nalaeram_logo.jpg
(2449)

திறம்பேன்மின் கண்டீர் திருவடிதன் நாமம்

மறந்தும் புறந்தொழா மாந்தர் - இறைஞ்சியும்

சாதுவராய்ப் போதுமின்கள், என்றான், நமனும்தன்

தூதுவரைக் கூவிச் செவிக்கு.

பதவுரை

நமனும்

-

யமனும்

தன் தூதுவரை

-

தனது சேவகர்களை

கூவி

-

அழைத்து

செவிக்கு

-

(அவர்களுடைய) காதில் (என்ன சொன்னானென்றால்)

திருவடி தன்

-

ஸர்வேச்வரனுடைய

நாமம்

-

திருநாமத்தை

மறந்தும்

-

மறந்தொழிந்தாலும்

புறம் தொழாமாந்தர்

-

தேவதாந்தர பஜநம் பண்ணாத மனிசர்களைக் (கண்டால்)

திறம்பெல் மின் கண்டீர்

-

(ஓ சேவகர்களே!) (இப்போது நான் உங்களுக்கு இடும் ஆணையைத்) தவறவேண்டா

இறைஞ்சி

-

வணங்கி

சாதுவர் ஆய்போதுமின்கள் என்றான்

-

(கொடுமை தவிர்ந்து) ஸாதுக்களாய் வர்த்திக்களாய் வர்த்திகக்கடவீர்கள் என்று சொன்னான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  “******” ஸ்வபுருஷ மபிவீக்ஷய பாசஹஸ்தம் வததியம கில தஸ்ய கர்ணமூலே –பரிஹர மதுஸூதநப்ரபந்நாந் ப்ரபுரஹ மந்யந்ருணாம் ந வைஷ்ணவாநாம்“ என்கிற ச்லோகத்தைத் தழுவி இப்பாசுரமருளிச் செய்யப்பட்டது. அந்த ச்லோகத்தின் கருத்தும் இந்தப் பாசுரத்தின் கருத்தும் ஒன்றேயென்க.

யமனுடைய தூதர்கள் பாசங்களைக் கையிற்கொண்டு தங்கள் கடமையைச் செலுத்தப் புறப்படும்போது யமன் அத்தூதர்களை யழைத்து, ரஹஸ்யங்கள் சொல்லுமாபோலே காதோடே ஒரு வார்த்தை சொன்னான், அஃதென்னென்னில், ‘ஓ தூதர்களே! நீங்கள் பாகவதர்களிடத்தில் சிறிதும் அதிகாரஞ் செலுத்த வேண்டா, அவர்களருகில் நீங்கள் செல்லவே கூடாது, ஒருகால் அவர்கள் நேர்பட்டால் வணங்கி வலஞ்செய்து பரமஸாத்விகர்களாய் விலகுங்கோள்‘ என்றானாம். இதனால் பாகவதர்கட்கு யமபயப்ரஸக்தியே யில்லையென்றதாம். “அவன்தம ரெவ்வினையராகிலும் எங்கோனவன் தமரே யென்றொழிவதல்லால் – நமன் தமராலாராயப் பட்டறியார்கண்டீர் அரவணைமேற் பேராயற் காட்பட்டார்பேர்“ என்றார் பொய்கையாழ்வார், “கெடுமிடராயவெல்லாம் கேசவா வென்ன நாளுங்கொடுவினை செய்யுங் கூற்றின்தமர்களுங்குறுக கில்லார்“ என்றார் நம்மாழ்வார். “மூவுலகுண்டுமிழ்ந்த முதல்வ! நின்னாமங்கற்ற, ஆவலிப்புடைமைகண்டாய் – நாவலிட்டுழிதாகின்றோம் நமன்றமர் தலைகள்மீதே“ என்றார் தொண்டரடிப்பொடி யாழ்வார். “எத்தியுன் சேவடி யெண்ணியிருப்பாரைப் பார்த்திருந்தங்கு நமன்றமர் பற்றாமல், சோத்தம் நாமஞ்சுதுமென்று தொடாமை நீ, காத்திபோய்க் கண்ணபுரத்துறை யம்மானே!“ என்றார் திருமங்கையாழ்வார். யமன் தூதர்க்குச் சொல்லத் தொடங்கும்போதே “திறம்பேல்மின் கண்டீர்” என்கையாலே ஒருகால் அத்தூதர் ஞாபகப் பிசகினால் பாகவதர்களிடத்தில் தம் அதிகாரத்தைச் செலுத்தினால் தனக்கு மஹத்தான அநர்த்தம் விளைந்திடுமென்கிற அச்சமுள்ளமை வெளிப்படும். கண்டீர் – முன்னிலையசை. திருவடிதன்னாமம் மறந்தும் புறந்தொழா மாந்தர் – ‘அடி‘ என்றும். ‘அடிகள்‘ என்றும் ‘திருவடி‘ என்றும் ஸ்வாமிக்கு வாசகம். ஸர்வஸ்வாமியான எம்பெருமானுடைய திருநாமத்தை..... என்றபடி. “மறந்தும் புறந்தொழா மாந்தர்“ என்னுமிந்த ஸ்ரீஸூக்தியின் போக்யத்தை ஆழ்ந்து ஆநுபவிக்கத்தக்கது. எம்பெருமானுக்கு அடிமைப் பட்டிருந்தாலும் இருக்கலாம். இல்லாமற்போனாலும் போகலாம், தேவதாந்தரங்களிடத்தில் பற்றில்லாமையே முக்கியம், ஒருத்தி தன் கணவனிடத்தில் அன்புகொள்ளாதிருக்கினு மிருக்கலாம், நாளடைவில் ஆநுகூல்ய மேற்படக்கூடும், வேறு புருஷனிடத்தில் அன்புகொண்டால் அவத்யமாகுமே, அது போலவென்க. முமுக்ஷுப்படியில் உகாரார்த்தம் விவரிக்குமிடத்து “அந்யசேஷத்வம் கழிகையே ப்ரதாநம், தேவர்களுக்கு சேஷமான புரோடாசத்தை நாய்க்கிடுமாபோலே ஈச்வரசேஷமான ஆத்ம வஸ்துவை ஸம்ஸாரிகளுக்கு சேஷமாக்குகை. பகவத் சேஷத்வத்திலும் அந்ய சேஷத்வம் கழிகையே ப்ரதாநம், ‘மறந்தும் புற்தொழா மாந்தர்‘ என் கையாலே“ என்றருளிச் செய்த ஸ்ரீஸூக்திகள் இங்குக் குறிக்கொள்ளத்தக்கன.

“மாந்தரை“ என்று சிலர் ஓதுவர்களேனும் அது பாடமன்று, வெண்டளையும் பிறழும். சாதுவர் – வடசொல் “***“ காதோடே ரஹஸ்யமாகக் கட்டளையிடுவானேன்? நாடுநகரமும் நன்கறியப் பேரிரைச்சலிட்டு இங்ஙனே கட்டளையிடலாகதோ? என்னில், ஆகாது ராஜமஹிஷியிடத்தில் காமங்கொள்ளாதே“ என்று ஒருவன் ஒருவனுக்குக் கட்டளையிட வேணுமானால் இது யுக்தமான வார்த்தையேயாகிலும் இவ்வார்த்தையைப் பிறர் செவிப்பட சொல்லலாகாதன்றோ, அதுபோல் அந்த வார்த்தையைத்தான் பலரறிய ஏன் சொல்லலாகாதென்னில், கேண்மின், “ராஜமஹிஷியினிடத்தில் காமங்கொள்ளாதே“ என்னும் போது (“***“) எதிரொளி ராஜமஹிஷினிடத்தில் காமங்கொண்டது வெளிப்படையாகுமே, அது அரசனுக்கு எட்டினால் தலைபோமே.

English Translation

Even Yama the god of death called his messengers aside and whispered, "Make no mistake. The Lord's devotees may even forget his names, but they will never stoop to worship godlings. If you, "See them bow to them with courtesy and leave".

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain