nalaeram_logo.jpg
(2416)

தாளால் உலகம் அளந்த அசைவேகொல்,

வாளா கிடந்தருளும் வாய்திறவான், - நீளோதம்

வந்தலைக்கும் மாமயிலை மாவல்லிக் கேணியான்,

ஐந்தலைவாய் நாகத் தணை.

பதவுரை

நீன் ஓதம்

-

பெரிய அலைகள்

வந்து அலைக்கும்

-

கரையிலேவந்து வீசப்பெற்ற

மா மயிலை

-

மயிலாபுரிக்கு அடுத்த

மா வல்லிக் கேணியான்

-

திருவல்லிக்கேணியில் நித்யவாஸம் பண்ணுகிறஸர்வேச்வரன்

ஐ தலை வாய் நாகத்து அணை

-

ஐந்து தலைகளையும் ஐந்து வாய்களையும்டையானான திருவனந்தாழ்வானாகிற படுக்கையிலே

வாளா

-

வெறுமனே

கிடந்தருளும்

-

சயனித்திரா நின்றான்

வாய் திறவான்

-

வாய்திறந்து ஒன்று மருளிச்செய்வதில்லை

(இப்படியிருப்பதற்குக் காரணம்)

தாளால்

-

திருவடியாலே

உலகம் அளந்த அசவேகொல்

-

உலகங்களை அளந்ததனுலுண்டான ஆயாஸமோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தஸாரதிப் பெருமாளாக நின்ற திருக்கோலமாய் ஸேவைஸாதிப்பது தவிர, நாகத்தணைக்கிடந்த பெருமானாக ஸேவைஸாதிக்கிற திருக்கோலமும் உண்டாகையாலே அந்த திவ்யமங்கள விக்ரஹத்தி லீடுபட்டுப் பேசுகிறபாசுரம் இது.

அர்ச்சாவதாரங்களில் எம்பெருமான்கள் நிற்பதும் இருப்பதும் கிடப்பதும் ஒருபடிப்பட்டே யிருக்குமேயன்றி ஒருநாளும் மாறமாட்டாதென்பதும் ஒருநாளும் சோதிவாய் திறந்து பேசியருள்வதில்லை யென்பதும் ஆழ்வார்கட்குத் தெரிந்திருக்கச் செய்தேயும் கரைபுரண்ட ப்ரேமத்தின் கனத்தினால் அர்ச்சாவதார ஸமாதியையும் குலைத்துப் பரிமாறப் பார்ப்பர்கள், நம்மாழ்வார் திருவாய்மொழியில் “கொடியார்மாடக் கோளுரகத்தும் புளிங்குடியும், மடியாதின்னே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேல் இப்படிதான் நீண்டுதாவிய அச்வோ பணியாயே“ (8-3-5) என்றும் “கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலங்கிடத்தி உன் திருவுடம்பசையத், தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழிவருந் தொண்டரோக்கருளித், தடங்கொள் தாமரைக் கண்விழித்து நீயெழுந்துன் தாமரை மங்கையும் நீயும், இடங்கொள் மூவுலகுந் தொழவிருந்தருளாய் திருப்புளிங்குடிக் கிடந்தானே!“ (9-2-3) என்றும் அழகாகப் பேசினார். இவ்வாழ்வாழ்வார் தாமும் திருச்சந்த விருத்தத்தில் “நடந்தகால்கள் நொந்தவோ?... காவிரிக்கரைக் குடந்தையுள், கிடந்தவாறெழுந்திருந்து பேசுவாழி கேசனே!“ என்றார். அப்படியே இப்பாசுரத்திலும் – சோதிவாய் திறந்து ஒரு வார்த்தையும் அருளிச்செய்ய மாட்டாமல் நெடுங்காலமாகவே அரவணையின்மேல் ஏகரீதியாக எம்பெருமான் பள்ளி கொண்டிருக்கிறானே! காடும் மேடும் கல்லும் காடுமான பூமியை முன்பொருகால் அடியிட்டு அளந்தருளின தாலுண்டான ச்ரமம் இன்னுமு ஆறவில்லைபோலும், என்கிறார். பேசாதே வாளாகிடந்தருள்வதும் நீர்க்கரையைப் பற்றிக் கண்வளர்ந்தருள்வதும் ஆயாஸத்தின் மிகுதியினால் என்றிருக்கிறார் போலும்.

“அயர்வு“ என்பது “அசவு“ என மருவிற்றென்ப. “அசைவு“ என்பாருமுளர்.

திருவல்லிகேணி யென்பது, தொண்டைமான் சக்ரவர்த்தியின் பிரார்த்தனையின்படியே திருவேங்கடமுடையான் கண்ணனாகத் தனது குடும்பத்தோடு ஸேவைஸாதித்த தலம். இத்தலத்துப் புஷ்கரிணி அல்லிப்பூக்கள் நிறையப் பெற்றதனால் கைரவிணியென்று வடமொழியிலும் திருவல்லிக்கேணி யென்று தென்மொழியிலும் பெயர்பெறும். இந்தப் புண்ணிய தீர்த்தத்தின் பெயரை இத்தலத்திற்குப் பெயராயிற்றென்றுணர்க. இது மயிலையை அடுத்திருக்கிறபடியால் “மாமயிலை மாவல்லிக்கேணி“ எனப்பட்டது.

English Translation

The Lord who resides in Mayilal-Tiruvallikkeni by the sea, reclines on a five-hooded serpent in the ocean, without speaking or moving. Why could he be tired from measuring the Earth?

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain