுமாதலால் அது மனிதரது நியாயத்தோடு ஒப்பு நோக்கி ஆராய்தற்கு உரியதன்றென்பது உணரத்தக்கது நிற்க.

English Translation

The bow-wielder Lord who pierced an arrow into the mighty angry Vall's chest is forever in my heart, Praising the ancient Lord is my vacation, it is also a Good avocation for me!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain