nalaeram_logo.jpg
(2410)

உகப்புருவன் தானே ஒளியுருவன் தானே,

மகப்புருவன் தானே மதிக்கில், - மிகப்புருவம்

ஒன்றுக்கொன் றோசனையான் வீழ, ஒருகணையால்

அன்றிக்கொண் டெய்தான் அவன்.

பதவுரை

மிக

-

மிகவும்

புருவம் ஒன்றுக் கொன்று ஓசனையான்

-

ஒரு புருவத்துக்கு ஒரு புருவம் காதவழி நீளமிருக்கப் பெற்ற கும்பகாணன்

வீழ

-

ஒழியும்படியாக

அன்றிக் கொண்டு

-

சீறிக்கொண்டு

ஒரு கணையால்

-

ஒரு பாணத்தினால்

எய்தானவன்

-

அடித்து முடித்தவனான இராமபிரானை

மதிக்கில்

-

சிந்தித்தால்

உகப்பு உருவன் தானே

-

மநோஹரமான திருமேனியையுடையவன் அவனே

ஒளி உருவன் தானே

-

தேஜோமயமான திருமேனியை யுடையவனும் அவனே,

மகப்பு உருவன் தானே

-

மிகவும் ஆச்சரியமான வடிவையுடையவனும் அவனே.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பேசி அநுபவிக்கிறார். உகப்புருவன்தானே கண்டவர்கள் எல்லாரும் உகக்கும்படியான திருவுருவத்தை உடையவன் என்கை. “தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழற்கமலமன்ன தாள்கண்டார் தாளேகண்டார் தடக்கை கண்டாரு மஃதே“ (கம்பராமாயணம்.) என்றது காண்க. அன்றியே, நம்மைப்போல் கருமங்காரமாக சரீரங்களைப் பரிக்ரஹிக்கையன்றியே “***“ என்கிறபடியே தானே திருவுற்றமுகந்து பரிக்ரஹித்துக் கொள்ளப்பட்ட வடிவையுடையவன் என்றுமாம்.

ஒளியுருவன் தானே – 1. “குழுமித்தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்கிற படியே தேஜஸ்புஞஜமே வடிவெடுத்த தென்னலாம்படியான உருவையுடையவன்.

மகப்புருவன் – “***“ (மஹாத்புதம்) என்ற வடசொல் “மகப்பு“ எனச் சிதைந்தது, மிகவும் அற்புதமான உருவத்தை யுடையவன் என்றபடி. இப்படிப்பட்டவன் யாவனென்னில், இராமபிரானென்கிறது பின்னடிகளால். கும்பகர்ணனுடைய புருவங்களின் இடைவெளி ஒரு காதவழி யுள்ளதுபற்றி “புருவ மொன்றுக்கொண்றோசனையான்“ என்று அவனுக்குப் பெயரிடப்பட்டது. “யோஜநா“ என்னும் வடசொல் ஓசனை எனத் திரிந்தது.

English Translation

With his eyebrow-like bow and hot arrows, he killed the mighty fall kumbhakarna. His eyebrows are sweet to contemplate, his face is charming, his frame radiant.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter

Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain