nalaeram_logo.jpg
(2459)

கண்டு வணங்கினார்க் கென்னாங்கொல், காமனுடல்

கொண்ட தவத்தாற்க்கு உமையுணர்த்த, - வண்டலம்பும்

தாரலங்கல் நீண்முடியான் றன்பெய ரே கேட்டிருந்து,அங்

காரலங்க லானமையா லாய்ந்து.

பதவுரை

காமன்

-

மன்மதனுடைய

உடல்

-

சரீரத்தை

கொண்ட

-

நீறாக்கின

தவத்தாற்கு

-

தபஸ்வியான பரம சிவனுக்கு

உமை

-

(மனைவியான) பார்வதி யானவள்

உணர்த்த

-

தெரிவிக்க,

அங்கு

-

அப்போதே

ஆர் அலங்கல் ஆனமை

-

மிகவும் அசைந்து போனமையை

ஆய்ந்தால்

-

ஆராய்ந்து பார்க்கில்,

வண்டு அலம்பும் தார் அலங்கல் நீள்முடியான தன் பெயர்கேட்டிருந்தே

-

வண்டுகள் ஒலிக்கப் பெற்றபூமாலயை நீண்ட திருவபிஷேகத்திலுடையனான எம்பெருமானுடைய திருநாமங்களைக் கேட்ட மாத்திரத்திலேயே

கண்டு வணங்கினார்க்கு

-

நேரேகண்டு வணங்குமவர்கட்கு

என் ஆம் கொல்

-

எப்படிப்பட்ட விகாரமுண்டாகுமோ (என்பது சொல்ல முடியாது)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திருநாமத்தை யாத்ருச்சிகமாகக் கேட்கப்பெற்ற பரமசிவன் விகாரமடைந்ததே வாசாமகோசரமென்றால் எம்பெருமானை ஸாக்ஷாத்தாக ஸேவிக்கப்பெறுமவர்கள் படும்பாடு சொல்லக்கூடியதோ? என்கிறார்.

திருவாய்மொழியில், (6-7-3) உண்ணுஞசோறு பருகு நீரில் மூன்றாம்பாட்டில் “கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ“ என்றவிடத்து ஈடுமுப்பத்தாறாயிரப்படி திவ்யஸூக்திகள் உற்று நோக்கத்தக்கன, (அவற்றை இங்கு அநுவதிப்போம்.) “(என்செய்யுங்கொலோ). சொல்லமாட்டாள், தவிரமாட்டாள், அழாடிதாழியமாட்டாள், எங்ஙனே படுகிறாளோ!. நம்மையும் பிறரையும்விட்டு அவன் திருநாமங்களை யநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றோம், அவன்றன்னையே கண்டு அநுபவிக்கிற போதையழகு காணப்பெற்றிலோமே! அநுஸந்தாத வேளையிற்போலன்றிறே கண்டால் பிறக்கும் விகாரங்கள் ‘காமனுடல்கொண்ட தவத்தாற்கு உமையுணர்த்த வண்டலம்புந் தாரலங்கள் நீண்முடியான்றன் பெயரே கேட்டிருந்து அங்காரலங்கலானமையால் –கண்டு வணங்கினார்க்கு என்னாங்கொல்! என்றிறே யிருப்பது“.

பரமசிவனுக்குப் பார்வதி பகவந்நாமத்தை யுணர்த்தினவிதம் அவ்விடத்து அடையவளைந்தா னரும்பதவுரையிற் காணப்படுகின்றது. –ஒருகால் ருத்ரன் த்யாநபரனாயிருக்கக்கண்ட பார்வதி யானவள் ‘எல்லாரும் உம்மை உபாஸநைபண்ணாநிற்க நீர் யாரை உபாஸிக்கின்றீர்? உமக்கும் உபாஸ்ய விஷயம் ஒன்றுண்டோ? என்று கேட்டாளாம் இப்படி இவள் கேட்டதற்குப் பரமசிவன் “ஸ்ரீமந்நாராயணனை உபாஸிக்கிறேன்“ என்று மறுமொழி கூறவேண்டி அத்திருநாமத்தை ஸ்மரித்தமாத்திரத்திலேயே ‘காலாழும் நெஞ்சழியும் கண்சுழலும்‘ என்றும் ‘உள்ளெலாமுருகிக் குரல் தழுத்தொழிந்தேனுடம்பெலாங் கண்ணநீர்சோர‘ என்றுஞ் சொல்லலாம்படி விகாரமடைந்தானாம்.

உமை உணர்த்த –‘நீர் யாரை உபாஸிக்கிறீர்? என்கிற கேள்வி வியாஜத்தாலே பகவந்நாமங்களைச் சிவபிரானுக்குப் பார்வதி உணர்த்தினளென்க. இந்த ப்ரஸங்கத்தால் பகவந்நாமங்களை ஸ்மரிக்கப்பெற்ற சிவபிரான் செங்கண்மால் நாமங்களைச் செவிக்கின்பமாகக் கேட்க விரும்பி அப்பார்வதியையே பாடச்சொல்ல, அப்படியே அவள்பாட, தென்றலும் சிறுதுளியும் பாட்டாற்போலே இனிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது உள்குழைந்தானென்ப.

உமை –“***“ என்னும் வடசொல் ஐயீறாயிற்று. ஆர் அலங்கல் ஆனமை – ‘அலங்கல்‘ என்று மாலைக்கும் அசைவுக்கும் பெயர். முடித்துவாடின பூமாலைபோலே துவண்டு விழுந்தான் சிவன் என்க. ‘ஆனமையால்‘ என்றவிடத்துள்ள ‘ஆல்‘ என்பதை ‘ஆய்ந்து‘ என்றதோடு கூட்டி ‘ஆய்ந்தால்‘ என்றாக்கியுரைக்கப்பட்டது. உள்ளபடியே உரைக்கவுமாம்

English Translation

Siva who burnt Madana to ashes become motionless when he heard uma sing the names of the bee-humming Tulasi-wreathed lord-wreathed lord. How much more can happen if one offers worship and sings as well!

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain