nalaeram_logo.jpg
(2405)

நிகழ்ந்தாய் பால்பொன் பசுப்புக் கார்வண்ணம்

நான்கும் இகழ்ந்தா யிருவரையும் வீயப் - புகழ்ந்தாய்

சினப்போர்ச் சுவேதனைச் சேனா பதியாய்

மனப்போர் முடிக்கும் வகை.

பதவுரை

பால் பொன் பசுப்பு கார் நான்கு வண்ணமும்

-

வெண்மை சிவப்பு பசுமை கறுப்பு ஆகிய நான்கு வர்ணங்களையும்டையனாய்க் கொண்டு

நிகழ்ந்தாய்

-

(நான்கு யுகங்களிலும்) அவதரித்தாய்

இருவரையும்

-

மதுகைடபர்களாகிற இரண்டு அசுரர்கள்

வீய

-

தொலையும்படி

இகழ்ந்தாய்

-

வெறுத்தாய்

சேனாபதி ஆய்

-

அர்ஜுநனுடைய ஸேனைக்கு ரக்ஷகனாய்க் கொண்டு

மனம்

-

த்ரௌபதியின் கூந்தலை முடிப்பிக்க வேணுமென்று) மநோரதங் கொண்டிருந்த படியே

போர்

-

பாரதயுத்தம்

முடிக்கும் வகை

-

தலைக்கட்டும்படி

சினம் போர் சுவேதனை

-

சீறிக்கொண்டு யுத்தத்தில் இழியும் ஆண்புலியான அர்ஜுன்னை

புகழ்ந்தாய்

-

கொண்டாடினாய்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- க்ருதம் முதலிய யுகங்களிலே சேதநர் தமது ஸத்வம் முதலிய குணங்கட்குத் தகுதியாக வெண்மை முதலிய வர்ணங்களை விரும்புகையாலே அவ்வக் காலங்களிலே அந்தந்த நிறங்களைப் பரிக்ரஹித்து முகங்காட்டுகிறபடியை முதலடியிற் பேசுகிறார். கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காக எம்பெருமான் பால்போன்ற நிறத்தைக் கொள்வன், த்ரேதா யுகத்திலே சிவந்த திருநிறத்தைக் கொள்வன், த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வன், கலியுத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தைக் கொள்வன் என்க. இவ்வாழ்வார் திருச்சந்த விருத்தத்திலும் “பாலினீர்மை செம்பொனீர்மை பாசியின் பசும்புறம், போலுநீர்மை பொற்புடைத்தடத்துவண்டு விண்டுலாம், நீலநீர்மை யென்றிவை நிறைந்த காலநான்குமாம்“ என்றருளிச் செய்த பாசுரம் காண்க.

இருவரையும் வீய இகழ்ந்தாய் – மதுகைடபரென்னும் இரண்டு அஸுரர்களையும் ஒழித்தாய் என்கை. அன்றியே, 1. “கொல்லாமாக்கோல் கொலை செய்து பாரதப்போர், எல்லாச்சேனையு மிருநிலத்து அவித்த வெந்தாய்“ என்கிறபடியே கௌரவர் பாண்டவர் ஆகிற இருவகுப்பிலுமுள்ள சேனைகளையும் தொலைத்தமையைச் சொல்லுகிறதாகவுங் கொள்வர். பாண்டவ பக்ஷத்திலும் ஸேனைகளைத் தொலைத்ததுண்டோவென்று கேட்பர் சிலர், 1. “கொல்லாமாக்கோல்“ என்ற பாசுரத்தின் வியாக்கியானத்திலே – “பாரதஸமரத்திலே துர்வர்க்கமடையத் திரண்டதிறே உபயஸேலையிலும், இங்கே நாலைந்துபேரும் அங்கே ஒன்றிரண்டு பேருமொழிய முடித்துப் போகட்டானாயிற்று.“ என்றருளிச் செய்யப்பட்டுள்ளது காண்க. பஞ்ச பாண்டவர்களையும் அச்வத்தாம, க்ருபாசார்ய, க்ருதவர்மாக்களையும் தவிர்த்து மற்றெல்லாவற்றையும் தொலைத்து மண்ணின்பாரம் நீக்கின்னென்க.

“உற்றாரையெல்லா முடன்கொன் றரசாளப் பெற்றாலும் வேண்டேன் பெருஞ்செல்வம்“ என்று சொல்லிப் போரொழிந்த அர்ஜுநனுக்குக் கீதையை உபதேசித்து அவனைப் போர்புரிய உடன்படுத்தின்னாதலால் புகழ்ந்தாய் சினப்போர்ச்சுவேதனை எனப்பட்டது. சுவேதன் – ச்வேதவாயுநன் என்றபடி. வெள்ளைக் குதிரை பூண்டதேரை வாஹனமாகவுடையன் என்கை. வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்க கொடித் தேர்மிசை முன்பு நின்று“ என்ற பெரியாழ்வார் திருமொழி காண்க.

English Translation

O Lord! You appear as white, red, yellow and black respectively during the four Yogas, but heartily disown the Gunas of the Rajas, red, and Tarmas, black, in the war of hatred, you become the General and encouraged the white associated Arjuna of Sattvic temperament to become angry and fight the war.

உள்ளடக்கம்

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு

பெரியாழ்வார் திருமொழி

முதற்பத்து
திருமொழி - 2, திருமொழி - 3, திருமொழி - 4,
திருமொழி - 5, திருமொழி - 6, திருமொழி - 7,
திருமொழி - 8, திருமொழி - 9, திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து

நான்காம் பத்து

ஐந்தாம்பத்து

திருமொழி - 4,

திருப்பாணாழ்வார்

மதுரகவியாழ்வார்

திருமங்கையாழ்வார்

பெரிய திருமொழி

முதற்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

இரண்டாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

மூன்றாம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

நான்காம் பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10

ஐந்தாம்பத்து
திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8, திருமொழி - 9,
திருமொழி - 10.

ஆறாம்பத்து

ஏழாம்பத்து

எட்டாம்பத்து

ஒன்பதாம்பத்து

பத்தாம்பத்து

பதினோராம்பத்து

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,
திருமொழி - 4, திருமொழி - 5, திருமொழி - 6,
திருமொழி - 7, திருமொழி - 8.

திருக்குறுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2.

திருநெடுந்தாண்டகம்

திருமொழி - 1, திருமொழி - 2, திருமொழி - 3,

நம்மாழ்வார் ||

திருவாய்மொழி

வருகை பதிவு

அறிமுகம்

உள்ளடக்கம்

இணைப்புகள்

Follow us on

எங்களைப் பற்றி
தள அறிமுகம்
அறிவிப்பு
கடிதங்கள்

தொடர்பு
பிரபந்தம்
திவ்ய தேசங்கள்
கதைகள்
கட்டுரைகள்

பக்தி இலக்கியம்
வைணவ இணைய தளங்கள்
வலைப் பூக்கள்

Facebook
Twitter 
 
Sitemap | Disclaimer
© Dravida Veda | All rights reseved
Web Design - Purple Rain