nalaeram_logo.jpg
(2455)

பதிப்பகைஞர்க் காற்றாது பய்திரைநீர்ப் பாழி,

மதித்தடைந்த வாளரவந் தன்னை,- மத்திவன்றன்

வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனை,

அல்லதொன் றேத்தாதென் நா.

பதவுரை

பதி பகைஞற்கு ஆற்றாது

-

ஸஹஜ சத்ருவான பெரிய திருவடிக்கு அஞ்சி,

பாய் திரை நீர்பாழி

-

பாம்பின அலைகளோடே கூடின நீரையுடைத்தான கடல்போலே குளிர்ந்த திருபடுக்கையை

மதித்து

-

புகலிடமாக நம்பி

அடைந்த

-

வந்துபற்றின

வாள் அரவம் தன்னை

-

ஒளிபொருந்திய ஸர்ப்பமாகிய ஸுமுகனை

மதித்து

-

ஆதரித்து

அவன் தன்

-

அந்த (சத்ருவான) கருடனுடைய

வல் ஆகத்து ஏற்றிய

-

வலிமைதங்கிய சரீரத்திலே ஏறவிட்டவனும்

மாமேனி மாயவனை அல்லாது

-

சிறந்த திவ்ய மங்கள விக்ரஹத்தை யுடையவனுமான ஸர்வேச்சரனை யன்றி

ஒன்று வேறொன்றை

என் நா

-

எனது நாவானது

ஏத்தாது

-

தோத்திரம் செய்யாது.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆச்ரிதரக்ஷணம் பண்ணுவதில் வல்லவனான எம்பெருமானைத் தவிர்த்து மற்றையோர்க்கு அடிமைப்படலாகா தென்கிறார். அஞ்சிவந்து அடிபணிந்த ஸுமுகனுக்கு அபய மளித்த வரலாற்றை இப்பாட்டிலருளிச் செய்கிறார். தேவந்திரனுக்குப் பரம ஆப்தனும் ஸாரதியுமான மாதலியென்பவன் தனது புத்திரியான குணகேசி யென்னுங் கன்னிகைக்குத் தகுந்த வரனைத் தேட நாரத மஹர்ஷியோடு புறப்பட்டுப் பலவுலகங்களிலுஞ் சென்று கடைசியாகப் பாதாளலோகத்தில் போகவதி யென்னுஞ் சிறந்த நகரத்தை யடைந்து ஸுமுக னென்னும் நாக்குமாரனைக் கண்டு அவனது அழகு குணம் முதலியவற்றிலீடுபட்டு அவனுக்குத் தன்மகளை மணம் புரிவிக்க வுத்தேசித்து அவனது பிதாமஹனான ஆர்யகனைக் கண்டு தன் உத்தேசத்தைத் தெரிவிக்க, ஆர்யகன் ஆநந்தத்தையும் ஸங்கடத்தையும் ஏககாலத்தில் கொண்டவனாகி ‘இவனது தந்தையைக் கருடன் பக்ஷித்து இவனையும் ஒரு மாதத்திற்குள் பக்ஷிப்பேனென்று சொல்லியிருக்கிறானாதலால் இவனுக்கு இப்போது துவிவாஹம் நடத்துவது உசிதமன்று‘ என்று தெரிவித்தான். அதற்கு மாதலி ‘இவன் என்னோடு வநது தேவேநதிரனைக் காணட்டும், இவனுக்கு ஆயுளைத் தந்து கருடனால் கேடுவராமல் தடுக்க முயல்வேன்‘ என்று சொல்லி அச்சுமுகனை உடனழைத்துக் கொண்டு சென்று உபேந்திர மூர்த்தியோடிருந்த தேவேந்திரனைக் கண்டு நாரதர்மூலமாகச் செய்தியைத் தெரிவிக்க, அதுகேட்ட உபேந்திரனான ஸ்ரீமஹாவிஷ்ணு ‘இவனுக்கு அம்ருத்தைத் தரலாம், அதனால் இஷ்டஸித்தி உண்டாகும்‘ என்று சொல்ல, இந்திரன் கருடனுடைய பராக்ரமத்தை நினைத்து சிறிது அச்சத்துடனே அம்ருத முண்பியாமல் அந்த ஸுமுகனுக்கு நீண்ட ஆயுளை மாத்திரம் வரமாக அளிக்க, உடனே மாதலி அச்சுமுகனுக்குத் தன் மகளை மணஞ்செய்வித்தான், இச்செய்தியைக் கேள்வியுற்ற கருடன் இந்திரனோடு மாறுபட்டுத்தன் இரையைத் தடுத்ததற்காக நிஷ்டூரமாகப் பேசுகையில், ஸுமுகன் தான் நீண்ட ஆயுளை வரம் பெற்றிருந்தாலும் கருடனுடைய கறுவுதலைக் கண்டஞ்சிப் பாம்புவடிவமாயத் திருமாலினருகிற் சேர்ந்து அப்பெருமானது கட்டிலின் காலைக் கட்டிக்கொண்டு சரண்புக, பின்பு கருடன் திருமாலை நோக்கி ‘ஸகலதேவர்களினுள்ளும் மஹா பலசாலான வுன்னைச் சிறிதும் சிரமமின்றி இறகு முனையால் சுமக்கின்ற என்னைவிட வலிமையுடையார் யார்? இதனை சற்று ஆலோசியும்‘ என்று கருவங்கொண்டு பேச கடூரமான அந்த வார்த்தையைக் கேட்ட எம்பெருமான் கருடனை நோக்கி ‘மிகவும் துர்ப்பலனான நீ தன்னை மஹாபலசாலியாக எண்ணி என்முன்னே ஆத்மஸ்துதி செய்து கொண்டது போதும், மூன்று லோகமும் எனது உடம்பை வஹிக்க முடியாதே, யானே எனது சக்தியால் என்னையும் வஹித்துக் கொண்டு உன்னையுமல்லவோ வஹிக்கிறேன் எனது இந்த வலக்கையொன்றை மாத்திரமாவது நீ தாங்குவையா? என்று சொல்லித் தமது வலக்கையைக் கருடனது தோளில் வைத்த மாத்திரத்தில் அவன் அந்தத் திருக்கையின் அதிபாரத்தைத் தாங்கமாட்டாமல் வருந்தி வலியழிந்து மூர்ச்சித்து விழுந்து பின்பு அரிதில் தெளிந்து எம்பெருமானை வணங்கித் துதித்து அபராதக்ஷாமணஞ்செய்து கொள்ள, திருமால் திருவுள்ளமிரங்கி அவனுக்கு ஸமாதானஞ் சொல்லித் தனது திருவடியின் பெருவிரலால் ஸுமுகனென்ற நாகத்தை யெடுத்துக் கருடன் தோளிலிட்டு ‘இவனை நீ உனது அடைக்கலமாகக் கொண்டு பாதுகாக்கக் கடவை‘ என்று குறிப்பிக்க அது முதலாக ஸுமுகனோடு கருடன் ஸநேஹங் கொண்டு அவனைத் தோளில் தரிக்க, அவனும் அச்சமின்றி ‘கருடா! ஸுகமா? என்று க்ஷேமம் விசாரிப்பவனாயினன் என்ற உபாக்கியானம் இங்கு அறியத்தக்கது. முதல் திருவந்தியில் “அடுத்த கடும் பகைஞற்கு“ என்ற பாட்டிலும் பெரிய திருமொழியில் (5-8-4) “நஞ்சு சோர்வதோர் வெஞ்சினவலவம்“ என்றபாட்டிலும் இந்த இதிஹாஸம் அருளிச்செய்யப்பட்டனமையுங் காண்க.

“எனது அடியாரின் எதிரிகளை ஒருகாலும் க்ஷமிக்கமாட்டேன்“ என்றும், “என்னைச் சரணம் புக்கவரை எவ்விதத்திலும் கைவிடேன்“ என்றும் எம்பெருமான் கொண்டுள்ள ஸங்கல்ப மிரண்டும் மாறுபடாமல் நிறைவேறுமாறு, அப்பெருமான் தன்னைச் சரணமடைந்த ஸுமுகனைத் தான் நேரில் ரக்ஷியாமல் அவனுக்குப் பகையான கருடன் கையிலேயே காட்டிக் கொடுத்து அவனைக் கொண்டே பாதுகாத்தருளிய அருமைத் திறத்தைப் பாராட்டி “அவன்றன் வல்லாகத் தேற்றிய மாமேனி மாயவனுக்கு“ என்றார். முன்பு தமக்குள் பகைமையிருந்தாலும் எம்பெருமானைச் சரணமடைந்தாற் பின்பு அப்பகைமை தவிர்ந்து நண்பராவரென்ற உண்மை இங்குப் புலனாம்.

பாய்த்திரை நீர்ப்பாழி – இந்த உபாக்கியானம் ஸ்ரீமஹாபாரதத்தில் உத்யோகபர்வத்தில் நூறாவது அத்யாயந் தொடங்கி ஐந்து அத்யாயங்களில் பரக்கக் கூறப்பட்டுள்ளது. ஸுமுகன் எம்பெருமானைச் சரணமடைந்தது இந்திரனருகில் என்பதாக அங்குக் கூறப்பட்டுள்ளதனால் ‘பாய்திரை நீர்ப்பாழி‘ என்ற விதற்கு ‘கடல் போலே குளிர்ந்த திருப்படுக்கை‘ எனப் பொருளுரைக்கப்பட்டது. இனி, பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் –“ஓரோயுகத்திலே ஓரோவிடங்களிலே எல்லாம் பிறக்கக் கூடுகையாலே திருப்பாற்கடல் தன்னிலேயாகவுமாம்“ என்று இரண்டாவது நிர்வாஹமாக அருளிச் செய்துள்ளபடி திருபாற்கடலையே பொருளாகக் கொள்ளவுமாம். கல்பபேத்த்ததாலே இது கூடுமென்க.

English Translation

Other than the wonder Lord, my tongue will not praise anyone.  When Garuda's sworn enemy Sumukha clung to the lord's bedstead seeking refuge, the lord gave the serpent into the hands of Garuda himself, -for safe upkeep, -who wore it on his arms.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஏழாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

எட்டாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஒன்பதாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பத்தாம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain