nalaeram_logo.jpg
(2432)

எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான்

தனக்காவான் தானேமற் றல்லால - புனக்காயா

வண்ணனே. உன்னைப் பிறரறியார், என்மதிக்கு

விண்ணெல்லா முண்டோ விலை.

பதவுரை

புனம்

-

தன்னிலத்திலே வளர்கிற

காயா

-

காயாம்பூவினுடைய

வண்ணனே

-

நிறம்போன்ற நிறமுடைய பெருமானே!

எனக்கு

-

(உன்னுடைய நிர்ஹேதுக கடாக்ஷத்திற்குப்பாத்ர பூதனான) எனக்கு

ஆவார் ஆர் ஒருவரே

-

ஒப்பாகுபவர் எவரொருவரிருக்கின்றனர்? (எவருமில்லை)

எம்பெருமான்

-

ஸர்வேச்வரனாகிய நீயும்

தானே தனக்கு ஆவான் அல்லால்

-

தனக்குத் தானே ஒப்பாயிருப்பவனேயன்றி

மற்று

-

எனக்கு ஒப்பாக வல்லையோ?

உன்னை பிறர் அறியார்

-

நான் தவிர வேறொருவரும் உன்னை யறிய மாட்டார்கள்,

என் மதிக்கு

-

(உன்னை நன்றாக அறிந்திருக்கிற) என்னுடைய புத்திக்கு

விண் எல்லாம்விலை உண்டோ

-

மேலுலக மெல்லாம் கூடினாலும் ஒப்பாகப் போருமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தேவரீர் சரமச்லோகத்தி லருளிச்செய்தபடி புறம் புண்டான உபாயங்களை ருசிவாஸநைகளோடே விட்டொழிந்து தேவரீரையே உபாயமாகப்பற்றி நிர்ப்பரனாயும் நிர்ப்பயனாயுமிருக்கிற எனக்கு உபயவிபூதியிலும் ஒப்பாவார் ஆருமில்லை யென்கிறார்.

எனக்கு யானையின்மே லேறவேண்டியவன் அவ்யானையின் காலைப்பற்றியே ஏறவேண்டுவதுபோல உன்னை அடையவேண்டியவன் உன்னையே உபாயமாகப் பற்றித்தான் அடைய வல்லான் என்கிற அநநயோபாயத்வ அத்யவஸாயமுடையேனான எனக்கு என்கை. ஆவார் ஆரொருவரே? – உலகத்திலுள்ளா ரெல்லாரும் ஸ்வப்ரயத்நங்கொண்டே காரியங்கொள்ளப் பார்ப்பவர்களாதலால் என்னுடைய அத்யவஸாயம் ஆர்க்குமில்லை, ஆகவே எனக்கு ஒப்பாவார் ஆருமில்லை. எம்பெருமான் தனக்காவான் தானேமற்றல்லால் – எம்பெருமானும் ‘நானே ஸர்வரக்ஷகன்‘ என்றிருப்பதனால் அவனைப்போன்ற ரக்ஷகன் வேறொருவனு மில்லாமையால் ரக்ஷகத்வத்தில் தனக்குத் தானே ஒப்பாகுமவனேயன்றி, சேஷத்வபாரதந்திரிய காஷ்டையில் நிற்குமெனக்கு ஒப்பாவானல்லன். சேஷியாயிருக்குந் தன்மையிற்காட்டிலும் சேஷபூதனா யிருக்குந்தன்மை சிறந்ததாதலால் அப்படிப்பட்ட அடிமைச்சுவடு எனக்கே அஸாதாரணமாயிருப்பதால் எம்பெருமானிலும் நான் மேற்பட்டவன் என்றவாறு. இப்படி எம்பெருமானது அடிமையிலீடுபட்டு தன் மூலமான செருக்கைக் கொள்ளுதல் அடிக்கழஞ்சு பெறுதலால்தான் “எனக்கினியார் நிகர் நீணிலத்தே“ என்றும் “எனக்காரும் நிகரில்லையே“ என்றும் மற்றையோரு மருளிச்செய்வது. இவ்வஹங்காரம் ஹேயமன்று, உபாதேயமாம். ஸாத்விகாஹங்காரமெனப்படும்.

புனக்காயா வண்ணனே உன்னைப்பிறரறியார் – உபயவிபூதியிலும் தமக்கு ஒப்பாவா ராகுமில்லையென்று முன்னடிகளிற்சொன்னதை உபபாதிப்பன பின்னடிகள். தனக்குரிய நிலத்தில் தோன்றி காயாம்பூவின் நிறம்போன்றழகிய நிறங்கொண்ட பெருமானே! நான் தவிர உன்னை உள்ளபடியறிவாரார்? எல்லாரும் உன்னைக்கொண்டு வேறு புருஷார்த்தங்களை ஸாதித்துக்கொள்ளப் பார்ப்பவர்களேயன்றி உன்னையே ஸகல புருஷார்த்தமுமாகக்கொள்வாராருமில்லையே, உனது வடிவழகிலீடுபடுவாருமில்லையே, உலகத்தாருடைய புத்தியைப் போன்றதோ என்னுடைய புத்தி? மேலுலகத்திலுள்ளார்க்கும் அரிதான புத்தியன்றோ என்னுடையது இப்படி விலக்ஷணமான புத்தியைப்பெற்ற நான் ஒப்பற்றவன் என்னத்தட்டுண்டோ? என்கை.

இந்நிலத்திலுள்ளவர்கள் உன்னையே பரமபிரயோஜநமாகக் கொள்ளாமல் அற்ப்பலன்களை நச்சி அவற்றுக்கு உபாயமாக உன்னைப்பற்றுமவர்களாகையாலே இவர்கள் உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்திலர் அங்குள்ள நித்யஸூரிகளோவென்னில் பலன் கைபுகுந்தவர்களாகையாலே உன்னுடைய உபேயத்வாகாரத்தை அறிந்தவர்களேயன்றி உபாயத்வாகாரத்தைச் சிறிது மறிந்தவர்களல்லர், நானோவென்னில், உன்னையே பரமபுருஷார்த்தமாகக் கொண்டவனாகையாலும் உன்னுடைய உபாயோபேய த்வாகாரங்களிரண்டையும் நன்கறிந்தவனாகிறேன், ஆகையாலே எனக்கு உபயவிபூதியிலும் நிகரில்லை – என்றது நன்கு பொருந்தும்.

English Translation

Who is my companion but the Lord, who is his own, without a peer or superior?  O Kaya-hued Lord! Nobody knows you as I do. Can the whole sky be a price for my mind?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain