nalaeram_logo.jpg
(2414)

அடிச்சகடம் சாடி யரவாட்டி, ஆனை

பிடித்தொசித்துப் பேய்முலை நஞ்சுண்டு - வடிப்பவள

வாய்ப்பின்னை தோளுக்கா வல்லேற் றெருத்திறுத்து,

கோப்பின்னு மானான் குறிப்பு.

பதவுரை

(எம்பெருமான்)

குறிப்பு

-

(அடியாரைக் காத்தருள வேணுமென்கிற) திருவுள்ளத்தினால்

அடி

-

திருவடியாலே

சகடம்

-

சகடாஸுரனை

சாடி

-

ஒழித்தும்

அரவு

-

காளியநாகத்தை

ஆட்டி

-

வாலைப்பிடித்து ஆட்டிக் கொழுப்படக்கியும்

யானை

-

குவலயாபீட மென்னும் யானையை

பிடித்து

-

பற்றிக்கொண்டு

பின்னைக்கா

-

நப்பின்னைப் பிராட்டிக்காக

வல் ஏறு

-

கொடிய ரிஷபங்களினுடைய

எருத்து

-

முசுப்பை

ஒசித்து

-

கொம்பை முறித்தொழித்தும்

பேய்

-

பூதனையென்னும் பேய்ச்சியினுடைய

முலை

-

முலையில் தடவியிருந்த

நஞ்சு

-

விஷத்தை

உண்டு

-

அமுது செய்து அவளாயிரை மாய்த்தும்

வடி பவளம் வாய் தோளி

-

அழகிய பவளம் போன்றவாயையும் தோளையும்டையளான

இறுத்து

-

முறித்தொழித்தும்

பின்னும் கோ ஆனான்

-

தன்னுடைய சேக்ஷித்வத்தை நிலைநிறுத்திக் கொண்டான்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுக்கு ஏற்கனவே ஈச்வரத்வம் இருந்தாலும் அவதரித்துப் பண்ணின சில ஆனைத் தொழில்களால் அந்த ஈச்வரத்வம் நன்னர் நிலைநிறுத்திக் கொள்ளப்பட்டதென்று சில சேஷ்டிதங்களைப் பேசியநுபவிக்கிறார்.

அடிச்சகடம்சாடி – நந்தகோபர் திருமாளிகையில் ஸ்ரீ கிருஷ்ணசிசுவை ஒரு வண்டியின் கீழ்ப்புறத்திலே தொட்டிலிலிட்டு கண்வளர்த்திய சோதை யமுனை நீராடப் போயிருந்த காலத்து, கம்ஷனாலேவப்பட்ட அஸுரனொருவன் அச்சகடத்தில் வந்து ஆவேசித்துத் தன்மேல் விழுந்து தன்னைக் கொல்ல முயன்றதையறிந்த திருவடிகளை மேலேதூக்கி யுதைத்து அச்சகடத்தைச் சிந்நபிந்த மாக்கினனென்க.

அரவாட்டி – ஒருநாள் கிருஷ்ணன் கன்றுகளை ஒட்டிக்கொண்டு ஒருவரும் ஸஞ்சரியாத வழியே போகத் தொடங்க, மற்றுள்ள இடைப்பிள்ளைகள் அழைத்து “க்ருஷ்ணா! அவ்வழி நோக்க வேண்டா, அவ்வழியிற் சென்றால் யமுநாநதியில் ஓர் மடுவில் இருந்துகொண்டு அம்மடு முழுவதையும் தன் விஷாக்நியினாற் கொதிப்படைந்த நீருள்ளதாய்ப் பானத்துக்கு அநர்ஹமாம்படி செய்த காளியனென்னுங் கொடிய ஐந்தலை நாகம் குடும்பத்தோடு வாஸஞ்செய்துகொண்டு அணுகினவர்களனைவரையும் பிணமாக்கி விடுவதால் நாங்கள் அஞ்சுகின்றோம்“ என்ன, அதைக்கேட்ட கண்ணபிரான் உடனே அக்காளிய நாகத்தைத் தண்டிக்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டு அம்மடுவிற்குச் சமீபத்திலுள்ளதொரு கடம்பமரத்தின்மேலேறித் துவைத்து நர்த்தனஞ் செய்து நசுக்கி வலியடக்குகையில், மாங்கலிய பிக்ஷையிட்டருள வேண்டுமென்று தன்னை வணங்கி பிரார்த்தித்த நாக கன்னிகைகளின் விண்ணப்பத்தின்படி அந்தக் காளியனை உயிரோடு கடலிற்சென்று வாழும்படி விட்டருளினன் என்க. அரவு ஆட்டி எனப் பதம் பிரித்ததுபோல “அர வாட்டி“ எனவும் பிரிக்கலாம், “குறியதன்கீழ் ஆக்குறுகலும் அதனோடு, உகரமேற்றலும் இயல்வுமாம் தூக்கின்“ என்ற நன்னூற் சூத்திரமுணர்க.) அர-காளியநாகத்தை, வாட்டி – வலியடக்கி, என்கை.

யானை பிடித்தொசித்து – வில்விழவுக்கென்று கம்ஸனால் அழைக்கப்பட்டு மதுரைக்கு எழுந்தருளின கண்ணபிரான் கம்ஸன் அரண்மனையை நோக்கிச் செல்லுகையில் அவ்வரண்மனை வாயில் வழியில் தன்னைக் கொல்லும்படி அவனால் ஏவி நிறுத்தப்பட்டிருந்த குவலயாபீடமென்னும் மதயானை சீறிவர, கண்ணபிரான் அதனை யெதிர்த்து அதன் தந்தங்களிரண்டையும் சேற்றிலிருந்து கொடியை எடுப்பதுபோல எளிதிற்பறித்து அவற்றையே ஆயுதமாகக்கொண்டு அடித்து அவ்யானையையும் யானைப்பாகனையும் உயிர் தொலைத்திட்டன்னென்க.

பேய்முலை நஞசுண்டு – பூதனை யென்னும் ராக்ஷஸி கம்ஸனேவுதலால் நல்ல “பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையை உண்ணக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தன்னென்க.

வல்லேற்றெருத்திறுத்து – நப்பின்னைப் பிராட்டியை மணம் புணர்வதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம்பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டன்னென்க.

ஆக இப்படிப்பட்ட விரோதி நிரஸநத் தொழில்கள் செய்து தன்னுடைய ஈச்வரத்வத்தை ஸ்திரப்படுத்திக்கொண்டா னெம் பெருமான் என்றாராயிற்று.

English Translation

He drank the ogress poison breast, smote a cart with his foot, danced on a snake, killed rutted elephant, killed seven bulls for the coral lipped Nappinnai's embrace, and become a king, Note these.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain