nalaeram_logo.jpg
(2420)

அழைப்பன் திருவேங் கடத்தானைக் காண,

இழைப்பன் திருக்கூடல் கூட, - மழைப்பே

ரருவி மணிவரன்றி வந்திழிய, யானை

வெருவி யரவொடுங்கும் வெற்பு.

பதவுரை

திருவேங்கடத்தானை

-

திருவேங்கடமுடையானை

காண

-

கண்ணால் ஸேவிக்க

அழைப்பன்

-

வாய்விட்டுக் கூப்பிடா நின்றேன்

வரன்றி வந்து இழிய

-

திரட்டிக்கொண்டு வந்து இழிய (அச்சு ரத்னங்களின் ஒளியைக்கண்டு அக்நிஜ்வாலைகளாக ப்ரமித்து)

யானை

-

யானைகளானவை

வெருவி

-

பயப்பட்டு நிற்கவும்

அரவு

-

மலைப் பாம்புகளானவை

மழை

-

மழைபோல் சொரிகின்ற

பேர் அருவி

-

பெரிய அருவிகளானவை

மணி

-

அங்குமிங்குங் கிடக்கிற) ரத்னங்களை

ஒடுங்கும்

-

(அந்த ரத்னங்களை மின்னலாக மயங்கி) புற்றிலே சென்று மறையவும் பெற்ற

வெற்பு

-

திருமலையை

கூட

-

சென்று கூடவேணுமென்று

திருக்கூடல் இழைப்பன்

-

கூடலிழைக்கின்றேன்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தவர்கள் எக்கேடு கெடினும் கெடுக, என்னுடைய போழுதுபோக்கு நல்லதாகவே யிருக்கப்பெற்றேன் என்கிறார். திருவேங்கடமுடையானை ஸேவிக்கப்பெற வேணுமென்றும் திருமலையிலே நித்யவாஸம் பண்ணப்பெற வேணுமென்றும் இதுவே எனக்கு ஆவலாயிருக்கின்ற தென்கிறார்.

இழைப்பன் திருக்கூடல் – கூடலிழைத்தலாவது – வட்டமாகக் கோடுகீறி அதற்குள்ளே சுழிசுழியாகச் சுற்றும் சுழித்து இரண்டிரண்டு சுழியாகக் கூட்டிப் பார்க்கும்போது இரட்டைக்கணக்காக முடிவுபெற்றால் கூடுகை, ஒற்றைக்கணக்காக முடிவுபெற்றால் கூடாமை என்று ஒரு ஸங்கேதம் ஏற்படுத்திக்கொண்டு குறிபார்க்கையாம். சகுனம்பார்க்கும் வகையில் இஃது ஒருவகை, இது கூடல், கூடலிழைத்தல், கூடல்வளைத்தல், கூடற்குறி இத்யாதி நாமங்களால் வழங்கப்பெறுமென்ப. நாச்சியார் திருமொழியில் நான்காந்திருமொழியில் (தெள்ளியார் பலர்) ஆண்டாளனுட்டித்ததாமிது. பகவத் ஸம்ச்லேஷத்திலே ஆவலுள்ளபடியைக்கூறும் முறைகளிலே இதுவொருமுறை என்னுமிவ்வளவே உணரத்தக்கது.

கூடலிழைத்தல் பெண்டிர்க்கே உரியதென்றும், இங்கு “இழைப்பன் திருக்கூடல்“ என்று ஆழ்வாரருளிச்செய்தது நாயகீ ஸமாதியில் என்றும் அழகிய மணவாளச்சீயர் அருளிச்செய்வர்.

பின்னடிகட்கு இரண்டுவகையாகக் கருத்துரைக்கலாம், மலையருவிகளில் மணிகள் பளபளவென்று ஜ்வலித்துக்கொண்டு உடன் விழுகின்றவனவாம், அவற்றை யானைகள் கண்டு ‘இவை கொள்ளிவட்டம்‘ என்று ப்ரமித்து அஞ்சிச்சிதறுகின்றனவாம். பாம்புகளோவென்னில், அந்த ரத்னங்களை மின்னலாக ப்ரமித்து அஞ்சிப் புற்றிலேசென்று ஒடுங்குகின்றனவாம், ஆக இப்படி அஸ்தாநே பயசங்கை பண்ணுதற்கு இடமான திருமலையைக்கூடக் கூடலிழைப்பன் என்கை. அன்றியே, அருவிகளில் விழுந்த ரத்னங்களைக்கண்ட யானைகள் “இவை கொள்ளிவட்டம்“ என்று ப்ரமித்து ஒடப்புக்கவாறே மலைப்பாம்பின் வாயிலே விழும்படியாயின என்னவுமாம்.

சில மலைப்பாம்புகள் யானையைப்பார்த்து அஞ்சி நடுங்கி ஓடிப் போய்விடுமென்றும், பல மலைப்பாம்புகள் யானையை அணுகி விழுங்கிவிடுமென்றும் தமிழ்நூல்களால் தெரிகின்றது. “திரையன்பாட்டு“ என்ற  ஓர் பழையநூலில் – “கடுங்கண்யானை நெடுங்கை சேர்த்தி, திடங்கொண்டறைதல் திண்ணமென்றஞ்சிப், படங்கொள் பாம்பும் விடாகம்புகூஉம், தடங்கொள் உச்சித்தாழ்வரை யடுக்கத்து“ என்றதனாவ் மலைப்பாம்பு யானையைக்கண்டு அஞ்சி யொளிக்குமென்பது தெரிகின்றது.

“ஞால்வாய்க்களிறு பாந்தட்பட்டெனத், துஞ்சாத்துயரத்தஞ்சுபிடிப்பூசல், நெடுவரை விடரகத்தியம்பும், கடுமான் புல்லிய காடிறந்தோரே“ என்று சங்க நூல்களுள் ஒன்றான நற்றிணையிலும், “பரியகளிற்றை அரவுவிழுங்கி மழுங்க விருள்கூர்ந்த, கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே“ என்று தேவாரத்திலும், “இடிகொள் வேழத்தை எயிற்றொடு மெடுத்துடன் விழுங்கும், கடியமாசுணங் கற்றறிந்தவரென வடங்கிச் சடைகொள் சென்னியர் தாழ்விலர் தாமிதித்தேற்ப,- படிகடாமெனத்தாழ்வரை கிடப்பனபாராய்“ என்று கம்பராமாயணத்திலும் உள்ள பாட்டுக்களால் மலைப்பாம்பு யானையை விழுங்குமென்பது தெரிகின்றது. அஞ்சியோசித்தல் சிறுபான்மையும், விழுங்குதல் பெரும்பான்மையுமோ யிருக்குமென்ப. யானை வெருவவும், அரவு ஒடுங்கவும் பெற்ற மலை, என்பது முதல் யோஜனை பதவுரை, யானையானது வெருவி அரவின் யிலே ஒடுங்கப்பெற்ற மலை என்ப்து இரண்டாவது யோஜனையின் பதவுரை.

English Translation

The Ocean-hued lord reserves the six schools of thought for those who do not have the heart to call to him. But they incur his displeasure, neither their gods nor their prayers will be of any avail.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain