nalaeram_logo.jpg
(2425)

கொண்டு குடங்கால்மேல் வைத்த குழவியாய்,

தண்ட அரக்கன் தலைதளால்- பண்டெண்ணி,

போம்குமரன் நிற்கும் பொழில்வேங் கடமலைக்கே,

போம்குமர ருள்ளீர் புரிந்து.

பதவுரை

குமரர் உள்ளீர்

-

கிளரொளியிளமை கெடாமலிருப்பவர்களே!

பண்டு

-

முன்பொருகால்

குடங்கால் மேல்

-

மடியிலே

கொண்டு வைத்த குழவி ஆய்

-

எடுத்து வைக்கும் சிறு குழந்தையாய்க் கொண்டு

போம்

-

அந்தர்த்தான மடைந்தவனான

குமரன்

-

நித்யயுவாவான எம்பெருமான்

நிற்கும்

-

நிற்றுமிடமான

தண்டம் அரக்கண்

-

தண்டிக்கத் தகுந்தவனான இராவணனுடைய

தலை

-

பத்துத் தலைகளையும்

தாளால்

-

திருவடியாலே

எண்ணி

-

கீறி எண்ணிக் காட்டிவிட்டு

பொழில் வேங்கடம் மலைக்கே

-

சோலைகள் சூழ்ந்த திருமலைக்கே

புரிந்துபோம்

-

ஆசைகொண்டு செல்லுங்கோள்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை முதல் திருவந்தாதியில், “ஆமேயமரக்கறிய“ என்ற நாற்பத்தைந்தாம் பாட்டிலும், முன்றாந்திருவந்தாதியில் “ஆய்ந்தவருமறையோன்“ என்ற எழுபத்தேழாயம் பாட்டிலும் பொய்கையாழ்வாராலும் பேயாழ்வாராலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. முன்பு இராவணன் தனது பத்துத் தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ்சென்று வரம் வேண்டிக் கொள்ளுமளவில் எம்பெருமான் ஒரு சிறு குழந்தைவடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து “இவன் பத்துத் தலைகளையுடைய இராவணன் காண், ஸ்வஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உன்னை வஞ்சித்து வரம்வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான். இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்“ என்று தெரிவிப்பவன் போன்று தன் திருவடியால் அவ்விராவண்ணுடைய பத்துத் தலைகளையும் எண்ணிக் காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இக்கதை இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை; பெரியாழ்வார் திருமொழியில் “சீமாலிகனவனோடு தோழமைக் கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலை கொண்டாய்“ (2-7-8) என்றும், “எல்லியம் போதினி திருத்தலிருந்த தோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மேரடையாளம்“ (3-10-2) என்றும் அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல் ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை யென்று நம் பூருவாசாரியர்கள் நிர்வஹித் திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்ட தென்று பெரியோர் கூறுவர். இனி இதற்கு இதிஹாஸ புராணங்களில் ஆகா முண்டேல் கண்டு கொள்க விரிவும் வல்லார் வாய்க் கேட்டுணர்க.

இப்படிப்பட்ட எம்பெருமான் நின்றருளும் திருவேங்கடமலைக்கே விரும்பிச் சென்று சேருங்கள் என்றாராயிற்று. வயது முதிர்ந்த பின்பு * தண்டுகாலா யூன்றித் தள்ளிநடக்கும் முதுமையில் திருமலையை நெஞ்சால் நினைக்கவும் முடியாதாதலால் கிளரொளியிளமை கெடுவதன் முன்ன திருமலைக்குப் போகவேணுமென்கிறார் ‘குமர்ருள்ளீர்!‘ என்ற விளியால்.

English Translation

When the Rakshasa Ravana performed penance and appeared before Brahma for boons, the ford appeared as a Child sitting on Brahma's lap, and counted his ten heads with his ten toes, He resides in fragrant bowered venkatam, Go to, when you are still in your youth, with love.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain