nalaeram_logo.jpg
(2419)

அகைப்பு இல் மனிசரை ஆறு சமயம்

புகைத்தான், பொரு கடல் நீர் வண்ணன்,உகைக்கு மேல்,

எத் தேவர் வாலாட்டும், எவ்வாறு செய்கையும்,

அப்போது ஒழியும் – அழைப்பு.

பதவுரை

அகைப்பு இல் மணிசரை

-

உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை

ஆறு சமயம்

-

(நீ சங்களான) ஆறு மதங்களில்

புகைத்தான்

-

புகும்படி செய்தவனும்

பொரு கடல் நீர் வண்ணன்

-

அலையெறிகின்ற கடல் நீர்போன்ற திருநிறத்தை யுடையவனுமான ஸர்வேச்வரன்

உகைக்கும் ஏல்

-

உதாஸீநனா யிருந்து விடும் பக்ஷத்தில்

அப்போது

-

அப்போதே

எத் தேவர் வாலாட்டும்

-

எந்த தேவர்களுடையவும் அஹங்காரமும்

எவ்வாறு செய்கையும்

-

எவ்விதமான (பஜ்ஞம் முதலிய) காரியங்களும்

அழைப்பு

-

(தேவதைகளின்) ஆஹ்வாகமும்

ஒழியும்

-

ஒழிந்து போய்விடும்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்மொழியில் (1-1-5) “அவரவர் தமதம தறி வறி வகை வகை, அவரவரிறைய ரெனவடியவர்களட, அவரவரிறையவர் குறைவிலரிறையவர், அவரவர் விதிவழியடைய நின்றனரே“ என்ற பாசுரத்தின் பொருளைத் தெரிந்துகொண்டபின் இப்பாட்டின் பொருள் நன்கு நெஞ்சிற்பதியும். அப்பாசுரத்தின் கருத்தாவது – பலவகைப் பயன்களை விரும்புகின்ற உலகத்தவர்கள் தங்கள் தங்கள் ருசிக்குத் தக்கபடி பிரமன் சிவன் இந்திரன் என்றுள்ள பலபல தெய்வங்களை ஆச்ரயிக்கின்றனர், அத்தெய்வங்கள் இவர்கள் விரும்பிய பலன்களைக் கொடுக்கக் குறையில்லை, ஏனென்றால், ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணன் அத்தெய்வங்களுக்கு அந்தர்யாமியாயிருப்பதனாலே அந்த மாஹத்மியத்தினால் அத்தெய்வங்கள் பலன்கொடுக்கும் சக்தியுடையனவாக ஆய்விடுகின்றன. என்கை. ஆகவே எம்பெருமானுடைய ஆவேசத்தினால் தான் ஸாமாந்ய தெய்வங்களெல்லாம் தங்களைப் பற்றின அபேக்ஷகர்களுக்கு அந்தந்த ப்ரயோஜனங்களை யளிக்கின்றன வென்றதாயிற்று.

ஒரு அர்த்தத்தை அந்வயமுகத்தால் சொல்லுவதென்றும் வ்யதிரேகமுகத்தால் சொல்லுவதென்றும் இரண்டு படிகளுண்டு. ‘அரசன் கொடுத்தால் நாம் உண்ணலாம்‘ என்றாற்போலே சொல்லுவது அந்வய முகத்தால் சொல்லுவதாம், ‘அசன் கொடாவிடில் நாம் உண்ணமுடியாது‘ என்றாற்போலே சொல்லுவது வயதிரேக முகத்தாற் சொல்லுவதாம். கீழெடுத்துக்காட்டிய திருவாய்மொழிப் பாசுரத்திற் சொன்ன கட்டளை அந்வயமுகமாகும். இப்பாட்டிற் சொல்லுகிற கட்டளை வ்யதிரேகமுகமாகும். எம்பெருமானுடைய ஆவேசத்தினால்தான் தேவதாந்தரங்கள் பலனளிக்கின்றன. என்று திருவாய்மொழிப் பாசுரத்திற்சொல்லிற்று, எம்பெருமான் ஆவேசியாவிடில் ஒரு தெய்வமும் ஒரு பலனையும் அளிக்கவல்லதாகமாட்டாது என்கிறது இப்பாட்டில்.

இப்பாட்டிற்கு ப்ரதாநப்ரமேயம் பின்னடிகளே, முன்னடிகள் விசேஷணமாத்ரம். எம்பெருமான் எப்படிப்பட்டவனென்றால், அகைப்பில் மனிசரை ஆறுசமயம் புகைத்தான் – ஆறுசமயங்களாவன – சாக்யர் உலூக்யர் அக்ஷபாதர் க்ஷபணர் கபிலர் பதஞ்ஜலி என்னும் அறுவரால் பிரவர்த்திப்பிக்கப்பட்ட மதங்கள். இவை அவைதிகங்க ளெனப்படும். உஜ்ஜீவிக்கமாட்டாத மனிசர்களை இந்த பாஹ்ய குத்ருஷ்டி மதங்களில் புகுவித்தானாம் எம்பெருமான். இவ்விடத்தில் “போற்றிமற்றோர் தெய்வம் பேணப் புறத்திட்டுமையின்னே, தேற்றிவைத்தது எல்லீரும் வீடு பெற்றாலுலகில்லை யென்றே“ (4-10-6) என்ற திருவாய்மொழிப் பாசுரத்தின் பொருள் அநுஸந்திக்கத்தகும்.

உகைக்குமேல் – உகைத்தலாவது உபேக்ஷித்தல், தேவதாந்தரங்களிடத்தில் தான் ஆவசியாத பக்ஷத்தில் என்றபடி.

எத்தேவர் வாலட்டும் – பிரமன் உலகங்களைப் படைத்தானென்றும், சிவன் திரிபுரடிமரித்தானென்றும், இந்திரன் வ்ருத்ராஸுரவதம் பண்ணினானென்றும் இப்படி பல தெய்வங்களைக் குறித்துப் பேசுவமெல்லாம் தெரியுமே, எம்பெருமான் அநுப்ர வேசித்திராவிடில் ஒரு தெய்வமாவது ஒரு காரியமாவது செய்திருக்கமுடியுமோ? என்றவாறு. ‘வாலாட்டும்‘ என்றது உலக வழுக்கச்சொல்லின் அநுகாரம் அஹங்காரப்படுகிறவனே ‘வாலாட்டுகிறான்‘ என்பது வழக்கம்.

எவ்வாறு செய்கையும் – அந்தணர்கள் யஜ்ஞயாகங்களை அநுஷ்டித்து “***“ என்றிப்படி சொல்லி ஹவிஸ்ஸை யளிப்பதெல்லாம் அந்தர்யாமித்வேந எம்பெருமானை உத்தேசித்தேயன்றோ, அந்த இந்திரன் முதலிய தெய்வங்களில் எம்பெருமான் உள்ளுறைகின்றிலனாயின் அத்தெய்வங்களை நோக்கி ‘ஸ்வாஹா ஸ்வாஹா‘ என்று சொல்லி செய்வது ஒன்றுமில்லையாகும் என்கை.

English Translation

The ocean-hued lord reserves the six schools of thought for those who do not have the hert to call to him. But if they incur his displeasure, neither their gods nor their prayers will be of any avail.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain